| இப்பேரணி
கடந்த வெள்ளிக்கிழமை (14.11.08) நடைபெற்றது.
- இடப்பெயர்வின் துன்பத்தினை
அனுபவிக்கும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்வது
தவறாகாது
- மனித உரிமைகள் மீறப்படுகின்ற
போது சக மனிதன் என்ற முறையில் அதற்காக கண்டனம்
தெரிவிப்பது ஒவ்வொரு தனிமனிதனின் கடமை
- எமது உறவுகள் அங்கே
நாளுக்கு நாள் அழிக்கப்பட்டு வருகின்ற வேளையில்
அவர்களுக்காக கண்டிப்பாக குரல் கொடுக்க வேண்டியது
நமது தார்மீக கடமை
ஆகியவற்றினை முன்னிலைப்படுத்தி
கண்டனப் பேரணி நடைப்பெற்றது.

மலேசிய அரசியல் கட்சிகளான
அம்னோ, மலேசியன் இந்தியன் காங்கிரஸ், மலேசிய சீனர்
சங்க உறுப்பினர்கள்.அரச சார்பற்ற இயக்கங்களான உலகத்
தமிழர் நிவாரண நிதியம், தமிழ் நெறி கழகம், தமிழ்
அறவாரியம், உலகத் தமிழர் மாமன்றம், தமிழ் இளைஞர்
மணி மன்றம், மலேசிய இந்திய இளைஞர் மன்றம், இந்து
சங்கம், இந்து இளைஞர் இயக்கம் என பலதரப்பட்ட அமைப்புகளைச்
சார்ந்த தமிழ் மக்கள் அணிதிரண்டு வந்து கண்டனப்
பேரணியில் பங்கேற்றனர்.ஈழத் தமிழர் படுகொலையைத்
தடுத்து நிறுத்த வேண்டும்

அப்பாவி தமிழர்களைக் கொண்டு
குவிக்கும் சிறிலங்கா அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும்
கண்டனப் பேரணி
எனும் பதாகைகளை தாங்கியவாறு
“கொல்லாதே கொல்லாதே அப்பாவி
தமிழர்களைக் கொல்லாதே”
“போராடுவோம் போராடுவோம்
போரை நிறுத்தும் வரை போராடுவோம்”
ஆகிய முழக்கங்களுடன் மக்கள்
கூட்டம் உணர்வுடன் கூடியிருந்தனர்.

“வாங்காதே வாங்காதே
சிலோன் தேயிலையை வாங்காதே”
“பறக்காதே பறக்காதே ஏயர்
லங்காவில் பறக்காதே”
போன்ற முழக்கங்கள் தொடர்ந்து
எழுப்பப்பட்டன.
பேரணியின் இறுதியில்
சிறிலங்கா தூதரகத்திடன் மனு கையளிக்கப்பட்டது.
பல்வேறு அமைப்புகளைச்
சார்ந்த 10 பேர் அடங்கிய குழுவினர் இந்த மனுவினை
சிறிலங்கா தூதரக அதிகாரிகளிடம் வழங்கினர்.
முக்கிய மூன்று கோரிக்கைகளை
முன்னிலைப்படுத்தி இந்த மனு வழங்கப்பட்டது.
- அப்பாவி தமிழர்களைக்
கொன்று குவிப்பதனை நிறுத்த போர் நிறுத்தம் செய்ய
வேண்டும்
- மீண்டும் அனைத்துலக
தொண்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும்
- அனைத்துலக சமூகத்தின்
கருத்தை மதித்து இருதரப்பும் போர் நிறுத்தத்தை
கடைப்பிடித்து அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட
வேண்டும்
என்பதே வழங்கப்பட்ட
மனுவின் முக்கிய சாரம்சமாக இருந்தது.
சிறிலங்கா அரச தலைவருக்கு
மனு அனுப்பி வைக்கப்படும் என சிறிலங்கா தூதரக
அதிகாரிகளினால் உறுதியளிக்கப்பட்டது.ஈழத் தமிழ்
உறவுகளுக்காக மலேசிய தமிழர்கள் வழங்கும் ஆதரவு
தழிழீழ மக்கள் என்றென்றும் தலை நிமிர்ந்து வாழ வழி
அமைக்கும்.
எமது உறவுகளின் துயர்
துடைக்க நாம் முன்னெடுக்கும் இம்முயற்சி கண்டிப்பாக
ஏதாவதொரு வகையில் ஈழத்தில் அமைதி மலரச் செய்யும்
என நம்பலாம். மலேசிய மக்கள் மத்தியில் எழுந்துள்ள
இந்த விழிப்புணர்வு தொடர வேண்டும். மலேசிய அரசின்
பார்வைக்கு எட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும்
என இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். |