 |
|
HTN-NEWS.COM ...Da Tamil E-Magazine
Contact.....11-11-2007
Home |
|
|
|

|
குருபெயர்ச்சி ராசிபலன் (11.11.2007)
(குருபகவான் 16-11-07, காலை 4.34 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு
ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனால் ஏற்படும் பலன்கள் கணிக்கப்பட்டுள்ளன. )

மகரம்
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2
நன்றி மறப்பவர்களை வெறுத்து ஒதுக்கும் மகரராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார்.
ஏற்கனவே அஷ்டமச்சனியின் பிடியில் உள்ள உங்களுக்கு குருவின் அமர்வும்
அனுகூலக்குறைவாகவே உள்ளது. உங்களின் திட்டமிட்ட நிதானச்செயலும், ஜாதகத்தில்
யோகபலனும் இருந்தால் மட்டுமே, செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். குரு தனது
5, 7 9 ஆகிய பார்வையால் ராசிக்கு 4, 6, 8 ஆகிய இடங்களை பார்க்கிறார். எனவே
கோபம் அதிகம் வரும். பேச்சு இனிமையாகவும் நியாயத்துடனும் இருந்தால் மட்டுமே
நன்மையை எதிர்பார்க்கலாம். இளைய சகோதரர்கள் தகுதி, திறமையை வளர்த்து வாழ்வில்
முன்னேற்றம் பெறுவர். சமூகப்பணியில் எந்த சூழ்நிலையிலும் முழு ஈடுபாட்டுடன்
செயல்படுவீர்கள். வீடு தொடர்பான வகையில் கவுரவமும் நிம்மதியும் பெறும் நன்னிலை
உண்டு. தாய்வழி சொந்தம் தகுந்த சமயத்தில் உதவிகரமாக செயல்படுவர். பூர்வ சொத்து
பராமரிப்பில் நம்பகமானவர்களை பணியமர்த்துதல் நன்று. புத்திரரின் தேவை அறிந்து
பூர்த்தி செய்து ஊக்கத்துடன் வழிநடத்துவதால் செயல்திறனும், படிப்பில் வளர்ச்சியும்
பெறுவர். குலதெய்வ அருள் கூடுதலாக பெற உரிய வழிபாடு அவசியம்.
எதிரிகள் தனது பல்வேறு பணிகளால் இடம்மாறிப்போவர். உடல்நலம் சீராக இருக்கும்.
வழக்கு, விவகாரங்களில் அனுகூல தீர்வு கிடைக்கும். கணவன், மனைவி ஒற்றுமை பலம்பெற
கருத்து பரிமாற்றம் அவசியமாகும். நண்பர்களுடன் தேவையற்ற விவாதங்களில் பங்குபெறக்கூடாது.
தந்தைவழி உறவினர் ஆதரவு மனப்பான்மையுடன் நடந்துகொள்வர். வாழ்க்கையில் அதிக
வசதி பெற தகுதிக்கு மீறிய பணக்கடன் பெறக்கூடாது. தொழில் சார்ந்த வகையில் உண்மை
உழைப்பும் நிதான செயல்பாடும் வளர்ச்சிபெற துணைநிற்கும். மூத்த சகோதரரின்
மனக்குறை அறிந்து சரிசெய்வதால் குடும்ப ஒற்றுமை பலம்பெறும். கடன் வசூலிப்பதில்
இனிய அணுகுமுறையால் நன்மை பெறலாம். வெளியூர், வெளிநாடு வேலைவாய்ப்பு விரும்புபவர்
களுக்கு அனுகூல செய்தி பெற தாமதமாகும்.
தொழிலதிபர்கள்: பாத்திரம், பட்டுத்துணி, பால்பொருட்கள், கம்ப்யூட்டர்,
மொபைல் போன், ரெடிமேட் ஆடை, நவீன பர்னிச்சர், பின்னலாடை, மார்பிள், செயற்கை
வைரம், சர்க்கரை சார்ந்த தொழில் செய்வோர், நட்சத்திர ஓட்டல், லாட்ஜ் நடத்துபவர்கள்
தங்கள் தொழிலில் கூடுதல் அக்கறையுடன் செயல்பட்டால் மட்டுமே வளர்ச்சி சாத்தியமாகும்.
மற்றவர்களுக்கு விசுவாசம் நிறைந்த பணியாளர்களின் உதவியால் நன்மை ஏற்படும்.
புதிய பதவி பொறுப்பு ஏற்பதால் கூடுதல் பணச்செலவு ஏற்படலாம். தொழில்
அபிவிருத்தி தொடர்பான கடன் பெறுவதில் அவசரம் வேண்டாம். நிதானமே இப்போதைய
தேவை. புத்திரர்களை நிர்வாகப் பொறுப்பில் வைத்திருப்பவர்கள் கவனமாக இருக்க
வேண்டும். அவர்கள் பொறுப்பில் விடுவது நஷ்டத்திற்கு வழிகோலலாம். தவிர்க்க
முடியாத பட்சத்தில், அவர்களுக்கு கூடுதல் பயிற்சி வழங்குவது அவசியம்.
வியாபாரிகள்: நகை, பாத்திரங்கள், சோப்பு, சூட்கேஸ், காலணி, அழகு சாதனப்
பொருட்கள், ஐஸ்கிரீம், சாக்லேட், பால், வெண்ணெய், நெய், எலக்ட்ரானிக்ஸ்
சாதனங்கள், பிளாஸ்டிக், அரிசி, மாவு, ஜவுளி, பஞ்சு, நுõல், இசைக்கருவிகள்
விற்பனை செய்பவர்களுக்கு விற்பனையில் தேக்கநிலை ஏற்படும். மற்றவர்களுக்கு
கூடுதல் உழைப்பு ஓரளவு நிதிநிலையை சரியாக்கும். வாகன பராமரிப்பு செலவு
குறையும். எதிரிகளால் கஷ்டம் ஏதும் வராது. அளவான மூலதனத்துடன் செயல்படுவது
நல்லது.
பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியில் மிகவும்
சிரமப்பட நேரிடும். நிர்வாகத்திடம் நற்பெயர் பெறுவதால் மட்டுமே எதிர்கால
வளம் சிறக்கும். குறிப்பாக, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம்,
விசைத்தறி, ஆடை வடிவமைப்பு, பியூட்டிஷியன், கம்ப்யூட்டர், டி.டி.பி., பிரிண்டிங்
டெக்னாலஜி போன்ற துறைகளில் பணிபுரிபவர்கள் மிகக் கவனமாக குறைபாடு வராத
வகையில் திறம்பட செய்தல் நல்லது. குடும்ப வளர்ச்சிக்காக தகுதிக்கு மீறிய
பணச்செலவு செய்யக்கூடாது. எதிரிகளால் இருந்த தொந்தரவு குறையும். தந்தைவழி
உறவினர்கள் நல்லவிதமாக நடந்து இயன்ற உதவி புரிவார்கள்.
மாணவர்கள்: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மார்க்கெட்டிங், மாடலிங், கம்ப்யூட்டர்,
ஓட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங், பிரின்டிங் டெக்னாலஜி, மருத்துவம், இசை,
ஓவியம், பரதம், இதழியல் துறைகளில் பயிற்சி பெறுபவர்கள் ஆர்வமுடன் படித்து
சிறந்த தரதேர்ச்சி பெறுவர். படிப்புக்கான பணச்செலவுக்கு தட்டுப்பாடு இருக்கும்.
சிக்கன நடவடிக்கை நன்மை தரும். சக மாணவர்களுடன் நட்புறவு சீராக இருக்கும்.
பெற்றோர் கூடுதல் பாசத்துடன் அன்பு பாராட்டுவர். வெளியூர் சுற்றுலா பயணம்
இனிய அனுபவம் தரும்.
பெண்கள்: பணிபுரிபவர்கள் உற்சாகமாக செயல்பட்டு பணி இலக்கை சரிசெய்வர். அதே
நேரம், பணியில் குறைபாடு வராத அளவிற்கு நடந்துகொள்ளவும். குடும்பத்தைக்
கவனிக்கும் பெண்களுக்கு பணத்தட்டுப் பாடு இருக்கும். வரவிற்கேற்ப செலவுகளை
திட்டமிடல் நல்லது. குடும்ப ஒற்றுமை பலம்பெறும். உறவினர்களிடம் நற்பெயர் ஏற்படும்.
உடல்நலம் சீராக இருக்கும். பொன், பொருள் பாதுகாப்பில் கவனம் வேண்டும். சுய,
கூட்டுத்தொழில் புரிபவர்கள் அளவான மூலதனத்துடன் தகுந்த உழைப்பால் தொழில்
வளத்தை சீராக்கலாம். வியாபாரத்தில் இடையூறு விலகும்.
அரசியல்வாதிகள்: கடந்தகாலத்தில் பெற்ற நற்பெயரை தக்க வைக்க இன்னும் கூடுதல்
சேவை புரிவது நல்லது. பேச்சில் நிதானமும், இனிமையும் அவசியமாகும். அரசியலில்
புத்திரரை வளர்க்க விரும்புபவர்கள் சற்று பொறுக்க வேண்டும். ஆதரவாளர்கள்
எதிர்பார்ப்புடன் நடந்துகொள்வர். எதிரிகளின் தொந்தரவு கட்டுப்படும்.
அதிகாரிகளிடம் மரியாதையுடன் நடந்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும். தொழில்
நடத்துபவர்கள் அதிக மூலதனம் செய்வதை தவிர்க்கவும்.
விவசாயிகள்: தமது நிலங்களின் மண்வளத்திற்கேற்ப உரிய பயிரிடுவதால் தகுந்த
மகசூல் பெறலாம். கால்நடை அபிவிருத்தி திட்டமிட்ட வகையில் நிறைவேறும். நிலப்பிரச்னைகள்
குறையும்.
|
|
|
|
|
|
|
|
[C] Copyright
www.Htn-news.com
2004-2007
Contact
|