Home

 

                     www.Htn-news.com ........dA Tamil E-Magazine        Contact  21 11 2008    HOME    

  தமிழ் சஞ்சிகைகள்

 

வீரகேசரி
தினக்குரல்
உதயன்
மட்டக்களப்பு ஈழநாதம்
நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்

Your Ad Here

கிளாலி, முகமாலை பகுதிகளில் 250 படையினர் பலி! ஐ.தே.க அறிவிப்பு
 
வடபோர் முனை கிளாலி, முகமாலைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் 250 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என பிராதான எதிர்க்கட்சியான ஐ.தே.க தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறீ ஜயசேகர தெரிவிக்கையில்:-

நேற்று வியாழக்கிழமை கிளாலி, முகமாலைப் பகுதியில் சிறீலங்காப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற உக்கிர மோதலில் சிறீலங்காப் படையினர் 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் அநுராதபுரம், கொழும்பு மருத்துவமனைகளில் உள்ள நோயாளர்களை வீடுகளுக்கு அனுப்பி அங்கு படையினருக்கு சிகிற்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

குருநாகலில் கடந்த வாரம் மட்டும் 48 சடலங்கள் எடுத்துவரப்பட்டு கும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இவர்களின் சாவு வீடுகளுக்கு இறுதி  கிரிகைககளில் கலந்துகொண்டேன்.

பூநகரியைக் கைப்பற்றி அதனை பெருவெற்றியாக அறிவித்த சிறீலங்கா அரசாங்கம் முகமாலையில் நடந்த இழப்புகள் குறித்து ஏவும் பேசாமல் இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் முகமாலைப் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் பதுங்குளிகள், மற்றும் முன்னரங்க நிலைகளில் அதிசக்தி வாய்ந்த குண்டு வெடிப்பதால் அதில் பல படையினர் சிக்குண்டு பலியாகியுள்ளதாக மற்றொரு தகவல் தெரிவித்து்ளளது. அத்துடன் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலை நோக்கி முன்னேறிய சிறீலங்காப் படையினரின் அணி ஒன்று காணாமல் போயுள்ளதாகவும் மேலும் தெரியவருகின்றது.