 |
|
HTN-NEWS.COM ...Da Tamil E-Magazine
Contact.....11-11-2007
Home |
|
|
|

|
குருபெயர்ச்சி ராசிபலன் (11.11.2007)
(குருபகவான் 16-11-07, காலை 4.34 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு
ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனால் ஏற்படும் பலன்கள் கணிக்கப்பட்டுள்ளன. )

துலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3
துன்பம் கண்டு சோர்ந்து போகாத துலாம் ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார். தனது
5, 7, 9 ஆகிய பார்வையால் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களை பார்க்கிறார்.
குரு அமர்ந்த மூன்றாம் இடம் உங்கள் ராசிக்கு சிறு அளவில் அனுகூல குறைவை
உருவாக்கும் என்றாலும், குருவின் பார்வை படும் இடங்கள் சுபஸ்தானங்களாக அமைந்து
பல நன்மைகளைத் தரும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று உண்டு. இப்போது
சமூகத்திலும், தொழிலிலும் உங்களுக்கு இருக்கும் நன்னிலையை தகுந்தபடி தக்கவைத்துக்
கொள்ள வேண்டும். எவரிடமும் இனிமையாக பேசுவதால் மட்டுமே நலம் ஏற்படும்.
பணவரவை அதிகரிக்க கூடுதல் முயற்சியும் உழைப்பும் மட்டுமே உதவும். மற்றபடி
எதனாலும் எந்த பயனும் இல்லை.
இளைய சகோதரர்கள் திறமையுடன் செயல்படுவர். பொது விவகாரங்களில் பெரும்பான்மை
நபர்களின் கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறீர்கள்.
உங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும், கருத்துச் சொல்லி பயனில்லை. வீடு, மனை,
வாகன வகையில் அபிவிருத்தி, பராமரிப்பு செலவை இஷ்டமுடன் செய்து மகிழ்வீர்கள்.
தாயார் சொல் கேட்டு நடப்பதால் முக்கிய விஷயங்களில் அனுகூல தீர்வு ஏற்படும்.
புத்திரர்களின் செயல்பாடுகளை சரியாக கண்டு உணர்ந்து அவர்களை நல்வழி நடத்துதல்
அவசியமாகும். பூர்வ சொத்தில் விவகாரம் உள்ளவர்கள் உரிய முறையில் சரிசெய்வதால்
கூடுதல் நன்மை பெறலாம். இஷ்ட, குலதெய்வ அருளை பூரணமாகப் பெற உரிய வழிபாடு
உதவும். கடனை சரிசெய்ய வாய்ப்பு வரும். உடல்நலம் சீர்பெறும்.
கணவன், மனைவி உறவு ஒற்றுமையுடன் இருக்கும். ஒருவருக்கொருவர் புரிதல்
திறனுடன் நடந்து குடும்பத்துக்கு பாடுபடும் நன்னிலை உருவாகும். நன்னடத்தை
உடைய புதிய நண்பர்களும், முக்கியஸ்தர்களும் நட்புணர்வுடன் பழகி வேண்டிய
உதவி புரிவர். தந்தைவழி உறவினர்கள் உங்கள் மீது அதிக நம்பிக்கை கொண்டு, வாழ்க்கை
வசதி அதிகரிக்க உறுதுணையாக செயல்படுவர். தொழில் சார்ந்த வகையில் பலவித
மறைமுக குறுக்கீடுகள் வரலாம். ஆதாய பணவரவு பெற கடுமையாக உழைக்க வேண்டும்.
சேமிப்பு பணம் முக்கிய தேவைக்கு பயன்படும். வெளியூர், வெளிநாடு வேலைவாய்ப்பு
முயற்சி செய்பவர்கள் தகுதிக்கு மீறிய பணச்செலவு செய்யக்கூடாது.
தொழிலதிபர்கள்: மினரல் வாட்டர், பம்ப் செட், பிரிட்ஜ், மீன் ஏற்றுமதி, உப்பளம்,
பால் பொருட்கள், சாக்லெட், டெக்ஸ்டைல்ஸ், அரிசி ஆலை, பட்டு, முத்துநகை, எலக்ட்ரிக்கல்,
எலக்ட்ரானிக்ஸ், மின்னணு சாதனங்கள், மீன்பிடி வலை உற்பத்தி செய்பவர்கள்,
தொழில் ரீதியாக எதிர்வரும் போட்டியை துணிச்சலுடன் சமாளித்து வளர்ச்சி காண்பர்.
மற்றவர்களுக்கு பணவரவு ஓரளவுக்கு இருக்கும். சமூகத்தில் புதிய பதவி, பொறுப்பு
கிடைக்கும். புத்திரர்கள் உதவிகரமாக செயல்பட தகுந்த பயிற்சி தருவீர்கள்.
வியாபாரிகள்: தண்ணீர் சார்ந்த பொருட்கள், மோட்டார் உதிரிபாகம், மருத்துவ
உபகரணம், சோப்பு, பினாயில், ஷாம்பு, எண்ணெய், பலசரக்கு, பால்பொருட்கள்,
ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், அழகு சாதனப் பொருட்கள், சிமெண்ட், அரிசி,
மாவு, இறைச்சி, மீன் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் சேவையால் வாடிக்கையாளரை
தக்கவைத்துக்கொள்வர். மற்றவர்களுக்கு வியாபாரம் ஓரளவுக்கே இருக்கும். கொள்முதல்
மற்றும் ஸ்டாக் மீது உங்கள் கூரிய பார்வை கடுமையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால்
திருட்டு, மோசடி ஆகியவற்றால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. மிக மிக கவனம்.
விஸ்தரிப்பு பணிகளையும் அடுத்த ஆண்டில் வைத்துக் கொள்வதே நல்லது.
பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர் களின், பணியில்
தொய்வு ஏற்படலாம் என்பதால், சலுகைகளை இழக்க வாய்ப்புண்டு. சக பணியாளர்களுடன்
இனிய நட்புறவு திகழும். சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படும் வகையில் சூழ்நிலை
உருவாகலாம். தண்ணீர் சார்ந்த பணியில் உள்ளவர்களுக்கு மட்டும் சம்பள உயர்வு,
கடன் வசதி, பணியில் உயர்வு என அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சமூக அந்தஸ்து
உயரும்.
மாணவர்கள்: ஏரோநாட்டிக்ஸ், மெரைன் டெக்னாலஜி, சிவில், தகவல் தொழில்நுட்பம்,
எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சினிமா, மாடலிங், இலக்கியம், சாப்ட்வேர்
தொடர்பாக படிப்பவர்கள் பின்தங்கும் நேரமாக உள்ளது. பெற்றோர் மனம் வருந்தாமல்
இருக்க, படிப்பைத் தவிர பிறவற்றில் கவனம் செலுத்துவதை அறவே நிறுத்தி விடுங்கள்.
படிப்புக்கான பணவசதி சீராக கிடைக்கும். சக மாணவர்கள் படிப்பில் உறுதுணையாக
நடந்துகொள்வர்.
பெண்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் ஒருமுகத்தன்மையுடன்
செயல்படுவதால் பணியில் குறுக்கீடு வராத நன்னிலை பெறலாம். சக பணியாளர்களுடன்
நட்புறவு வளரும். சுபநிகழ்ச்சி ஒன்றுக்காக அலுவலகத்தில் கடன் வாங்க வேண்டி
வரும். அதுவும் சுலபத்தில் கிடைத்து விடும். கொடுக்கல் வாங்கலில் தகுதியறிந்து
செயல்படுவது நல்லது. குடும்பத்தை கவனிக்கும் பெண்கள் கணவரின் நல்அன்பை பெற்று
இனிய வாழ்வுநலம் பேணுவர். உறவினர்களிடம் நற்பெயர் அதிகரிக்கும். நகைகளை
இரவல் கொடுக்கவோ, வாங்கவோகூடாது. சுய, கூட்டுத் தொழில் புரியும் பெண்கள்
தேவையான மூலதனம் இட்டாலும், கடின உழைப்பின் பேரில் தான் ஓரளவு லாபம் காண
முடியும்.
அரசியல்வாதிகள்: உங்களுக்கு தகுந்த ஆலோசனை கூற தகுதி, திறமை நிறைந்த ஒருவர்
முன்வருவார். சமூகப்பணியில் ஆர்வம் வளரும். ஆதரவாளர்கள் அனுசரணையுடன் நடந்துகொள்வர்.
எதிரிகள் பலம் பெற் றாலும் உங்களுக்கு தொந்தரவு எதுவும் இருக்காது. புத்திரர்களுக்கு
தகுந்த பயிற்சி கொடுப்பீர்கள். மனைவிவழி உறவினர் உரிய மரியாதையுடன் நடந்துகொள்வர்.
வாழ்க்கை வசதி அதிகரிக்க சிறு பணக்கடன் ஏற்படலாம். அரசியலுடன் தொழில் நடத்துபவர்
களுக்கு பெரிய லாபம் இருக்காது.
விவசாயிகள்: பயிர்வளர்ப்பில் பூச்சி, புழு தொந்தரவு அதிகரிப்பால் மகசூல்
குறைய வாய்ப்புண்டு. கவனம். கால்நடை வளர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும்.
நிலம் தொடர்பான பிரச்னையில் அனுகூல தீர்வு கிடைக்கும்.
|
|
|
|
|
|
|
|
[C] Copyright
www.Htn-news.com
2004-2007
Contact
|