www.Htn-News.com    dA Tamil E-Magazine       Contact ..... Updated 30-03-2009

 

   Your Ad Here

      Vote for HTN-Tamil news

அமெரிக்க குழந்தைகளை விட இந்திய சீன குழந்தைகள் திறமையாக படிக்கின்றனர்

அமெரிக்க குழந்தைகளை விட இந்திய மற்றும் சீன குழந்தைகள் படிப்பதில் அதிக திறமையுடன் இருக்கின்றனர். அவர்களை விட அதிக வசதிகள் இருந்தும் அமெரிக்க குழந்தைகள் படிப்பில் பின்தங்கியுள்ளனர்என்கிறார் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா. லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ஒபாமா பேசுகையில்;

 

தேர்தலில் யாருடன் அணி என்பதை அறிவிக்க இன்னும் 3 நாள் : சூறாவளி பிரசாரத்தில் விஜயகாந்த் தகவல்

நான் அடையாளம் காட்டுபவர்களுக்கு ஓட்டளியுங்கள். வரும் 26ம் தேதி தெளிவான முடிவை அறிவிக்கிறேன்' என, காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரசாரத்தை துவக்கிய தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார். தமிழக அரசியலில் யார் யாருடன் கூட்டணி, எந்தக் கட்சி அணிமாறப் போகிறது என்ற பரபரப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதில், தி.மு.க., - காங்கிரஸ் அணியில், தே.மு.தி.க., சேரும் பேச்சு நடப்பதாகக் கூறப்பட்ட நேரத்தில்,

மூச்சுவிட மட்டும் அனுமதித்து மொத்த சுதந்திரத்தையும் முடக்கிப்போடும் வவுனியா வதை முகாம்கள்: ஆனந்த விகடன்

ஈ, காக்காகூட உள்ளே நுழைய முடியாத கோட்டைச்சுவர்,அதைச் சுற்றிலும் இரும்பு முள்வேலிகளை மொத்தமாக சுருட்டிப் போட்டிருப்பார்கள். அரண்மனைகளைச் சுற்றிலும் அகழிகள் இருப்பது மாதிரியான, இரும்பு அகழிகள் இவை. தப்பிக்கவோ தெரியாத்தனமாக விழுந்தாலோ உடம்பைக் கிழித்துவிடும். அதற்குள் விழுந்தவரை உயிரோடு எடுக்க முடியாது. சிறுசிறு டென்ட்டுகள். இரவோ பகலோ தமிழ் மக்கள்

ஜேர்மன் பாடசாலை துவக்குச் சூட்டில் 8 மாணவர்கள் உட்பட 10 பேர் பலி

ஜேர்மனியின் தென்பகுதியில் உள்ள வின்னேன்டன் நகரிலுள்ள அல்போட்டிவில்லே தொழில்நுட்பக் கல்லூரியிலேயே நேற்று புதன்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்றுக் காலை 9.30 மணியளவில் கறுப்பு நிற உடையுடன் பாடசாலை வளாகத்துள் நுழைந்த ஆயுததாரி அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம்: அமைச்சர்களுக்கு மகிந்த உத்தரவு

மக்களின் வாக்குகளை கவரும் நோக்கத்துடன் அமைச்சர்கள் பொதுக்கூட்டங்களில் அவசியமின்றி கலந்து கொள்வதை தவிர்த்தல் வேண்டும். சரியான பாதுகாப்புக்கள் இன்றி பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு ஆபத்துக்களில் சிக்க வேண்டாம் என நான் முன்னரும் அமைச்சர்களை எச்சரித்திருந்தேன்.

பேசாலையில் ஆயுததாரிகள் பெண்களுடன் தவறாக நடக்க முயற்சி – அயலவர்களால் விரட்டியடிப்பு

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு பேசாலையிலுள்ள வீட்டில் தாய், தந்தை மற்றும் இரு மகன்கள் இரண்டு மகள்மார் உறக்கத்தில் இருந்தவேளை அங்கு சென்ற ஆயுதம் தரித்த சிலர் வீட்டை சோதனையிட வேண்டும் எனக்கூறி கதவைத் திறக்குமாறு கோரியுள்ளனர். 

 

யாழில் கட்டிட ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக மக்களை மிரட்டும் ஈ.பி.டி.பியினர்

சிறீலங்கா படைகளுடன் இணைந்து இயங்கும் ஆயுதக்குழுக்களில் ஒன்றான ஈ.பி.டி.பி, யாழ்ப்பாணத்திலுள்ள கட்டிட ஒப்பந்தகாரர்கள் மற்றும் அரச குத்தகைகளை பெற்றுள்ள தனியார் ஆகியோருக்கு தொடர்ந்தும் உயிர் அச்சுறுத்தல் விடுத்து வருவதாக, யாழ் கட்டிட ஒப்பந்தகாரர் சங்கத்தின் பிரமுகர் ஒருவர்  யாழ் செய்தியாளருக்கு தெரிவித்துள்ளார். 

வணங்கா மண்" பிரித்தானியாவில் இருந்து உணவுக்கப்பல் முல்லைத்தீவை நோக்கி பயணம் !

பிரித்தானியாவின் பல பாகங்களில் உணவு சேமிப்பு நிலையங்கள் விரைவில் திறக்கப்படவுள்ளது. இங்கு உலர் உணவுப்பொருட்களை மக்கள் சென்று வழங்கமுடியும். உடைகள் மற்றும் இலங்கைத் தயாரிப்பான உணவு வகைகளை தவிர்க்குமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்த கப்பலை நிவாரண கப்பல் என்று கூறாது "வணங்கா மண்" என பெயரிட்டதன் காரணம், உலகநாடுகளால் புறக்கணிக்கப்பட்டு இலங்கை இராணுவத்தின் கொடூரமான எறிகணைத் தாக்குதல்,

உண்ணாவிரதம் இருந்ததால் மருந்து பொருள் அனுப்பினார்களா? ஜெயலலிதா சொல்வது நல்ல நகைச்சுவை: கருணாநிதி அறிக்கை

அது மாத்திரமல்ல, ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார் என்றவுடன், உடனடியாக 25 தொன் மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் தயார் செய்து, விமானமும் ஏற்பாடு செய்து அன்றைய தினமே ஒரு அரசின் சார்பில் அனுப்புவது என்பது சாத்தியக் கூறான காரியமா? ஜெயலலிதா இவ்வாறு தன்னால்தான் என்று கூறிக் கொள்வது நல்ல நகைச்சுவையாக இல்லையா?

புதுக்குடியிருப்பில் நான்கு முனை நகர்வுகள் முறியடிப்பு: 450 படையினர் பலி! 1272 படையினர் காயம்!

புதுக்குடியிருப்பில் சிறீலங்காப் படையினர் முன்னெடுத்த பாரிய முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 450 படையினர் பலியாகியுள்ளனர். மேலும் 1272 படையினர் காயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

3,30,000 பேரில் 30,000 பேருக்கு உணவு கிடைக்கின்றது. ஏனையோர் பட்டினியில் - மேலதிக அரச அதிபர்

இடம்பெயர்ந்த மக்கள் தினமும் உணவு தொடர்பாக கோரிக்கை விடுத்துவருவதாகவும் அதற்கு பதில் கொடுக்க முடியவில்லை. சிறார்கள், கர்ப்பணித் தாய்மார், வயோதிபர்கள், உணவுயின்றி மிகவும் பரிதாபமாக பசியினால் வாடுகின்றார்கள். இவர்கள் மிக விரைவில் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வன்னியில் ஏற்பட்டுள்ள பட்டினியை போக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

எதிர்வரும் வாரத்துக்குள் நான்காவது ஈழப்போரின் முடிவு தெரிந்து விடும்: சிறிலங்கா படைத்தரப்பு

படையினரின் தாக்குதல்களை எதிர்கொள்வதில் விடுதலைப் புலிகள் பலத்த நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். எனவே, அவர்கள் பாரிய ஊடறுப்பு தாக்குதல்களை மேற்கொள்ளலாம். விடுதலைப் புலிகள் தற்போது 45 சதுர கி.மீ. பரப்பளவிற்குள் முடக்கப்பட்டுள்ளனர்.

நீண்ட நாட்கள் தாக்குப் பிடிக்கக்கூடிய விடுதலைப் புலிகளின் அணிகள் ஊடுருவியுள்ளன: 'லக்பிம' வார ஏடு

சுண்டிக்குளம் கடற்கரை பகுதியின் தென்பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர், தனது காவலரணில் இருந்து கடற்கரை பக்கமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.03.09) நள்ளிரவு சென்றிருந்தார்.

மகளிர் தினம்: விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி யில், ஆண் பிள்ளைகளுக்கு கிடைக் கின்ற வாய்ப்புகள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், பெண் பிள்ளைகளுக்கு கிடைப் பதில்லை. பெண்களை பெருமைப் படுத்திய வரலாறு தமிழ் சமுதாயத்திற்கு உண்டு.

 

உடம்பு குறைய டாக்டரின் ஆலோசனைப்படி இலங்கை தமிழர்களுக்காக 10-ந்தேதி உண்ணாவிரதம் : ஜெயலலிதா அறிவிப்பு

இலங்கை தமிழர்களுக்காக 10-ந்தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த மத்திய அரசு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநில அரசும் அதற்கு உடந்தையாக இருக்கிறது .

நீ கள வைத்திய சாலை அமைக்கவும் வேண்டாம் உனது ராணுவத்தை அனுப்பவும் வேண்டாம்.சிங்கள அரசிற்கு ராணுவ உதவிகளை செய்யாமல் இருந்தால் போதுமடா சாமி!!!

இவற்றுடன் அந்த களவைத்திய சாலைக்கான 30 மில்லியன் இந்திய ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து பொருட்களை இந்திய வான் படைக்கு சொந்தமான இரண்டு வானூர்திகளின் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

வன்னி மக்களைக் காப்பாற்ற எங்களால் எதுவுமே செய்யமுடியாது - நெதர்லாந்து

மேலும், மகிந்த அரசானது உணவையும் மருந்தையும் வன்னி மக்களிற்கு செல்லவிடாமல் தடுத்துள்ளதையும் இதனால், வன்னியிலுள்ள மக்கள் பலர் பட்டினியால் இறந்துள்ளதாகவும் பலர் பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ளதால், அவசர மனிதாபிமான உதவிகளான உணவு, மருந்துகளை இம்மக்களிற்கு உடன் அனுப்புவதற்கு உதவிபுரியுமாறும் இம்மாணவர்களால் கேட்கப்பட்டபொழுது,

சார்க் அமைப்பிலிருந்து இலங்கையை இடை நிறுத்த வேண்டும் : பிரிட்டிஷ் எம்.பிக்கள் வலியுறுத்து

தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழு என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில், லண்டன்வாழ் தமிழர்கள் கலந்து கொண்டதாகவும் பி.பி.சி செய்தி சேவை மேலும் குறிப்பிட்டுள்ளது. தமது தொகுதி மக்களின் உறவினர்கள் இலங்கையில் இன்னல்களைச் சந்திப்பதனாலேயே

பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கட் அணி மீது துப்பாக்கிப் பிரயோகம்: 6 வீரர்கள் காயம்

இந்தத் தாக்குதலில் இலங்கை கிரிக்கட் அணியின் 6 வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.இச்சம்பவத்தில் காயமடைந்த வீரர்கள் திலான் சமரவீர, தாரங்க பரணவித்தான, அஜந்த மெண்டிஸ், குமார் சங்ககார ,மஹேல ஜெயவர்தன மற்றும் துணை பயிற்றுவிப்பாளர் ஆகியோர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி மீதான துப்பாக்கி பிரயோகம் குறித்து ஜனாதிபதி கண்டனம்

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானமை கண்டிக்கத்தக்கதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.நல்லெண்ணத் தூதுவர்களாக பாகிஸ்தான் சென்ற இலங்கைக் கிரிக்கெட் அணியினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வித்தியாதரன் கைது செய்யப்பட்ட விதம் அருவருக்கத் தக்கது: ஆனந்தசங்கரி கண்டனம்

அவர்கள் எழுதுவது அத்தனையும் எமக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். இருப்பினும் உண்மையை வெளிப்படுத்தி பாரபட்சமற்ற செய்திகளை பிரசுரிப்பது வரவேற்கத்தக்கதாகும். பத்திரிகை ஆசிரியர் தான் சேகரிக்கும் செய்தி வந்த வழி பற்றிய இரகசியத்தை காப்பாற்றவேண்டிய தார்மீகப் பொறுப்புடையவர் என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முழு பெண்ணாக மாறிய அரவாணி

அரசு பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து, பெண்ணாக மாறிய அரவாணியை சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். நீலகிரி மாவட்டம், ஊட்டியைச் சேர்ந்தவர் சுவாதி (22). அரவாணியான இவர் பெண்ணின் முகபாவத்தை கொண்டிருந்ததோடு, பெண் இயல்பு கொண்டவராக இருந்தார். இவர் பெண்ணாக மாறுவதற்கு ஆசைப்பட்டு, அரசு பொது

சிறைக்கு அஞ்ச மாட்டேன்...விஜய டி.ராஜேந்தர் ஆவேசம்!

சார்... சும்மா டெஸ்ட் டெலிகாஸ்ட் இது. இதையே இரண்டு மாசத்திலே இருபது லட்சம் பேர் பார்த்திருக்காங்க. எப்படி சினிமாவிலே ஒரு சாதனையை செஞ்சேனோ, இந்த வெப் டிவியிலேயும் என்னோட சாதனை தொடரும்' ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக பேச ஆரம்பித்தார் விஜய.டி.ராஜேந்தர். இவர் புதிதாக துவங்கியிருக்கும் குறள்டிவிஇன்போ.காம் குறித்துதான் இந்த பெருமிதம்.

 

உலக வெப்பநிலை அதிகரிப்பு; தெற்காசியா மோசமாக பாதிக்கப்படும் அபாயம்

அத்துடன் மேற்கு இந்தியாவின் கரையோரப்பகுதிகள் இலங்கை மியான்மாரில் மழைக்காலம் நீண்ட நாட்களுக்கு தாமதமாகுமெனவும் கடுமையான வெள்ள அபாயம் ஏற்படும் என்றும், மழைவீழ்ச்சியில் கணிசமான அதிகரிப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

23 முறை திருமணம் செய்து கின்னஸ் சாதனை 24 ஆவது திருமணத்திற்கும் தயாராகும் மூதாட்டி

இண்டியானாவின் அலெக்சாண்டிரியாவை சேர்ந்தவர் லிண்டா உல்ப். தற்போது வயது 68. முதல் முறையாக தனது 16 வயதில் திருமணம் செய்து கொண்டார். திருமண உறவில் கொண்ட அதீத ஆர்வத்தால், அடுத்தடுத்து கணவர்களை மாற்றத் துவங்கினார். இதுவரை 23 பேரைத் திருமணம் செய்துள்ளார். முதல் முதலாக செய்த திருமணம் தான் அதிக காலம் நீடித்தது. ஏழு ஆண்டுகள் வரைகணவருடன் குடும்பம் நடத்தினார்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசின் அனைத்து துரோகத்துக்கும் கருணாநிதி உடந்தை: வைகோ குற்றச்சாட்டு

இரண்டாம் உலகப் போரின் போது, யூத இனத்தையே பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு, படுகொலைகள் நடத்தியதுபோல், இலங்கையில் சிங்கள இனவாத அரசின் கொலைகார அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, தமிழ் இனத்தையே கருவறுக்க முனைந்து, இராணுவத்தின் மூலம் தமிழர்களைக் கொன்று குவிக்கிறான். இந்த தமிழர் இன அழிப்பு இராணுவத் தாக்குதலுக்கு முழுக்க, முழுக்க ஆயுத உதவி செய்தது இந்திய அரசுதான்.

சீனா, ரஷ்யா, வியட்நாம் நாடுகளின் ஆதரவுள்ளவரை இந்தியா, மேற்குலக நாடுகளின் பேச்சைக் கேட்க தயாரில்லை - சம்பிக்க

இலங்கை இறையாண்மை கொண்ட சுயாதீனமான நாடு எமது பிரச்சினையில் தலையிட இந்தியாவுக்கோ அல்லது வேறெந்த மேற்குலக நாடுகளுக்கோ அதிகாரமில்லை எனசுற்றுச் சூழல் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் தொடரும் கைதுகள் இன்று காலை பெரியார் திக தலைவர் கொளத்தூர் மணி கைது

இதனால் விசாரணை செய்வதற்காக அதிகாலை 3 மணியளவில் திண்டுக்கல் காவல்துறையினர் கொளத்தூர் மணி வீட்டுக்கு வந்தனர்.அப்போது அவர், நான் ஓய்வு எடுக்கவேண்டியிருக்கு. காலை 7மணிக்கு வாருங்கள் என்று சொல்லியனுப்பினார். கொளத்தூர் மணியை விசாரனைக்கு அழைத்து செல்லவிருக்கும் விடயம் அவரது ஆதரவாளர்களுக்கு தெரியவர அதிகாலை முதலே அவர் வீட்டுமுன் குவிந்துவிட்டனர்.

தமிழனாக பிறந்ததில் சந்தோஷம் : ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் .ரகுமான்

தமிழனாக பிறந்து இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்ததாக ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் .ரகுமான் தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள சேரிப்பகுதியான தாராவி பகுதியை மையமாக வைத்து ஸ்லம்டாக் மில்லியனர் படம் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர் .ரகுமான் பணியாற்றினார். படத்தின் சவுண்ட் இஞ்ஜினியராக கேரளாவைச் சேர்ந்த ரெசூல் பூக்குட்டி பணியாற்றினார்.

வங்கதேச ராணுவ வீரர்கள் திடீர் புரட்சி : உயர் அதிகாரிகளை சுட்டு வீழ்த்தினர்

ஊதிய உயர்வு அளிப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி, வங்கதேச எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் நேற்று திடீர் கலவரத்தில் ஈடுபட்டனர். துணை ராணுவப் படை தலைமையகத்தில் இருந்த சக அதிகாரிகள் மீது, அதிரடியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், துணை ராணுவப் படை அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கை ஊடாக இந்தியாவுக்குள் ஐ.எஸ்.ஐ. ஊடுருவும் அபாயம்

பாகிஸ்தானின் உளவுத்துறை நிறுவனமான ஐ.எஸ்.ஐ. (Inter - services Intelligence) இலங்கை ஊடாக இந்தியாவுக்குள் ஊடுருவும் அபாயமிருப்பதாக இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார். இந்திய பாராளுமன்றத்தின் மேல் சபையான ராஜ் சபாவில் நேற்று புதன்கிழமை உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய அரசாங்கத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் - ஜாதிக ஹெல உறுமய

இலங்கையில் பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் ஏட்பட்ட இழப்புக்களுக்கான நீதிமன்றம் செல்லப்போவதாக ஜாதிக ஹெல உறுமயவின் மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தள்ளார்.அக்காலப்பகுதியில் ஏற்பட்ட இழப்புக்களை ஆராய்ந்து மதிப்பீடு செய்வதற்காக குழுவொன்றையும் நியமிக்கப்படவுள்ளதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் மேல்மாகாணசபை வேட்பாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

 

 

 

  Home                                     [C] Copyright www.Htn-news.com 2004-2009       Contact

::Welcome to Globe7