| இது
தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
பூநகரியை வல்வளைத்த
படையினரின் நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப்
புலிகள் கடும் எதிர்த்தாக்குதலை நடத்தினர்.இதில்
படையினர் பலத்த இழப்புக்களை சந்தித்தனர்.பூநகரி
பகுதியில் கடைசி ஒருநாள் நடைபெற்ற மோதல்களில் எட்டு
அதிகாரிகள் உட்பட 54 படையினர் கொல்லப்பட்டனர். 350
படையினர் காயமடைந்தனர் என்று மங்கள சமரவீர மேலும்
தெரிவித்தார்.
இது தொடர்பில் சிறிலங்காவின்
படைத்துறை பேச்சாளரிடம் ஊடகம் ஒன்று தொடர்பு கொண்டு
கேட்டபோது, படை நடவடிக்கை எனில் இழப்புக்கள் ஏற்படுவது
தவிர்க்கப்பட முடியாதது என்று தெரிவித்துள்ளதுடன்
இதனை நிராகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. |