மைக்கேல்
ஜாக்சன் கொல்லப்பட்டார் போலீஸ் கருத்து
லாஸ் ஏஞ்சல்ஸ், ஜுலை.16-
பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணத்தை `கொலை' என லாஸ்
ஏஞ்சல்ஸ் நகர போலீஸ் துறை கருதுவதாக `டிஎம்இசட்.காம்' என்ற
கேளிக்கை இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக,
ஜாக்சனின் கடைசி நிமிடங்களில் அவருக்கு மருந்து கொடுத்த
டாக்டர் கான்ராட் முர்ரே மீது போலீசாரின் சந்தேகப் பார்வை
விழுந்துள்ளது. சம்பவத்தன்று, `புரோபோபோல்' என்ற மயக்க
மருந்தை டாக்டர் முர்ரே கொடுத்ததுதான், ஜாக்சனின் மரணத்துக்கு
காரணமாகி விட்டது என போலீசார் கூறியதாக அந்த இணையதளம்
தெரிவித்துள்ளது. ஜாக்சன் வீட்டில் அந்த மருந்தும் சிக்கி
இருப்பது டாக்டருக்கு எதிரான ஆதாரமாக அமைந்துள்ளது.

ஆஸ்பத்திரியில் பெரிய அறுவை சிகிச்சைக்கு முன்பாக, நோயாளிக்கு
மயக்கம் வரவழைக்க கொடுப்பதுதான், `புரோபோபோல்' மருந்து.
அதை நன்கு பயிற்சி பெற்ற மயக்க மருந்தியல் நிபுணர்கள் மட்டுமே
கொடுக்க வேண்டும். அத்தகைய மருந்தை சாதாரண டாக்டரான முர்ரே
கொடுத்தது தவறு என்று போலீசார் கருதுகிறார்கள்.
|