HTN-NEWS.COM ...Da Tamil E-Magazine      Contact.....11-11-2007                 Home

 

 

 

 

 

 

 

 

 

 

குருபெயர்ச்சி ராசிபலன் (11.11.2007)

(குருபகவான் 16-11-07, காலை 4.34 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனால் ஏற்படும் பலன்கள் கணிக்கப்பட்டுள்ளன. )

ரிஷபம்




கார்த்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1, 2

எந்தச் செயலையும் நிதானத்துடன் செய்து வெற்றி பெறும் ரிஷபராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு மிகவும் அனுகூலமாக இருந்த குருபகவான் இப்போது எட்டாம் இடத்தில் பெயர்ச்சியாகி உள்ளார். தனது 5, 7, 9 ஆகிய பார்வையால் முறையே ராசிக்கு 12, 2, 4 ஆகிய இடங்களை பார்க்கிறார். அஷ்டம குரு, அர்த்தாஷ்டம சனி என்கிற நிலையை அனுபவிக்கப் போகிறீர்கள். இதனால் திடமான மனதில் சிறு அளவிலான குழப்பம் வந்து விலகும். மனதிற்கு ஒவ்வாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், நல்ல கருத்துக்களை பிடிவாதம் செய்யாமல் ஏற்றுக்கொள்வதும் அவசியம். நல்ல பெயர் வேண்டுமானால், நேரம், இடம், பொருள், சூழ்நிலைகளுக் கேற்ப செயல்பட வேண்டும். பணவருமானம் அதிகம் பெற நிறைய வாய்ப்புகள் வந்து சேரும். வீடு, மனையில் அபிவிருத்தி, மராமத்து பணியை தகுதிக்கு உட்பட்ட வகையில் நிறைவேற்றிக்கொள்ளலாம். புத்திரர்கள் தங்கள் செயல் திறனை வளர்த்து பெற்றோருக்கு பெருமை தேடித்தருவர். வேலைவாய்ப்புக்கு முயற்சி செய்பவர்களுக்கு கவுரவமான வகையில் பணி கிடைக்கும். எதிரிகள் விலகிப்போவர்.

உடல்நலத்தில் அவ்வப்போது பிரச்னைகள் ஏற்படும். கணவன், மனைவி ஒற்றுமையில் குழப்பம் ஏற்பட்டாலும், விட்டுக்கொடுத்து செயல்பட்டால், பிரச்னைகளின் தாக்கம் குறையும். நண்பர்களிடம் தகுதிக்கு மீறிய வகையில் பணம் கொடுக்கல், வாங்கல் கூடாது. வாகன போக்குவரத்தில் நிதானம் வேண்டும்.தந்தைவழி உறவினர்கள் நல் எண்ணத்துடன் செயல்படுவர். ஆடம்பர பணச்செலவு கூடாது. தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சி ஏற்பட்டாலும், சிலரது குறுக்கீடுகள் எரிச்சலை உண்டாக்கும். அவர்களை எதிர்க்காமல், சமயோசித புத்தியுடன் நட்பு பாராட்டி செயல்படுவதால் சுபபலன் பெறலாம். சேமிப்பு பணம், மனம் விரும்பிய சுபநிகழ்ச்சிகளுக்கு செலவாகி விடும். வெளியூர் வேலைவாய்ப்பு, அலைச்சல் பயணங்கள் ஏற்படலாம்.


தொழிலதிபர்கள்: தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் நடத்துபவர்கள், விவசாய கருவிகள், செல்போன், கம்ப்யூட்டர், கேமரா, அழகு சாதனப்பொருள், டெக்ஸ்டைல்ஸ், தோல், காலணிகள், நவரத்தினக்கற்கள் பதித்த தங்க நகை உற்பத்தி, பால் பொருட்கள், ஐஸ்கிரீம், உணவு பண்டம், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், வாசனை திரவியங்கள், சோப்பு வகைகள் சார்ந்த உற்பத்தியாளர்கள் தனது இனிய பேச்சால் புதியவர்களை வாடிக்கையாளராக பெறுவர். பிற தொழில் செய்வோருக்கு தொழில் வளர்ச்சி சுமாராக இருக்கும். வாகனம் ஓட்டுவதில் பொறுமைசாலிகளை பணியமர்த்துவது நல்லது. தொழில் போட்டியை சமாளிக்க ஆடம்பர செலவினம் எதுவும் கூடாது.

பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புணர்ந்து செயல்படுவதால் மட்டுமே நிர்வாகத்திடம் நற்பெயர் பெற முடியும். சக பணியாளர்களுடன் கருத்து வேற்றுமை தவிர்க்கவும். குறிப்பாக, நகை உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், விவசாயம், நீர்நிலை பாதுகாப்பு, டிரைவிங் பணியில் உள்ளவர்கள் குறைபாடு எதுவும் வராத வகையில் மிக கவனமுடன் பணியாற்ற வேண்டும். வருமானம் குறையும். செலவைச் சுருக்க வேண்டி வரும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றம், ஒரு சிலருக்கு பணியே மாற வேண்டிய சூழல் வரலாம்.

வியாபாரிகள்: மின்சாதனப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், கட்டுமானப்பொருள், நகை, ஜவுளி, வீட்டு உபயோக சாதனங்கள், கண்ணாடி, பிளாஸ்டிக் பொருட்கள், பழச்சாறு, குளிர்பான வகை, காய்கறி, உரம், உணவுப் பண்டங்கள், பேக்கரி பொருட்கள், பர்னிச்சர், திரைச்சீலை, பட்டாசு, மெழுகுவர்த்தி, விளையாட்டுப் பொருட்கள், பால்பொருட்கள், பருத்தி ஆடை, காகிதப் பொருட்கள், வாழ்த்து அட்டை வியாபாரம் செய்பவர்கள் தொழில் வாய்ப்பை கவனத்துடன் பயன்படுத்துவதால் இருக்கும் நிலையை தக்க வைக்கலாம். தொழில் போட்டியில் சண்டை, சச்சரவுக்கு உட்படாத வகையில் நடந்துகொள்வது நல்லது. வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும்.

மாணவர்கள்: சட்டம், தொல்பொருள் ஆராய்ச்சி, கேட்டரிங், இலக்கியம், வாகனம் சார்ந்த பயிற்சி, மாடலிங், ஐ.டி. டெக்னாலஜி, பிரிண்டிங் டெக்னாலஜி, சிவில், தகவல் தொழில்நுட்பம், விவசாயம், ஓட்டல் நிர்வாகம் துறை சார்ந்த மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவதால் மட்டுமே சரியான இலக்கை அடையமுடியும். மற்றவர்கள் ஓரளவு நன்றாகப் படிப்பர். சக மாணவர்கள் படிப்பில் உறுதுணையாக செயல்படுவர். பணவசதி திருப்தியாக கிடைக்கும். விளையாட்டு பயிற்சியின்போது பாதுகாப்பு நடைமுறையை தவறாமல் பயன்படுத்தவும்.

பெண்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் பணியில் கவனக் குறைவுடன் செயல்பட்டு கெட்ட பெயர் எடுக்க வேண்டி வரும். அலட்சியத்தை தவிர்த் தால், சிரமத்தைக் குறைக்கலாம். அலுவலகத்தில் விண்ணப்பித்த கடன் கிடைக்கும். ஆனால், அதை எதிர்நோக்கி வீண்செலவு வரலாம். திட்டமிட்டு செயல்படுங்கள். குடும்பத்தை கவனிக்கும் பெண்களுக்கும் பணவரவு தட்டுப்பாடு தான். கணவரின் சூழ் நிலை அறிந்து தகுந்த உதவி புரிவீர்கள். சுய, கூட்டுத்தொழில் புரிபவர்கள் அளவான மூலதனத்துடன் இனிய அணுகுமுறையால் தகுந்த தொழில்வளர்ச்சி பெறுவர். வெளியூர் பயணத்தால் புதிய ஆர்டர்கள் ஏற்படும். பொன், பொருள் பாதுகாப்பில் முக்கிய கவனம் வேண்டும்.

அரசியல்வாதிகள்: இனிமையாக பேசி ஆதரவாளர்களை அதிகம் பெறுவீர்கள். புதிய பதவி எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். அரசு அதிகாரிகள் கோரிக்கையை நிறைவேற்றித்தருவர். புத்திரர்கள் உங்கள் ஒவ்வொரு செயலிலும் உறுதுணையாக செயல்படுவர். எதிரிகளால் இருந்த தொந்தரவு குறையும். உறவினர்கள் தகுந்த கவுரவத்துடன் நடந்து கொள்வர். அரசியலுடன் தொழில் நடத்தும் வாய்ப்பு பெற்றவர்கள் அளவான மூலதனத்துடன் திறமையான பணியாளர்களால் மட்டுமே வளர்ச்சி பெறலாம். வெளியூர் பயணங்களில் புதிய நட்பும் இனிய அனுபவமும் ஏற்படும்.

விவசாயிகள்: பயிர் செய்வதற்கான பணவசதி திருப்திகரமாக இருக்கும். அறுவடை காலங்களில் கூடுதல் கவனம் அவசியம். பொருள் திருட்டுப் போக வாய்ப்புண்டு. கால்நடைகளுக்கு நோய் தாக்குதல் ஏற்படலாம் என்பதால், தகுந்த சிகிச்சையை தவறாமல் செய்வது நல்லது. நிலம் தொடர்பான பிரச்னை இருப்பவருக்கு சுமூக தீர்வு ஏற்படும்.




 

 
 

                                              [C] Copyright www.Htn-news.com 2004-2007         Contact

::Welcome to Globe7