 |
|
HTN-NEWS.COM ...Da Tamil E-Magazine
Contact.....11-11-2007
Home |
|
|
|

|
குருபெயர்ச்சி ராசிபலன் (11.11.2007)
(குருபகவான் 16-11-07, காலை 4.34 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு
ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனால் ஏற்படும் பலன்கள் கணிக்கப்பட்டுள்ளன. )

கன்னி
உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2
தோற்றப்பொலிவின் மூலமாக மற்றவர்களை வசீகரிக்கும் கன்னிராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார். தனது
5, 7, 9 பார்வையால் ராசிக்கு 8, 10, 12 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். ஏழரைச்சனியின்
துவக்கத்தில் உங்கள் ராசி இருந்தாலும், குருவின் பார்வை சில அனுகூலங்களையும்
தரும். வாழ்வில் வளர்ச்சிபெற மனதில் லட்சியத்தை உருவாக்கிக் கொள்வீர்கள்.
இனிமையாகப் பேசுவதால் பிறரின் நல் அன்பைப் பெறலாம். ஆன்மிக உரையாடலில் நாட்டம்
வளரும்.
கண்களின் பாதுகாப்பில் கவனம் வேண்டும். இளைய சகோதரரின் விருப்பத்திற்கு
மாறாக எந்த செயலையும் செய்யக்கூடாது. வீட்டிற்கு உறவினரின் வருகை அதிகரிக்
கும். அவர்களை நல்ல முறையில் உபசரிப்பதால், எதிர்காலத்தில் உதவிகள் கிடைக்கும்.
தாயின் எண்ணத்தை நிறைவேற்றுவதால் குடும்ப ஒற்றுமை பலம் பெறும். புத்திரர்கள்
பெற்றோரின் சூழ்நிலை அறிந்து செயல் படுவர். அவர்களின் தேவையை பெற்றோர்
நிறைவேற்றுமளவுக்கு பணவசதி இருக்கும். குலதெய்வ வழிபாட்டைக் குறைவின்றி நடத்துவதால்
பலநலன் களும் பெற சந்தர்ப்பம் உருவாகும்.
சொத்து தொடர்பான ஆவணத்தை பிறர் பொறுப்பில் தரக்கூடாது. உடல்நலத்தில் பாதிப்பு
ஏற்படலாம் எனினும், நல்ல பழக்க வழக்கமும் ஊட்டச்சத்து உணவும் பாதிப்பைத்
தடுக்கும். எதிரிகள் உங்களை விட்டு விலகிப் போவதுடன், உங்களுக்கு கொடுத்த
தொந்தரவிற்காக வருந்துவர். கணவன், மனைவி ஒற்றுமையில் பாதிப்பு இருக்கத்தான்
செய்யும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கருத்து வேறுபாட்டை குறைக்கும்.
நண்பர்களிடம் பணம் கொடுக்கல், வாங்கலில் தகுதிக்கு மீறிய பரிவர்த்தனை
எதுவும் கூடாது. வழக்கு விவகாரங்களில் அனுகூல தீர்வு பெறுவீர்கள். தந்தைவழி
உறவினரிடம் குடும்ப விஷயங்கள் பற்றி பேசும் சமயங்களில் நிதானம் தவறி நடந்து
சிரமங்களை ஏற்படுத்திக் கொள்ள கிரக சூழ்நிலைகள் தெரிகின்றன. பொறுமையே
பலனளிக்கும். வாழ்க்கை வசதியை அதிகரிக்கும் நோக்கில் கடன் வாங்கி விடக்கூடாது.
தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சி கிடைக்கும். நல்ல முறையில் பயன்படுத்துவதால்
திருப்திகரமான முன்னேற்றம் பெறலாம். மூத்த சகோதரர்கள் நண்பருக்கு இணையாக
செயல்படுவர். வெளியூர், வெளிநாடு வேலை வாய்ப்பு முயற்சி செய்பவர்கள் பணக்கடன்
பெறும் சூழ்நிலையை தவிர்ப்பதால் நன்மை உண்டு.
தொழிலதிபர்கள்: கல்வி நிறுவனம், தொழிற்பயிற்சிபள்ளி, டெக்ஸ்டைல், அச்சகம்
நடத்துபவர்கள், காகிதம், மலைத்தோட்டப்பயிர், பர்னிச்சர், உணவு பண்டங்கள் உற்பத்தி,
தோல் ஆடை, காலணிகள் சூட்கேஸ், எண்ணெய் உற்பத்தியாளர்கள், நிதி நிறுவனம் நடத்துபவர்கள்
கூடுதல் வளர்ச்சி பெற அனைத்து வாய்ப்பையும் பயன்படுத்தி முன்னேறுவர்.
பணவரவு கூடும். மற்றவர்களுக்கு தொழில் சுமாராகவே நடக்கும். புதிய வீடு, சொத்து
வாங்கும் திட்டம் இருந்தால், வில்லங்கம் சரிபார்த்து வாங்குவது நற்பயன்
தரும்.
பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் கூடுதல் செயல்திறனுடன்
பணி இலக்கை எளிதாக நிறைவேற்றுவர். சம்பள உயர்வு, விரும்பிய பணியிட மாறுதல்
எளிதாக கிடைக்கும். குறிப்பாக, ஆசிரியர்கள், வங்கி, வரித்துறை, காவல், புள்ளியியல்,
போஸ்டல், தகவல் தொழில்நுட்பம், சினிமாத்துறை சார்ந்த பணியாளர்கள் தமது
திறமையால் முன்னேறி நிர்வாகத்திடம் நற்பெயரும் எதிர்பார்த்த சலுகையும்
பெறுவர். சக பணியாளர்களுடன் சுமூக நட்புறவு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி
நிறைந்திட விரும்பிய வகையில் கூடுதல் பணச்செலவு செய்ய எண்ணம் பலம்பெறும்.
வியாபாரிகள்: காகிதம், ஸ்டேஷனரி, ஜவுளி, பர்னிச்சர், பழம், காய், மீன்,
விளையாட்டு பொருட்கள், கண்ணாடி, பீங்கான் பொருட்கள், சிற்பங்கள், இசைக்கருவிகள்,
கட்டுமான பொருள், உணவு பண்டங்கள், தானியங்கள், பலசரக்கு பொருட்கள் விற்பனை
செய்பவர்கள் உற்சாகமாக செயல்படுவதால் அதிக வாடிக்கையாளர்களைப் பெறுவர்.
பணவரவும் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு வியாபாரம் சுமாராகவே இருக்கும்.
வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
மாணவர்கள்: வங்கியியல், தணிக்கையியல், ஓட்டல் மேனேஜ்மென்ட், மார்க்கெட்டிங்,
கம்ப்யூட்டர், ஆடை வடிவமைப்பு, நவீன பர்னிச்சர் உற்பத்தி, ஓவியக்கலை, சிற்பக்கலை,
தோட்டக்கலை, இலக்கியம் சட்டம், மாடலிங், கேட்டரிங் பயிற்சிபெறும் மாணவர்கள்
தமது திறமையை பயன்படுத்தி சிறந்த தரதேர்ச்சியும் தகுந்த வேலைவாய்ப்பும்
பெறுவர். மற்றவர்கள் கவனக்குறைவாக இருப்பதால் மார்க் குறையலாம். மிக அதிக
கவனம் வேண்டும். பணச்செலவில் சிக்கனம் வேண்டும். சக மாணவர்கள் உறுதுணையாக
செயல்படுவர். உங்களைப் பற்றிய கவலை தந்தைக்கு வராத வகையில் நடந்துகொள்வது
நலம்.
பெண்கள்: பணிபுரிபவர்கள் கவனமாக இருந்தால் மட்டுமே பணியில் அன்றாட சிரமங்களைத்
தவிர்க்க முடியும். சக பணியாளர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஆனாலும்,
பணி உயர்வு, விரும்பிய இடமாற்றம் எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். குடும்
பத்தை கவனிக்கும் பெண்கள் கணவரின் நல் அன்பை பெறுவர். பணத்தட்டுப்பாட்டால்
சிக்கனம் கடைபிடிக்க வேண்டியிருக்கும். உறவினர்களிடம் நற்பெயர் அதிகரிக்கும்.
சுய, கூட்டுத்தொழில் புரிபவர்கள் புதிய ஆர்டர் கிடைத்து தொழில் வளர்ச்சியும்
அதிக பணவரவும் பெறுவர்.
அரசியல்வாதிகள்: சமூக சேவையில் பிரச்னைகள் கடுமையாகும். உங்களுக்கு உதவ
விசுவாசமிக்க ஆலோசகர் இருப்பது நல்லது. ஆதரவாளர்கள் பணத்தை கறக்கவே முயற்சி
செய்வர். புத்திரரின் உதவி முக்கிய சமயத்தில் கை
கொடுக்கும். எதிரிகளால் ஏற்பட்ட துன்பம் குறையும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள்
நல்லோர்
களின் ஆதரவை பெற்று தொழில் வளர்ச்சி அடைவர். ஆதாய பணவரவு பெற நிதான நடைமுறை
அவசியம்.
விவசாயிகள்: அதிக ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். கூடுதல் பயிர் விளைச்சலும்,
பண வருமானமும் கிடைக்கும். நிலம் தொடர்பான விவகாரம் சமரச தீர்வு பெறும்.
கால்நடை அபிவிருத்தி அபரிமிதமான வகையில் இருக்கும்.
|
|
|
|
|
|
|
|
[C] Copyright
www.Htn-news.com
2004-2007
Contact
|