HTN-NEWS.COM ...Da Tamil E-Magazine      Contact.....11-11-2007                 Home

 

 

 

 

 

 

 

 

 

 

குருபெயர்ச்சி ராசிபலன் (11.11.2007)

(குருபகவான் 16-11-07, காலை 4.34 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனால் ஏற்படும் பலன்கள் கணிக்கப்பட்டுள்ளன. )

கும்பம்




அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3

சிரமமான நேரத்திலும் திடமாக செயல்படும் கும்பராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார். தனது 5, 7, 9 ஆகிய பார்வையால் ராசிக்கு 3, 5, 7 ஆகிய இடங்களை பார்க்கிறார். திட்டமிட்ட செயல்கள் இனிதாக நிறைவேற புதிய வாய்ப்பு பல வகையிலும் ஏற்படும். உற்சாகத்துடன் செயல்பட்டு செயலில் வெற்றியும் கூடுதல் பணவரவும் பெறுவீர்கள். அமைதியாக பேசும் நற்குணம் இயற்கையாகவே உண்டு. இன்னும் சாந்த குணத்துடன் செயல்பட்டு கூடுதல் புகழ் அடைவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயர்ந்து புதிய பதவி, பொறுப்பு சிலருக்கு தேடிவரும்.

இளைய சகோதரர் தமது தகுதி, திறமை வளர்த்து வாழ்வில் வளம் பலவும் பெறுவர். சிலருக்கு அவர்கள் சார்ந்த துறையில் சாதனை நிகழ்த்தும் வாய்ப்பு உருவாகி நிறைவேறும். வீடு, மனை சார்ந்த வகையில் அபிவிருத்தி பணியை அனுகூல நிலை வருகிற எதிர்காலத்தில் செயல்படுத்தலாம். தாய்வழி உறவினருடன் மனஸ்தாபம் அதிகரிக்கும். அவர்களை அனுசரித்து நடக்கவும். புத்திரர்கள் படிப்பிலும், புதிய விஷயங்களை அறிவதிலும் ஆர்வத்துடன் செயல்படுவர். பூர்வ சொத்தில் வருமானம் பெறுபவர்களுக்கு வளர்ச்சி அதிகரிக்கும். குலதெய்வ அருள் தகுந்த துணையாக இருந்து வாழ்வில் உங்களை நல்வழி நடத்தும். எதிரிகளால் தொந்தரவு ஏதும் வராத நன்னிலை பெறுவீர்கள்.

உடல்நலம் பலம் பெறும். குடும்பத்தில் இனிமேல் உங்கள் பேச்சுதான் எடுபடும். உறவினர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். கணவன், மனைவி ஒற்றுமை பலம் பெற ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். ஆன்மிக வழிபாடு குடும்ப நலம் வளம்பெற உதவும். நண்பர்களிடம் பேசும் போது விவாதத்தை தவிர்க்கவும். தந்தைவழி உறவினர்கள் உங்கள்மீது அபிப்ராய பேதம் கொள்வார்கள். திருமண முயற்சி செய்பவர்களுக்கு இனிய வாழ்வு அமையும்.


விலைமதிப்புள்ள பொருட்களை கவனமுடன் பாதுகாக்கவும். தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் ஏற்படும். மூத்த சகோதரர் கண்டிப்புடன் நடந்து உங்கள் வாழ்வு வளம்பெறச் செய்வர். வெளியூர், வெளிநாடு வேலைவாய்ப்பு முயற்சி செய்பவர்களுக்கு அனுகூல பலன் ஏற்படும்.

தொழிலதிபர்கள்: லாட்ஜ், ஆஸ்பத்திரி, டிராவல்ஸ் நடத்துவோர், வீடு, கட்டடம் விற்பனை செய்பவர்கள், பட்டு, பருத்தி ஆடை, மின்சாதனப் பொருட்கள், பட்டாசு, தீப்பெட்டி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், சணல் பொருட்கள், செங்கல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் தொழிலில் புதிய யுக்திகளை செயல்படுத்தி கூடுதல் தொழில்வளர்ச்சி பெறுவர். மற்றவர்களுக்கு இவர்களை விட வசதி வாய்ப்பு கூடும். சமூக அந்தஸ்து உயர்ந்து பதவி, பொறுப்பு கிடைக் கும். புத்திரர்கள் தொழில்வளர்ச்சிக்கு உதவுவர். வாகன பராமரிப்பில் தகுந்த கவனம் வேண்டும். குலதெய்வ வழிபாடு செய்தால் வருமானம் மேலும் பெருகும். கடன் வசூலில் முன்னேற்றம் இருக்கும்.

பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள், தங்கள் திறமையை பயன்படுத்தி நிர்வாகத்திடம் நற்பெயர் பெறும் வகையில் பணி இலக்கை பூர்த்தி செய்வர். குறிப்பாக, உணவுப்பொருள் தயாரிப்பு, மருத்துவம், காவல்துறை, கட்டுமானப்பணி, நகை வடிவமைப்பு, சிற்ப அலங்காரம் போன்ற துறைகளில் பணிபுரிபவர்கள் தங்கள் திறமையை பயன்படுத்தி வருமானத்தைப் பெருக்குவர். நிர்வாகத்திடம் எதிர்பார்த்த சலுகை எளிதாக கிடைக்கும். சக பணியாளர்கள் உங்கள்மீது நம்பிக்கை கொள்வர். வருமானத்தை அளவுடன் செலவிடும் மனப்பான்மை அதிகரிக்கும்.

வியாபாரிகள்: ஜவுளி, விவசாய விளைபொருட்கள், உடற்பயிற்சி கருவிகள், கட்டுமானப் பொருட்கள், உணவு, பழங்கள், குளிர்பானங்கள், பலசரக்கு, ஐஸ்கிரீம், பேக்கரி, இறைச்சி, மருந்து, தேன், வாசனை திரவியங்கள், எண்ணெய், உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள், செம்பு பாத்திரங்கள், காப்பி, தேயிலை, ஏலக்காய் விற்பனை செய்பவர்கள், புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து தொழில் வளர்ச்சியும் அதிக பணவரவும் பெறுவர். மற்றவர்களுக்கு கடந்த ஆண்டில் இருந்த இடைஞ்சல்கள் விலகி படிப்படியாக லாபம் அதிகரிக்கும். வாகனங்களை கவனமுடன் பாதுகாப்பது நல்லது. இளம் வியாபாரிகளுக்கு திருமண முயற்சி எளிதாக நிறைவேறும்.

மாணவர்கள்: ரசாயனம், மருத்துவம், தொழிற்பயிற்சி, கம்ப்யூட்டர், பிரின்டிங் டெக்னாலஜி, விவசாயம், ஆசிரியர் பயிற்சி, தகவல் தொழில் நுட்பம், வங்கியியல், தணிக்கையியல் உள்ளிட்ட துறை மாணவர்களுக்கு படிப்பு பின் தங்கும். கூடுதல் அக்கறையுடன் படிப்பதால் மட்டுமே பயிற்சியின் பலனை முழுவதுமாக பெறமுடியும். மற்ற துறை மாணவர்கள் நன்றாகப் படித்து அதிக மார்க்குடன் தேர்ச்சி பெறுவர். சக மாணவர்களுடன் படிப்பை தவிர்த்த விவாதம் எதுவும் கூடாது. பெற் றோரின் மனமறிந்து செயல்படுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

பெண்கள்: பணிபுரிபவர்கள் ஒருமுக தன்மையுடன் செயல்பட்டு பணி இலக்கை பூர்த்தி செய்வர். பொதுசேவையிலும் ஆர்வம் வளரும். சிலருக்கு பணியிட மாற்றம் விரும்பிய வகையில் கிடைக்கும். குடும்பத்தை கவனிக்கும் பெண்கள் கணவரின் உடல்நலத்தில் கூடுதல் அக்கறை கொள்வது நலம். உறவினர்களுடன் குடும்ப விவகாரம் குறித்து பேசுவதை தவிர்க்கவும். குடும்ப செலவுக்கு தேவையான பணவரவு சீராக கிடைக்கும். திருமண முயற்சி செய்பவர்களுக்கு அனுகூல பலன் உண்டு. சுய, கூட்டுத்தொழில் புரிபவர்கள், தொழில் வளர்ச்சி பெற அதிகமாக உழைப்பர். பணவரவும் நன்மைகளும் மனதை மகிழ்விக்கும். சக தொழில் சார்ந்தவர் அனுசரணையாக நடந்துகொள்வர்.

அரசியல்வாதிகள்: சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு சமூகத்தில் நல்ல அந்தஸ்து பெறுவார்கள். ஆதரவாளர்கள் விசுவாசத்துடன் நடந்துகொள்வர். அதிகாரிகளிடம் கொடுக்கும் கோரிக்கை அனுகூலமாக நிறைவேறும். புத்திரர்களை அரசியல் பணிக்கு உதவிகரமாக செயல்புரியச் செய்து, அவர்களையும் பிரபலமாக்குவர். எதிரிகளே இல்லாமல் போவார்கள். கணவன், மனைவி ஒற்றுமை சீராக தகுந்த கருத்து பரிமாற்றம் அவசியம். தொழில் நடத்துபவர்கள் கூடுதல் உழைப்பால் வளர்ச்சியும் வருமானமும் அதிகம் பெறுவர். சிலருக்கு வெகுநாள் எதிர்பார்த்த பதவி, பொறுப்பு கிடைக்கும்.

விவசாயிகள்: விவசாயப்பணிகள் சிறந்து பயிர் விளைச்சல் அதிகரிக்கும். கால்நடை பராமரிப்பில் கூடுதல் கவனம் நல்லது. குடும்பத்தில் சுபமங்கல நிகழ்வு இனிதே நிறைவேறும்.















 

 
 

                                              [C] Copyright www.Htn-news.com 2004-2007         Contact

::Welcome to Globe7