| இது
தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
கிளாலி, முகமாலை, கண்டல்
பகுதிகள் ஊடாக இன்று திங்கட்கிழமை காலை 5:30
நிமிடமளவில் சிறிலங்கா படையினரின் 53, 55 ஆம்
டிவிசன் படையணிகள் மும்முனைகளில் முன்நகர்வுகளை
மேற்கொண்டனர்.படையினரின் பின்தளங்களில் இருந்து
செறிவான பல்குழல் வெடிகணை, ஆட்லெறி எறிகணை மற்றும்
கனரக போர்க்கலங்களின் செறிவான சூட்டாதரவுடன் முன்நகர்வினை
படையினர் மேற்கொண்டனர்.
இம்முன்நகர்வுக்கு
எதிராக விடுதலைப் புலிகள் இன்று காலை 10:40 நிமிடம்
வரை கடும் எதிர்த்தாக்குதலை நடத்தி படையினரை பழைய
நிலைகளுக்கு விரட்டியடித்துள்ளனர் என்று விடுதலைப்
புலிகள் தெரிவித்தனர்.வடபோர்முனையில் கடந்த மூன்று
நாட்களாக நடைபெற்று வரும் மோதல்களில் சிறிலங்கா
படையினர் தரப்பில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
145 பேர் படுகாயமடைந்துள்ளனர். |