Home

 

                     www.Htn-news.com ........dA Tamil E-Magazine        Contact  20 11 2008    HOME    

  தமிழ் சஞ்சிகைகள்

 

வீரகேசரி
தினக்குரல்
உதயன்
மட்டக்களப்பு ஈழநாதம்
நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்

Your Ad Here

போரில் மகிந்த ராஜபக்சவினால் வெற்றி பெற முடியாது - உண்ணாநிலைப் போராட்டத்தில் வைகோ
 
இலங்கையில் போரை நிறுத்தக் கோரி வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையி்ல் உண்ணா நிலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இன்று புதன்கிழமை சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை முன்பாக உண்ணா நிலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உண்ணா நிலைப் பேராட்டத்தை  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் ஆரம்பித்து வைத்தார்.


உண்ணா நிலைப் போராட்டத்திற் போது செய்தியாளரிடம் கருத்துரைக்கும் போது வைகோ தெரிவிக்கையில்:-
இலங்கையில் போரை நிறுத்த முடியாது என மகிந்த ராஜபக்ச டில்லியி்ல் கொக்கரித்து இருக்கிறார். சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டும் 7 கோடி தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கவில்லை. போர் தீவிரமடையும் என்று தைரியமாக ராஜபக்சே அறிவிக்கிறார். மகிந்த ராஜபக்சவின் கொக்கரிப்புக்கு மத்திய அரசுதான் காரணம். இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு வலியுறுத்தவில்லை.

இலங்கை தமிழர்களுக்காக நிதி திரட்டுவது, உணவு பொருட்கள் வழங்குவது, எம்.பி.க்கள் ராஜினாமா ஆகியவை நாடகமாகும். இலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசு தான். ஆயுதங்களை வழங்கி விடுதலைப்புலிகளை அழித்து வருகிறது. இதன் மூலம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். மத்திய அரசு போரை நிறுத்த சொன்னால் போர் நிறுத்தப்படும். ஆனால் அதை செய்ய மத்திய அரசு தயங்குகிறது. போரை நிறுத்தாவிட்டால் பொருளாதார தடை விதிக்க வேண்டும். மத்திய அரசுக்கு எதிராக தமிழக மக்களை ஒன்று திரட்டி வருகிறோம். தமிழக மக்களை ஏமாற்ற நினைத்தால் அது நடக்காது. இந்த போரில் இலங்கை அரசு வெற்றி பெற முடியாது.

எல்லா தாக்குதலையும் அவர்கள் எதிர்கொள்ள கூடியவர்கள். எந்த இழப்பையும் ஈடுகட்டி வெற்றி பெறக் கூடியவர்கள். இலங்கையில் போரை நிறுத்த சொல்லி மத்திய அரசுக்கு முதலமைச்சர் அரசியல் அழுத்தம் கொடுக்கவில்லை. அதனால் இந்த பிரச்சினை நீடித்து வருகிறது.

இந்திய கம்யூனிஸ்டு நடத்தும் மறியல் போராட்டத்தில் ம.தி.மு.க. இணைந்து போராடும். ஆயுதம் ஏந்தி போராட சொன்னால் அது ராஜதுரோகமா? திரும்ப திரும்ப சொல்கிறேன். அது தவறு இல்லை என வைகோ மேலும் தெரிவித்துள்ளார்.

உண்ணாநிலைப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச்சோ்ந்த சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னசாமி, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், நடிகர் மணிவண்ணன், ஓவியர் புகழேந்தி ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர்.