![]() | |
| HTN-NEWS.COM ...Da Tamil E-Magazine Contact.....16-07-2009 Home | |
|
உலக செய்திகளின் சங்கமம்
| |
|
|
ஈரான் விமானம் தூள் தூள் : 168 பயணிகள் பரிதாப பலி
தொழில் நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்க முயற்சிக்கும் போது, எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம். இருந்தாலும், விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவில்லை. கறுப்புப் பெட்டியைக் கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. ஈரான் தேசிய ஜூடோ அணி வீரர்கள் எட்டு பேர் இதில் பயணம் செய்தனர்; அவர்களும் பலியாகி விட்டனர் என்றனர். கண்ணி வெடி அகற்ற இந்திய வீரர்கள் 500 பேர் இலங்கை பயணம்
இலங்கையில் போர் நடந்த பகுதிகளில் விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட கண்ணி வெடிகள் இன்னும் அகற்றப்படாமலேயே உள்ளன. இதனால் பொதுமக்களை அவர்கள் குடியிருந்த பகுதிக்கு அனுப்புவதில் இலங்கை அரசு காலதாமதப்படுத்தி வருகிறது. சிறந்த நாயகன் -கமல்ஹாசன் சிறந்த நாயகி -சிநேகா
இசையருவி தொலைக்காட்சி நடத்திய "தமிழ் இசை விருதுகள்' விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் 2008-ம் ஆண்டுகான சிறந்த கதாநாயகனாக கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களுக்கு திரைத் துறையைச் சார்ந்த பலர் கலந்துக் கொண்டு விருதுகளை வழங்கினார்கள். மைக்கேல் ஜாக்சன் கொல்லப்பட்டார் போலீஸ் கருத்து
பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணத்தை `கொலை' என லாஸ் ஏஞ்சல்ஸ் நகர போலீஸ் துறை கருதுவதாக `டிஎம்இசட்.காம்' என்ற கேளிக்கை இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, ஜாக்சனின் கடைசி நிமிடங்களில் அவருக்கு மருந்து கொடுத்த டாக்டர் கான்ராட் முர்ரே மீது போலீசாரின் சந்தேகப் பார்வை விழுந்துள்ளது. சம்பவத்தன்று, `புரோபோபோல்' என்ற மயக்க மருந்தை டாக்டர் முர்ரே கொடுத்ததுதான், ஜாக்சனின் மரணத்துக்கு காரணமாகி விட்டது என போலீசார் கூறியதாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது. விபசார விடுதிகளுக்கு சைக்கிளில் வரும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி
ஜெர்மனியில் விபசாரத்தொழிலுக்கு சட்டப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அங்கு விபசார விடுதிகள் வெளிப்படையாக செயல்பட்டு வருகின்றன. பெர்லின் நகரில் உள்ள ஒரு விபசார விடுதி, சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மிகுந்த அக்கரை கொண்டு உள்ளது. அது கார் போன்ற வாகனங்களை பயன்படுத்துவதால் அதில் இருந்து கிளம்பும் புகை காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால்,சைக்கிளில் வரும் வாடிக்கையாளர்களுக்கு கட்டணத்தில் தள்ளுபடி கொடுத்து உள்ளது. |
| மேலதிக செய்திகளுக்கு இங்கே அழுத்தவும் | |
|
[C] Copyright www.Htn-news.com 2004-2009 Contact |
|