HTN-NEWS.COM ...Da Tamil E-Magazine      Contact.....11-11-2007                 Home

 

 

 

 

 

 

 

 

 

 

குருபெயர்ச்சி ராசிபலன் (11.11.2007)

(குருபகவான் 16-11-07, காலை 4.34 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனால் ஏற்படும் பலன்கள் கணிக்கப்பட்டுள்ளன. )

மிதுனம்




மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3

பணத்தை விட நிம்மதியை அதிகம் விரும்பும் மிதுனராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார். தனது 5, 7, 9 ஆகிய பார்வையால் முறையே ராசிக்கு 11, ராசி, 3 ஆகிய இடங்களை பார்க்கிறார். இதனால் உங்கள் வாழ்வில் வளம் பலவும் பெறுவதற்கான நற்பலன் வழங்குவார். உடல்நல ஆரோக்கியம் பலம் பெறும். மனதில் உற்சாகமும் செயல்திறனும் அதிகரிக்கும். உங்களில் சிலரை உலகம் உற்றுக் கவனிக்கும் நிலை உருவாகும். எவரிடமும் இதம் பதமாக பேசி நட்புறவு பாராட்டுவீர்கள். பணவருமானம் அதிகம் இருக்கும். கடந்த காலங்களில் இவ்விஷயத்தில் இருந்த தடைகளைத் தகர்த்தெறிவீர்கள்.

பொதுப்பணி, தெய்வ பணியில் ஈடுபாட்டுடன் நடந்துகொள்வீர்கள். இளைய சகோதரர்கள் முன்னேற தாமதம் ஆகலாம். வீடு, மனை, வாகன வகையில் நீங்கள் விரும்பிய நல்மாற்றங்களை உருவாக்கி மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்கள் மனக்கசப்பை மறந்து அன்பு பாராட்டுவர். சொத்து பரிபாலனம் செய்பவர்கள் நம்பிக்கை மிகுந்தவரை துணைக்கு வைப்பதால் நலம் உண்டு. புத்திரர்களால் சிறு சிரமங்கள் ஏற்படும். அவர்களது படிப்பிலும் வேலையிலும் சிக்கல் தெரிகிறது. எதிரித்தனமாக நடந்தவர்கள் உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொள்வர்.

சமூகத்தில் புதிய செல்வாக்கு ஏற்படும். கணவன், மனைவி ஒற்றுமை சிறக்கும். உறவினர்களால் பெரிதும் மதிக்கப்படுவீர்கள். நண்பர்களின் குடும்ப வளர்ச்சியில் உங்களின் பங்களிப்பு நிறைவாக இருக்கும். திருமண முயற்சி செய்பவர்களுக்கு குருவருளால் இனிய சுபமங்கல நிகழ்வு ஏற்படும். தந்தைவழி உறவினருடன் பந்தபாசம் அதிகரிக்கும். வாழ்க்கை வசதிக்கு உதவும் வகையிலான வீட்டு சாதனங்கள், ஆடம்பர வகையறாக் களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சியும் பணவருமானமும் அதிகரிக்கும். ஆதாய பணவரவு பெறுவதற்கான புதிய வாய்ப்பு பல்வேறு வகையிலும் உருவாகும். வெளியூர், வெளிநாடு வேலைவாய்ப்பு விரும்புபவர் அதிக பணச்செலவு செய்து முயற்சிப்பதை தவிர்க்கவும்.


தொழிலதிபர்கள்: பங்குச்சந்தை, கல்வி நிறுவனம், புத்தக வெளியீட்டாளர், ஜவுளி, நிதி நிறுவனம், கிரானைட், மார்பிள், காகிதம், வாசனைத் தைலம், காகிதம், மினரல் வாட்டர், பழச்சாறு, குளிர்பானம், பிஸ்கட், சாக்லெட் உற்பத்தி செய்பவர்கள் தங்கள் தொழில் வளர்ச்சியால் சந்தையில் சிறப்பான இடம்பிடிப்பர். மற்றவர்களுக்கும் ஓரளவு வளர்ச்சியான நிலையே. கூடுதல் பணவரவும், தொழில் அபிவிருத்தியும் உண்டு. புதிய பதவி, பொறுப்பு ஏற்பில் தகுந்த பரிசீலனை நல்லது. புத்திரர்களை நிர்வாகத்தில் உதவியாக வைத்திருப்பவர்கள், அவர்களின் செயல்பாட்டை சீர்படுத்துவது நல்லது.

பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், திறமையை கூடுதலாக வளர்த்து பணி இலக்கை எளிதாக நிறைவேற்றுவர். நிர்வாகத்திடம் எதிர்பார்த்த கடன், சலுகைகள் நிறைய கிடைக்கும். சக பணியாளர்களுடன் நட்புறவு வளரும். மருத்துவம், நீதித்துறை, வங்கி, பைனான்ஸ், பள்ளி, கல்லுõரி, பணிபுரிபவர்கள் தங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு புகழ் பெறுவர். புத்திரர்களின் மனமறிந்து தேவையை பூர்த்தி செய்வதால் குடும்பவளம் சிறக்கும். தம்பதியர் குடும்ப உறவினர் சுபநிகழ்ச்சியில் முன்னிலையில் இருந்து உதவிசெய்ய சூழ்நிலை உருவாகும்.

வியாபாரிகள்: காகிதம், விளையாட்டு சாதனம், பாத்திரங்கள், அலங்காரப் பொருட்கள், தானியம், இனிப்பு பண்டங்கள், அளவிடு கருவிகள், நகை, ஜவுளி, பீங்கான் பொருட்கள், கைவினைப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், பர்னிச்சர், பலசரக்கு வியாபாரம் செய்பவர்கள் மிகுந்த அக்கறையுடன் வாடிக்கையாளருக்கு சேவைசெய்து தொழில் அபிவிருத்தியும் நிறைவான பணவரவும் பெறுவர். பிற வியாபாரிகளுக்கு லாபம் மேலும் அதிகமாகும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. இளம் வியாபாரிகளுக்கு திருமண முயற்சி கைகூடும். புதிய நண்பரின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும்.

மாணவர்கள்: தொழில்நுட்ப பயிற்சி, ஆசிரியர், வங்கியியல், மார்க்கெட்டிங், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பர்னிச்சர் தயாரிப்பு, சிற்பக்கலை, சட்டக்கல்வி, ஓவியம், மாடலிங், கண், சித்த மருத்துவம், விவசாயம், இலக்கியம், இதழியல் துறை மாணவர்கள் மிகச்சிறப்பாகப் படித்து உயர்ந்த தரதேர்ச்சி பெறுவர். மற்ற மாணவர்களுக்கும் படிப்பில் குறைபாடு இருக்காது என்றாலும், கவனக்குறைவால் மார்க் குறையலாம். படிப்புக்கான பணவசதி கிடைப்பதில் சிரமம் இருக்கும். ஆயினும், சக மாணவர்கள் கொடுத்து உதவுவர். தந்தையுடன் அனுசரணையாக நடப்பதால் குடும்ப ஒற்றுமை சிறந்து மகிழ்ச்சி தழைக்கும்.

பெண்கள்: அரசு மற்றும் தனியார் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள், குறுக்கீடு இல்லாமல் திறம்பட பணிபுரிவர். சக பணியாளர்களுடன் ஆன்மிக சுற்றுலா சென்றுவர சூழ்நிலை உதவும். குடும்பத்தை கவனிக்கும் பெண்கள் நிதான செயலால் கணவரின் நல் அன்பைப் பெறுவர். பணச்செலவில் சிக்கனம் நிறைந்திருக்கும். புத்திரர்களை சிறந்த கவனத்துடன் வழிநடத்துவதால் அவர்களின் தகுதி, திறமை வளரும். சுய, கூட்டுத்தொழில் புரிபவர்கள், புதிய ஆர்டர் கிடைத்து தொழில்வளமும் கூடுதல் பணவரவும் பெறுவர். பணம் சேமிக்கவும், பொன், பொருள் வாங்கவும் இனிய வாய்ப்புண்டு. திருமண முயற்சி செய்பவர்களுக்கு தகுந்த வரன் கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: எதிர்பார்த்த பதவி கிடைக்கும். நன்னடத்தை உடையவர்களை உதவிக்கு வைத்துக்கொள்வதால் புகழ்தரும் வாழ்வு கிடைக்கும். ஆதரவாளர் எண்ணிக்கை வளரும். புத்திரர்களை எதிர்வரும் காலங்களில் அரசியலில் ஈடுபடுத்தலாம். எதிரிகளால் இருந்த தொந்தரவு குறையும். மனைவி வழி உறவினர் உரிய மரியாதையுடன் நடந்துகொள்வர். பூர்வ சொத்து பராமரிப்பிலும் விற்பனையிலும் பாதுகாப்பு நடைமுறையை தவறாமல் பின்பற்றவும். தொழில் நடத்தும் வாய்ப்பு பெற்றவர்கள் இன்னும் கூடுதலாக ஸ்திரப்படுத்த குருவருள் துணை நிற்கும்.

விவசாயிகள்: விவசாய நிலங்களில் அக்கம் பக்கத்தவருடன் பிரச்னை வராத வகையில் நடந்துகொள்வது நல்லது. பயிர் விளைச்சல் திருப்திகரமாகும். கால்நடை வளர்ச்சியால் பணவரவு கூடும். குடும்பத்தில் சுபமங்கல நிகழ்வு இனிதே நடைபெறும்.






 

 
 

                                              [C] Copyright www.Htn-news.com 2004-2007         Contact

::Welcome to Globe7