|
|
|

HTN health news
ரத்த அழுத்தத்தை குறைக்க சைவம் சாப்பிடுங்க..
காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்களை தாரளமாக சாப்பிடுபவர்களுக்கு உயர் ரத்த
அழுத்தம் குறையும் என்கிறது சர்வதேச ஆய்வு.
நியூயார்க்கைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சைவ உணவு, மற்றும் அசைவ உணவு சாப்பிட்ட 4700
பேரை தேர்வு செய்து ஆய்வு நடத்தினர். இதில் சைவ உணவுகள் உயர் ரத்த அழுத்தத்தை
வெகுவாக குறைப்பது தெரிய வந்தது. காய்கறிகளை கொஞ்சம் கூடுதலாக சாப்பிடும்பட்சத்தில்
கூடுதலான கலோரி சத்து கிடைக்கும். ஆனாலும் அந்த கூடுதல் கலோரியும் கூட காய்கறி
புரோட்டீன்களால் மாற்றப்பட்டு விடும். ரத்த அழுத்தத்தை குறைக்கும் உடற்பயிற்சி, உடல்
பருமன், சோடியம் மாத்திரைகள் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டாலும், காய்கறிகளே
டாப்பாக இருக்கின்றன. ஆனால் அசைவ உணவுகளை சாப்பிட்டவர்களுக்கு இதுபோன்று எந்த பயனும்
கிடைக்கவில்லை.
காய்கறி புரோட்டீன்களில் இருக்கும் ஸ்பெஷல் அமினோ அமிலங்கள் தான் (இவைதான் புரோட்டீனை
உருவாக்குகிறது) ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மாமிச உணவுகளில்
காணப்படும் அமினோ அமிலங்கள் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் வேலையைத் தான் செய்கின்றன.
இதனால் ரத்த அழுத்தத்தை குறைக்க வேண்டுமானால் அல்லது கட்டுப்படுத்த வேண்டுமானால்
தாவர உணவுகளைத் தான் சாப்பிட வேண்டும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் காய்கறி புரோட்டீன்கள் ரத்த அழுத்தத்தை எப்படி குறைக்கின்றன? என்பதை விஞ்ஞானிகளால்
திட்டவட்டமாக சொல்ல முடியவில்லை. இருப்பினும் காய்கறி புரோட்டீன்கள், நார்ச்சத்து
மற்றும் மக்னீசியம் சத்துக்களை அதிகமாக சாப்பிடுமாறு தூண்டுவதாகவும், ரத்த அழுத்தம்
குறைவதற்கு இந்த தூண்டுதல் காரணமாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறினர்.
|
|
|