|
பாம்பே
ஜிலேபி
தேவையான பொருட்கள்:
மைதா கால் லிட்டர்
சீனி முக்கால் லிட்டர்
டால்டா அல்லது நெய் அரை லிட்டர்
தயிர் 2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி 1 சிட்டிகை

செய்முறை:
முதல் நாள் இரவே, மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்துக்
கட்டியாகக் கரைத்து வைத்துக் கொள்ளவும். காலையில்,
சீனியை கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சி இறக்கி வைத்துக்
கொள்ளவும்.பின் வாணலியில் டால்டாவைக் காய வைத்து பிசைந்து
வைத்திருக்கும் மாவில் ஒரு கரண்டி எடுத்து ஜாங்கிரி
பிழிவது போல பிழிந்து எடுத்து சீனிப் பாகில் போட்டு
எடுக்கவும்.
மைசூர் பாகு
தேவையான பொருட்கள்:
கடலை மாவு 1 கோப்பை
சர்க்கரை இரண்டரை கோப்பை
நெய் 2 கோப்பை
செய்முறை:

கடலை மாவை லேசாக
வறுத்துக் கொள்ளவும். நெய்யை அடுப்பில் வைத்து சுட வைத்துக்
கொள்ளவும். சர்க்கரையை கால் டம்பளர் தண்ணீர் ஊற்றி
அடுப்பில் வைத்துப் பாகு வைக்கவும்.கம்பிப் பாகு வந்ததும்
பாகில் சிறிது சிறிதாக மாவு சேர்த்துக் கிளறவும். அடுப்பை
மிதமான சூட்டில் வைத்து, நெய் சேர்த்துக் கிளறவும்.
நெய்யும், மாவும் மாறி மாறி சேர்த்துக் கிளறவும்.இது
பொங்கி பூத்து வரும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டிச்
சமப்படுத்தவும். ஆறிய பிறகு துண்டுகள் போடவும்.
|