Home

 

                                  www.Htn-news.com ........dA Tamil E-Magazine             Contact                       

 

 

  

             

      

                            காலிஃப்ளவர் வறுவல்

தேவையானப் பொருட்கள்

  • காலிஃப்ளவர் -அரைகிலோ அளவு
  • வெங்காயம்-இரண்டு
  • இஞ்சி-ஒரு துண்டு
  • பூண்டு-இரண்டு பற்கள்
  • மிளகாய்த்தூள்-அரைதேக்கரண்டி
  • மஞ்சத்தூள்-கால் தேக்கரண்டி
  • பச்சைமிளகாய்-இரண்டு
  • கடுகு-ஒரு தேக்கரண்டி
  • சீரகம்-அரைதேக்கரண்டி
  • கொத்தமல்லி-ஒரு பிடி
  • எண்ணெய்-கால் கோப்பை
  • உப்புத்தூள்-ஒரு தேக்கரண்டி

செய்முறை

  • காலிஃப்ளவரை சற்று பெரிய பூக்களாக நறுக்கிக் கழுவி கொள்ளவும். இஞ்சி பூண்டை நசுக்கி வைக்கவும்.
  • வெங்காயம், பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
  • வாயகன்ற சட்டியில் எண்ணெயை காய வைத்து கடுகு சீரகத்தை போட்டு வெடிக்கவிடவும்.
  • பிறகு வெங்காயத்தைப் போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கவும்.பிறகு இஞ்சி பூண்டு பச்சைமிளகாயைப் போட்டு நன்கு வதக்கி பூக்களை போட்டு நன்கு கிளறி விடவும்.
  • பிறகு உப்புத்தூளுடன் மிளகாய்த்தூள், மஞ்சத்தூளையும் சேர்த்து தூவி நன்கு கிளறி விடவும்.
  • அடுப்பின் அனலை குறைத்து வைத்து தண்ணீர் ஊற்றாமல் மூடிப் போட்டு வேகவிடவும்.பத்து நிமிடம் கழித்து நன்கு கிளறி விடவும்.
  • பூக்கள் முக்கால் பங்கு வெந்திருந்தால் போதுமானது. பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி கிளறி விட்டு இறக்கி விடவும்.

        

                                             

                               

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 

 

            

 
 
 

       Home                                [C] Copyright 2004-2006 www.Htn-News.com       contact