 |
|
HTN-NEWS.COM ...Da Tamil E-Magazine
Contact.....11-11-2007
Home |
|
|
|

|
குருபெயர்ச்சி ராசிபலன் (11.11.2007)
(குருபகவான் 16-11-07, காலை 4.34 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு
ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனால் ஏற்படும் பலன்கள் கணிக்கப்பட்டுள்ளன. )

மேஷம்
அசுவினி, பரணி, கார்த்திகை 1
அடுத்தவர்களின் வாழ்வு சிறக்க இயன்ற வகையில் உதவும் மேஷராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு மிகவும் அனுகூலமாக பாக்கிய ஸ்தானமாகிய ஒன்பதாம் இடத்தில்
குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார். தனது 5, 7 9 ஆகிய பார்வையால் முறையே
ராசியையும், ராசிக்கு மூன்று, ஐந்தாம் இடத்தையும் பார்க்கிறார். கடந்த காலங்களில்
மனதில் இருந்த குழப்பமான சிந்தனைகள் விலகும். புதிய செயல்திறனும், உற்சாக
மனநிலையும் உருவாகும். அனுகூலமான பலன்கள் கிடைத்தாலும், தன, வாக்கு, குடும்ப
ஸ்தானத்தை சனி பார்ப்பதால் நிதானத்துடனும், இனிமையாகவும் பேசுவதால் நன்மை
பெறலாம். ஏனெனில், கிடைக்கப் போகும் நல்ல பலன்களை சில சமயம் வாய் கெடுத்து
விடும். கண் பார்வையில் சிக்கல் வர வாய்ப்புண்டு. பணவரவு அதிகம் பெற இனிய
சூழ்நிலை பலவிதத்திலும் உருவாகும். வீடு, மனை, வாகன வகையில் இருந்த தடைகள்
விலகி மனமகிழ்ச்சி பெறும் வகையில் வளர்ச்சிநிலை உருவாகும்.புத்திரரின்
செயலில் மந்தநிலை இருக்கலாம். கடன், பிணி, வழக்கு போன்ற தொந்தரவு குறையும்.
கணவன், மனைவி ஒற்றுமை பலம் பெறும்.
வாழ்க்கை வசதிஅதிகரிக்கும் வகையில் வீட்டு சாதனப் பொருள் விரும்பிய வகையில்
வாங்குவீர்கள். தந்தைவழி உறவினர்கள், வழிகாட்டும் ஆசானாக செயல்படுவர். "ஓடிப்போகிறவருக்கு
ஒன்பதாம் இடத்தில் குரு' என்பர். இதனால் ஓடி ஓடி உழைத்து பொருள் சேர்க்க
புதிய வாய்ப்புகள் பலவும் ஏற்படும். தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சியும்
வருமானமும் அதிகரிக்கும். திருமண முயற்சி செய்பவர்களுக்கு குருவருளால் மங்கல
நிகழ்வு ஏற்படும். வெளியூர், வெளிநாடு வேலை வாய்ப்பை விரும்புபவர்கள் பணிக்கு
செல்ல வாய்ப்பு உண்டு.
தொழிலதிபர்கள்: இயந்திரங்கள் தயாரிப்பு, ஆட்டோமொபைல், உதிரிபாகங்கள், கட்டுமானப்
பொருள், பர்னிச்சர் வகை, ரெடிமேட், கம்பளி ஆடை, கல் குவாரி, கட்டடம் கட்டுதல்,
டிராவல் ஏஜென்சி, தங்கநகை, பாய்லர் தொழிற்சாலை, உணவுப் பொருள் உற்பத்தி,
மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு, ஆஸ்பத்திரி நடத்துபவர்கள் தொழில் வளர்ச்சியும்
கூடுதல் பணவரவும் பெறுவார்கள். பிறருக்கு சமூக அந்தஸ்துள்ள பதவி கிடைக்கும்.
நிறுவனத்திற் காக கூடுதல் கட்டடம் கட் டவும், வாகனம் வாங்கவும் நல்வழி பிறக்கும்.
முதலீடுகளை பாதுகாப்பான வகையில் செய்வது நன்மை தரும்.
பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் கூடுதல் பொறுப்புணர்ச்சியுடன்
செயல்பட்டு நற்பெயர் பெறுவர். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
குறிப்பாக, மருத்துவம், காவல், ராணுவம், விவசாயம், புலனாய்வு பிரிவு, தொழிற்சாலை
பணியாளர், விசைத்தறி, ஆடை வடிவமைப்பு, வனத்துறை, உடல் ஊனமுற்றோர் நலத்துறை
போன்றவற்றில் பணிபுரிபவர்கள் உத்வேகத்துடன் செயல்பட்டு, கூடுதல் சலுகைகள்
பெறுவர். பணவரவு திருப்திகரமாகும்.
வியாபாரிகள்: ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், நவீன ஆடைகள், மருந்துபொருட்கள்,
மருத்துவ உபகரணங்கள், வீட்டு உபயோக சாதனங்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ்
பொருட்கள், மீன், இறைச்சி வகைகள், விவசாய இடுபொருள், உரம், பூச்சிக்கொல்லி
மருந்து, பெயிண்ட் வகைகள், மாவு பொருட்கள், சமையல் எண்ணெய், மசாலா பொடி
வகைகள், விளையாட்டு பொருட்கள், குளிர்பானம் உட்பட பல்வேறு பொருட்களை
வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் மனம் அறிந்து பேசி வியாபார வளர்ச்சி
இலக்கை எட்டுவர். மற்றவர்களுக்கு இந்த தொழில் செய்பவர்களை விட லாபம்
குறைவாகத்தான் இருக்கும் என்றாலும், திருப்தி தரும் வகையில் அமையும். தொழில்
அபிவிருத்திக்காக வாகனம் வாங்குவீர்கள்.
மாணவர்கள்: விவசாயம், கேட்டரிங், நரம்பியல் மருத்துவம், சிவில் இன்ஜினியரிங்,
ஆசிரியர் பயிற்சி, வங்கி
யியல், தகவல் தொழில்நுட்பம், மாடலிங், பொறியியல், ஜர்னலிசம், ஓவியக்கலை, ஓட்டல்
மேனேஜ் மென்ட், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் சார்ந்த பயிற்சி பெறும்
மாணவர்கள் தங்கள் திறமையை நன்கு பயன்படுத்தி சிறந்த பயிற்சியும் தரதேர்ச்சியும்
பெறுவர். படிப்பு தவிர பிற செலவினங்களை நிதானித்து செய்வது நல்லது. சக
மாணவர்களுடன் தேவையற்ற விவாதம் எதுவும் கூடாது.
பெண்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சம்பள உயர்வு
பெறுவர். சக பணியாளர்களுடன் சீரான நட்புறவு இருக்கும். குடும்பத்தை கவனிக்கும்
பெண்கள் கணவரின் பாசத்தை பெற்று சந்தோஷ வாழ்வுநலம் பேணுவர். புத்திரர்களை
நல்வழியில் நடைபோட வைக்க கூடுதலாக கவனம் செலுத்தவேண்டும். சுய, கூட்டுத்தொழில்
புரிபவர்கள் அளவான மூலதனத்துடன் அதிகமாக உழைப்பதால் தொழில் வளர்ச்சி
மனநிறைவைத் தரும். பொன், பொருள் சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். இளம்
பெண்களுக்கு தகுந்த வரன் வந்து சேரும்.
அரசியல்வாதிகள்: அதிகாரிகளிடம் இதம் பதமாக பேசுவதால் கோரிக்கை எளிதாக
நிறைவேறும். ஆன்மிக வழிபாட்டில் ஆர்வம் வளரும். புத்திரரின் செயலை கவனித்து
அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
எதிரிகளால் இருந்த தொந்தரவு குறையும். புதிய நண்பர்கள் உருவாகி அதனால் வேண்டிய
உதவி பெறுவீர்கள். அரசியலுடன் தொழில், வியாபாரம் நடத்துபவர்கள் கூடுதல் வளர்ச்சியும்,
வருமானமும் பெறுவர்.
விவசாயிகள்: தகுந்த பலன் பெறுவீர்கள். கால்நடை அபிவிருத்தியும், அதனால்
பணவரவும் கூடும். குடும்பத்தில் சுபமங்கல நிகழ்ச்சி ஏற்படும். உறவினர்களுடன்
நல்அன்பு வளரும்.
|
|
|
|
|
|
|
|
[C] Copyright
www.Htn-news.com
2004-2007
Contact
|