HTN-NEWS.COM ...Da Tamil E-Magazine      Contact.....11-11-2007                 Home

 

 

 

 

 

 

 

 

 

 

குருபெயர்ச்சி ராசிபலன் (11.11.2007)

(குருபகவான் 16-11-07, காலை 4.34 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனால் ஏற்படும் பலன்கள் கணிக்கப்பட்டுள்ளன. )

சிம்மம்




மகம், பூரம், உத்திரம் 1

எடுத்த செயலை நடத்தி முடிக்கும் சிம்மராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார். தனது 5, 7, 9 ஆகிய பார்வையால் முறையே ராசிக்கு 9, 11, ராசி ஆகிய இடங்களை பார்க்கிறார். ராசியில் சனிபகவான் அமர்ந்து ஜென்மச்சனி

(ஏழரை) என்கிற நிலையை உருவாக்கினாலும், குருபகவானின் பார்வை பலம் உங்களுக்கு புதிய சக்தியையும், எழுச்சியையும் உருவாக்கும். சத்தியத்தையும், ஆன்மிக நம்பிக்கையையும் பின்பற்றினால் உங்களை யாராலும் அசைக்க முடியாது. துவங்கும் செயல்கள் எளிதாக வெற்றி பெறும். பணவரவு கூடுதலாக பெற புதிய வழிவகை ஏற்படும். எவரிடமும் இதம் பதமாக பேசி நட்பை உருவாக்குவீர்கள். இளைய சகோதரர்கள் வாழ்வில் வளம் பெறுவர்.

சமூகப்பணியில் ஈடுபாடு வளர்வதால் சிலருக்கு பதவி, பொறுப்பு கிடைக்கும். வீடு, மனை, வாகன வகையில் மனம் விரும்பிய மாற்றமும் வளர்ச்சிப்பணியும் இனிதாக செய்து மகிழலாம். தாயின் அன்பும், வாழ்த்தும் பக்கபலமாக துணை நிற்கும். புத்திரர் பெற்றோரின் எதிர்பார்ப்பை உணர்ந்து செயல்பட்டு குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பர். படிப்பிலும், வேலை வாய்ப்பிலும் உயர்ந்த நிலை அடைவர். நண்பர்களுடன் "நான் பெரியவனா? நீ பெரியவனா?' என பணரீதியாக சண்டையிட்டுக் கொள்வதால் வீண் பிரச்னைகள் ஏற்படும். குடும்பத்திற்கு உதவ நல்லவர்கள் மன உவகையுடன் முன்வருவர். புதிய சொத்து வாங்கவும் கிரக நல்லருள் உள்ளது. எதிரிகள் உங்களின் வளர்ச்சிநிலை கண்டு விலகிப்போவர்.


கணவன் மனைவி ஒற்றுமை பலம்பெறும். நண்பர்களுடன் இணக்கமாக செயல்படுவதால் பலவித நன்மையும் பெறுவீர்கள். வாழ்க்கையில் வசதி அதிகரிக்க புதிய வாய்ப்பு உருவாகி நிறைவேறும். தந்தைவழி உறவினர் ஒருவர், ஆசிரியரைப் போல கண்டிப்பும் கனிவும் கலந்து உங்களை அக்கறையாக வழிநடத்தி வாழ்வில் உயர்வு பெறச்செய்வார். திருமண முயற்சி செய்பவர்களுக்கு அனுகூல தன்மை உண்டு. புத்திரப்பேறு எதிர்பார்ப்பில் உள்ளவர்களுக்கு இறையருளால் நன்மை ஏற்படும். தொழில் சார்ந்த வகையில் கிடைக்கும் நல்வாய்ப்பை முழு முயற்சியுடன் பயன்படுத்துவதால் ஆதாய பணவரவு பெறுவீர்கள். மூத்த சகோதரர்கள் கூடுதல் பாசத்துடன் நடந்து கொள்வர். வெளியூர், வெளிநாடு வேலைவாய்ப்புபெற முயற்சிப்பவர்களுக்கு விரும்பிய வகையில் பணி கிடைக்கும்.

தொழிலதிபர்கள்: நட்சத்திர ஓட்டல், சுற்றுலா ஏஜென்சி நடத்துவோர், கம்ப்யூட்டர், செல்போன், ஜவுளி (குறிப்பாக பட்டு), வீடியோ, கேமரா, எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், படகு, ரெடிமேட், ஐஸ்கிரீம், சாக்லெட், வாசனை திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள் சந்தை வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்துவதால் வளர்ச்சியும் வருமானமும் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு சுமாரான நிலையே இருக்கும். சமூகத்தில் புதிய பதவி, பொறுப்பு கிடைக்கும். சக தொழிலதிபர்களுடன் உயர்வு, தாழ்வு பற்றிய ஒப்பீடு வாக்குவாதம் கூடாது. புத்திரர்கள் தங்கள் தொழில் வளர பல வகையிலும் உதவிபுரிவர்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மார்பிள், பால் பொருட்கள், பர்னிச்சர், அடுப்பு, எண் ணெய், பட்டாசு, மொபைல், கம்ப்யூட்டர், எலக்ட் ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், உடற்பயிற்சி கருவிகள், கேமரா, அழகுசாதன பொருட்கள், வெள்ளி பாத்திரங்கள், பின்னலாடை, கவரிங் நகைகள், ரெயின்கோட், குடைகள், தோல் பொருள் வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக பேசி விற்பனையை சீராக வைத்துக் கொள்வர். மற்றவர்களுடைய விற்பனை ஓரளவு இருக்கும். ஆடம்பர பணச்செலவு எதுவும் கூடாது. தகுதிக்கு உட்பட்ட வகையில் அபிவிருத்தி பணி செய்யலாம்.

பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் உத்வேக செயல்பாடு நிகழ்த்துவதால் பணியில் குறைபாடு வராத நன்னிலை பெறலாம். சக பணியாளர்களிடம் தகுதிக்கு மீறிய பணம் கொடுக்கல், வாங்கல் கூடாது. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பாய்லர் தொழிற்சாலை, வெல்டிங், கலைப்பொருள் உற்பத்தி பணியில் உள்ளவர்கள் உற்பத்தி பொருட்களை கவனமுடன் பாதுகாக்கவும். உடல்நலத்திலும் தகுந்த பாதுகாப்பு அவசியம். சலுகைகள் அதிகம் எதிர்பார்க்க வேண்டாம். இருப்பதை பிடுங்க வந்த சனீஸ்வரனிடமிருந்து குரு பகவான் பாதுகாப்பார்.

மாணவர்கள்: கம்ப்யூட்டர், சிவில், வாகனம், எலக்ட்ரிக்கல், எலக்ட் ரானிக்ஸ், தொழிற்பயிற்சி, பவுதிகம், வேதியியல், ஓவியம், சினிமா, மாடலிங், விவசாயம் சார்ந்த துறைகளில் பயிற்சிபெறும் மாணவர்கள் ஈடுபாட்டுடன் செயல்பட்டு தகுந்த தேர்ச்சி பெறுவர். மற்றவர்கள் ஓரளவே படிப்பார்கள். படிப்புக்கான பணவசதி சீராக கிடைக்கும். சக மாணவர்களுடன் தேவையற்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். தந்தை, மகன் நண்பர்களைப் போல் அன்பு பாராட்டுவர்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள், நுட்பங்களை அறிந்து செயல்படுவதால் சிரமங்களை தவிர்க்கலாம். அலுவலகத்தில் விண்ணப்பித்த பணக்கடன் ஓரளவு கிடைக்கும். குடும்பத்தை கவனிக்கும் பெண்கள் சிக்கன பணச்செலவில் குடும்ப நலம் பேணுவர். கணவருடன் தேவையற்ற விவாதம் கூடாது. புத்திரப்பேறு வகையில் அனுகூல பலன் உண்டு. தாய்வீட்டில் உதவி கிடைக்கும். சுய, கூட்டுத் தொழில் புரிபவர்கள் அளவான மூலதனத்துடன் கூடுதல் உழைப்பால் தொழில்வளம் பெறலாம். பொருள் பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறை அவசியமாகும். திருமண முயற்சி செய்பவர்களுக்கு சுபமங்கல நிகழ்வு குருவருளால் உண்டாகும்.

அரசியல்வாதிகள்: சமூக அந்தஸ்தை தக்கவைக்க பணச்செலவைக் காட்டிலும் நற்சேவை செய்வதே சிறப்பான பலன் தரும். ஆதரவாளர்கள் கூடுதல் பாசத்துடன் நடந்துகொள்வர். அரசியல் செல்வாக்கினால் புத்திரருக்கு எதிர்கால தேவையை இயன்ற அளவு நிறைவேற்றுவீர்கள். எதிரிகளால் பெரிய அளவிலான கெடுதல் செய்ய முடியாது. மனைவியின் உடல் நலம்பெற தகுந்த சிகிச்சை உதவும். தந்தைவழி உறவினர் முக்கிய தேவைக்கு பணஉதவி செய்வர். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் அளவான மூலதனத்துடன் திறமையான பணியாளர்களை கொண்டு சீரான வளர்ச்சி பெறுவர்.

விவசாயிகள்: மகசூலுக்கு தேவையான அனைத்து வசதியும் அனுகூலமாகும். கால்நடை அபிவிருத்தி சீரான முன்னேற்றம் பெறும்.






 

 
 

                                              [C] Copyright www.Htn-news.com 2004-2007         Contact

::Welcome to Globe7