HTN-NEWS.COM ...Da Tamil E-Magazine      Contact.....11-11-2007                 Home

 

 

 

 

 

 

 

 

 

 

குருபெயர்ச்சி ராசிபலன் (11.11.2007)

(குருபகவான் 16-11-07, காலை 4.34 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனால் ஏற்படும் பலன்கள் கணிக்கப்பட்டுள்ளன. )

மீனம்




பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி

இரக்க சிந்தனை கொண்ட மீனராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார். தனது 5, 7, 9 ஆகிய பார்வையால் ராசிக்கு 2, 4, 6 ஆகிய இடங்களை பார்க்கிறார். "பத்தில் குரு பதவிக்கு இடர்' என்பது ஜோதிட பழமொழி. காய்த்த மரத்தில்தான் கல்லடி படும் என ஆன்றோர் கூறுவர். அதுபோல உங்கள் தகுதி, திறமை, உண்மை, நேர்மை, சத்தியம் போன்ற பலவகை தன்மைகளுக்கு சோதனையைத் தர இருக்கிறார் குரு பகவான். ஆனாலும், பணவருமானம் அதிகரிக்க புதிய வாய்ப்பு உருவாகும்.

சமூகப்பணியில் இடம், சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. இளைய சகோதரருக்கு இயன்ற உதவி புரிவீர்கள். வீடு, மனை, வாகன வகையில் மனம் விரும்பியவாறு அபிவிருத்திபணி இனிதாக நிறைவேறும். தாய்வழி உறவினர்கள் கூடுதல் அன்பு பாராட்டுவர். புத்திரர்கள் விஷய ஞானம் நிறைந்த தன்மைகளைப் பெற ஆர்வமுடன் செயல்படுவர். படிப்பில் வளம் பெற உங்களின் ஊக்கம் துணைநிற்கும். பூர்வ சொத்தில் வருமானம் பெறுபவர்களுக்கு வளமை பெறும் வாழ்வு உண்டு. எதிரிகளால் கெடுதல் எதுவும் ஏற்படாது. கணவன், மனைவி ஒற்றுமை பிறர் போற்றும் வகையில் இருக்கும். மனைவி வழி உறவினர்கள் அனுகூலமாக நடந்துகொள்வர். நண்பர்களுடன் திட்டமிட்ட ஆன்மிக சுற்றுலா இனிதாக நிறைவேறும்.உடல்நலம் சீராகும். வாழ்க்கை வசதியை அதிகரிக்க தகுதிக்கு மீறிய பணக்கடன் எதுவும் பெறக்கூடாது. தொழில் சார்ந்த வகையில் இருக்கும் நன்னிலையை பேணி பாதுகாப்பதால் எதிர்கால வாழ்வுநலம் சிறப்பானதாக அமையும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக நடந்துகொள்வர். வெளியூர், வெளிநாடு வேலை வாய்ப்பு எதிர்பார்ப்பவர்களுக்கு குறைந்த அளவிலான அனுகூலமே உண்டு.


தொழிலதிபர்கள்: கல்வி நிறுவனம், பங்குசந்தை வர்த்தகம், வாகனம், வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்கள், ஆஸ்பத்திரி நடத்துபவர்கள், சிமென்ட், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மாவு, எண்ணெய், காகிதப் பொருட்கள், பர்னிச்சர், மருந்து, மருத்துவ உபகரணங்கள், விவசாயப் பொருட்கள், பெயின்ட் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் தொழிலில் அதிக உற்பத்தியும் தகுந்த லாப விகிதமும் பெறுவார்கள். மற்றவர்கள் இவர்களை விட கூடுதல் லாபம் பெறுவர். சமூகத்தில் புதிய பதவி, பொறுப்பு பெறுவதில் சூழ்நிலைகளை அனுசரித்து ஏற்றுக்கொள்வது நலம். தொழில் சார்ந்த இடர்கள் விலகும். வாழ்க்கை வசதி திருப்திகரமாக இருப்பினும் பயன்படுத்துவதில் ஆர்வக்குறைவு ஏற்படலாம். தொழிற்சாலை விஸ்தரிப்பு பணிகள் மனதிற்கினியவாறு நிறைவேறும்.

வியாபாரிகள்: தங்க நகை, புத்தகம், வீட்டு உபயோக பொருட்கள், ரெடிமேட் ஆடை, வாகன உதிரிபாகங்கள், உடற்பயிற்சி கருவி, குளிர்பானம், பலசரக்கு, பேக்கரி, மீன், இறைச்சி, பாத்திரங்கள், வீட்டு அலங்கார பொருட்கள், சோப்பு, எண்ணெய், நெல், அரிசி, நவதானியங்கள், காய்கறி வியாபாரம் செய்பவர்கள், வாடிக்கையாளர்களுடன் நல்லவிதமாக பேசினால் மட்டுமே லாபத்தை எதிர்பார்க்க முடியும். மற்றவர்களுக்கும் இது சுமரான காலமே. ஆடம்பர செலவினங்கள் கூடாது. வியாபாரத்தில் புத்திரர்கள் உறுதுணையாக செயல்படுவர். எதிரிகளால் தொல்லை இருக்காது. வியாபாரம் தொடர்புடைய வாகனம் வாங்க யோகம் இருக்கிறது.

பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பணி இலக்கை நேரம், காலம் பார்க்காமல் முடித்து விட வேண்டும். சக பணியாளர்களுடன் தேவையற்றதை பேசி சிக்கலில் மாட்ட வேண்டாம். பத்தாமிடத்து குரு பணியாளர்களுக்கு அனுகூலமாக இருக்கமாட்டார். குறிப்பாக ஆசிரியர், வங்கி, நிதி நிறுவனம், நகை, கலைப்பொருள் வடிவமைப்பவர்கள், பணியில் குறையேதும் வராத அளவிற்கு கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம். பணச்செலவு தேவைக்கேற்ப கிடைத்தாலும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு சேமித்து வைப்பதால் நற்பலன் உண்டு. தம்பதியர் ஒற்றுமை வளம் பெறும்.

மாணவர்கள்: ஆசிரியர் பயிற்சி, சட்டம், கம்ப்யூட்டர், எம்.சி.ஏ., ஓட்டல் மேனேஜ்மென்ட், பிசினஸ் மேனேஜ்மென்ட், இசை, நடனம், மாடலிங், தொல்பொருள் ஆராய்ச்சி, இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம், வங்கி மேலாண்மை, கண் மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்கள் படிப்பில் உத்வேகத்துடன் செயல்பட்டு நல்ல தரதேர்ச்சி பெறுவர். மற்றவர்களின் படிப்பு ஓரளவுக்கு நன்றாக இருக்கும். படிப்புக்கான பணவசதி திருப்திகரமாக கிடைக்கும். சக மாணவர்களுடன் நட்புறவு வளரும். பெற்றோரின் விருப்பம் அறிந்து செயல்படுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் ஒருமுகத்தன்மையுடன் செயல்படுவதால் பணி இலக்கை எட்ட முடியும். அலுவலகத்தில் விண்ணப்பித்த கடன் எதிர்பார்த்தபடி கிடைக்கும். குடும்பத்தை கவனிக்கும் பெண்கள் கணவரின் நல்லன்பும், நிறைவான பொருளாதார வசதியும் பெற்று நல்வாழ்வு நடத்துவர். உறவினர்களிடம் இருந்த மனஸ்தாபம் விலகி அன்பு மலரும். விரும்பிய பொன், பொருள் சேர்க்கை தகுதிக் கேற்ப கிடைக்கும். சுய, கூட்டுத்தொழில் புரிபவர்கள் தகுந்த வகையில் சரக்கு இருப்பு வைத்து தொழில் வளர்ச்சியில் அதிக அக்கறையுடன் செயல்படுவர். கடன் கொடுத்து வியாபாரம் செய்வதில் கூடுதல் எச்சரிக்கை அவசியம். சமூக பொறுப்பு எதையும் புதிதாக ஏற்க வேண்டாம்.

அரசியல்வாதிகள்: கடந்த காலத்தில் பெற்ற நற்பெயரின் உதவியால் அரசியல் பணியை தொடரலாம். ஆதரவாளர்களை தக்கவைத்திட கூடுதல் பணச்செலவு செய்ய வேண்டியது அவசியம். அதிகாரிகளை அணுகி கோரிக்கையை சொல்ல கூடுதல் தடவை செல்லவேண்டிய நிலை ஏற்படலாம். எதிரிகளால் தொல்லை ஏதும் வராது. புத்திரர்கள் உதவிகரமாக நடந்துகொள்வர். தொழில் நடத்துபவர்கள் பணியாளர்களை ஊக்கப் படுத்தி தொழில் வளம்பெற உரிய வகையில் செயல்படுவர். பணவரவு எதிர்பார்த்த வகையில் திருப்திகரமாக கிடைக்கும். பதவி பொறுப்பில் உள்ளவர்கள் தகுந்தவாறு பதவியை தக்கவைக்க வேண்டும்.

விவசாயிகள்: பயிர் வளர்ச்சி அதிகரித்து நல்ல மகசூல் பெறுவர். கால்நடை அபிவிருத்தி திட்டமிட்டபடி நிறைவேறும். நிலம் தொடர்பான தகராறு இருப்பின் நல்ல தீர்வு ஏற்படும்.















 

 
 

                                              [C] Copyright www.Htn-news.com 2004-2007         Contact

::Welcome to Globe7