Home

 

                     www.Htn-news.com ........dA Tamil E-Magazine        Contact  20 11 2008    HOME    

  தமிழ் சஞ்சிகைகள்

 

வீரகேசரி
தினக்குரல்
உதயன்
மட்டக்களப்பு ஈழநாதம்
நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்

Your Ad Here

தமிழர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் சிங்கள காவற்துறையினர்!

நாட்டின் அசாதார சூழ் நிலைமை காரணமாக இடம் பெயர்ந்த நிலையில் கொழும்பிலும் மற்றும் புறநகர்ப்குதிகளிலும் தற்காலிமாக தங்கிவாழும் தமிழர்களிடம் சிங்களக் காவற்துறையினர் பண வசூலிப்பில் இறங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.
சுற்றி வளைப்புத் தேடுதல் என்ற போர்வையில் புறக்கோட்டை, வெள்ளவத்தை மற்றும், தெகிவளை மற்றும் அதனை அண்டிய பிரதேச லொட்ஜ்களில் தங்கியிருக்கும் தமிழர்களிடம் பொலிஸ் குழுவொன்றும் பணம் பறித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.



குறித்த பொலிஸ் குழுவினர் லொட்ஜ் உரிமையாளர்களின் உதவியுடன் இவ்வாறு பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த பொலிஸ் குழுவினர் பொலிஸ் சீருடையில், விடுதிகளுக்குச் சென்று அங்கு தங்கியிருப்போரை மிரட்டி வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் விடுதிகளில் தங்கியிருப்போரை பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல முற்படுவதாகவும், இதனை தவிர்க்கும் முகமாக விடுதிகளில் தங்கியிருப்போர் பொலிஸ் குழுவினருக்கு பணம் வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.புறக்கோட்டை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இவ்வாறு பெருந்தொகைப் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.