Home

 

                                  www.Htn-news.com ........dA Tamil E-Magazine             Contact                       

 

  

             

                    அன்னாசிப்பழ பொங்கல்

                 

             

தேவையானப் பொருட்கள்

  • மிகவும் பொடியாக நறுக்கப்பட்ட அன்னாசிப்பழம் - 1 கப்
  • பச்சரிசி - 2 கப்
  • சீனி - 1 கப்
  • திராட்சை - அரை கப்
  • முந்திரிப்பருப்பு - கால் கப்
  • பால் - 2 கப்
  • தண்ணீர் - 4 கப்
  • தேங்காய்த்துருவல் - அரை கப்
  • ஏலப்பொடி - 1 ஸ்பூன்
  • குங்குமப்பூ - 2 சிட்டிகை
  • பைனாப்பிள் எஸென்ஸ் - 1 ஸ்பூன்
  • உப்பு - 1 சிட்டிகை
  • நெய் - கால் கப்

செய்முறை

  • பாலையும் தண்ணீரையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
  • கொதி வந்ததும் அரிசியைச் சேர்த்து குங்குமப்பூவும் சேர்த்து சிறு தீயில் குழைய வேக வைக்கவும்.
  • தனியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி நெய்யை ஊற்றவும்.
  • திராட்சை, முந்திரிப்பருப்பு, தேங்காய்த் துருவல்-இவைகளை ஒவ்வொன்றாய் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
  • அதே வாணலியில் அன்னாசிப்பழத்துண்டுகளைப் போட்டு சிறிது நீர் சேர்த்து அவை நன்கு வெந்ததும் சீனியைச் சேர்த்து கெட்டியானதும் இதை சாதம் நன்கு குழைந்து வெந்து வரும்போது அதனுடன் சேர்க்கவும்.
  • உப்பு, ஏலப்பொடி, எஸென்ஸ், வறுத்த பொருட்களைச் சேர்க்கவும். சிறுதீயில் வைத்து கிளறவும்.
  • எல்லாம் ஒன்று சேர்ந்து வந்ததும், தேவையானால் சிறிது நெய்யை ஊற்றிக் கிளறி இறக்கவும்.

               

                               

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 

 

            

 
 
 

       Home                                [C] Copyright 2004-2006 www.Htn-News.com       contact