விபசார
விடுதிகளுக்கு சைக்கிளில் வரும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி
ஜெர்மனியில் விபசாரத்தொழிலுக்கு சட்டப்பூர்வமாக அனுமதி
அளிக்கப்பட்டு உள்ளது. அங்கு விபசார விடுதிகள் வெளிப்படையாக
செயல்பட்டு வருகின்றன. பெர்லின் நகரில் உள்ள ஒரு விபசார
விடுதி, சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மிகுந்த அக்கரை கொண்டு
உள்ளது. அது கார் போன்ற வாகனங்களை பயன்படுத்துவதால் அதில்
இருந்து கிளம்பும் புகை காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால்,சைக்கிளில்
வரும் வாடிக்கையாளர்களுக்கு கட்டணத்தில் தள்ளுபடி கொடுத்து
உள்ளது.
பொருளாதார பின்னடைவு எங்கள் தொழிலை பாதித்து உள்ளது. அதனால்
இந்த தள்ளுபடியை நாங்கள் அறிவித்து இருக்கிறோம். தள்ளுபடி
காரணமாக கூடுதலாக வாடிக்கையாளர்களை பெற முடியும் என்று நம்புகிறோம்
என்று அந்த விபசார விடுதி உரிமையாளர் தாமஸ் கோயட்ஸ்
தெரிவித்தார். சைக்கிளில் வரும் வாடிக்கையாளர்களால் சுற்றுச்சூழலுக்கு
மட்டும் அல்ல, இந்த தொழிலுக்கும் நல்லது என்றும் அவர்
கூறினார்.
இந்த விடுதியில் 45 நிமிடத்துக்கு 4 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
சைக்கிளில் அல்லது பஸ்சில் வருகிறவர்களுக்கு 250 ரூபாய் தள்ளுபடி
கொடுக்கப்படுகிறது.
இந்த தள்ளுபடி அறிவிப்புக்கு பிறகு தினம் 3 முதல் 5 வாடிக்கையாளர்கள்
கூடுதலாக வருகிறார்கள் என்றும் அவர் அறிவித்தார்.
|