Home

 

                                  www.Htn-news.com ........dA Tamil E-Magazine             Contact         18-11-06              

 

  

             

                      யாழ்பாண கூழ் (5பேருக்கு)  

                 

         



தேவையான பொருட்கள்:

சிறு நண்டு-10
இறால் 250 கிராம்
சிறிய மீன் தலை 5
மரவள்ளி கிழங்கு 250 கிராம்
பயத்தங்காய் 100 கிராம்
பலாக்கொட்டை 150 கிராம்
புளி எலுமிச்சை உருண்டை அளவு
ஒடியல் மா 250 கிராம்
தேவையான அளவு உப்பு
செத்தல் மிளகாய் 5
அத்துடன் சிறிதளவு மிளகு,மல்லி,பூடு,இஞ்சி

செய்முறை

ஒரு பானையில் நண்டு,இறால்.மீன் தலை ஆகியவற்றை சுத்தம் செய்து
போடவும்.அத்துடன் பலாக் கொட்டையை தோல் நீக்கி இரண்டாக நறுக்கி போடவும்.மரவள்ளி கிழங்கை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக்கி பானையில் போடவும்.பயத்தங்காயை சிறு தண்டுகளாக நறுக்கி போடவும்.தேவையான அளவு தண்ணீர் உப்பு ஆகியவற்றையும் பானையில் இட்டு நன்றாக கொதிக்க விடவும்.

பானையில் இட்ட பொருட்கள் அனைத்தும் நன்கு வெந்ததும் செத்தல் மிளகாய்,மிளகு,இஞ்சி,பூடு ஆகியவற்றை நன்கு பசை போல அரைத்து
பானையில் இடவும்.புளியையும் கரைத்து வடிகட்டியப பின் பானையில் இடவும்.
5 நிமிடத்திற்கு பின் ஒடியல் மாவை நன்றாக கரைத்து பானையில் இட்டு நன்றாக கலக்கவும்.இப்பொழுது சுவையான யாழ்பாண கூழ் தயார்.

குறிப்பு: காப்போத்தில் பனங்கள்ளு அடிச்சிட்டு கூழ் குடிச்சா பெஸ்டு கண்ணா பெஸ்டு.

உடுப்பிட்டி உலகநாதன்

 

                   

                               

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 

 

            

 
 
 

       Home                                [C] Copyright 2004-2006 www.Htn-News.com       contact