பிரிட்டனைச் சேர்ந்த 68
வயது மூதாட்டி ஒருவர் இதுவரை 23 முறை திருமணம் செய்து
கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருப்பதுடன்
24 ஆவது திருமணத்திற்கும் தயாராகி வருகின்றார்.
இண்டியானாவின் அலெக்சாண்டிரியாவை
சேர்ந்தவர் லிண்டா உல்ப். தற்போது வயது 68. முதல்
முறையாக தனது 16 வயதில் திருமணம் செய்து கொண்டார்.
திருமண உறவில் கொண்ட அதீத ஆர்வத்தால், அடுத்தடுத்து
கணவர்களை மாற்றத் துவங்கினார். இதுவரை 23 பேரைத்
திருமணம் செய்துள்ளார். முதல் முதலாக செய்த
திருமணம் தான் அதிக காலம் நீடித்தது. ஏழு ஆண்டுகள்
வரைகணவருடன் குடும்பம் நடத்தினார்.
அவரது திருமணங்களிலேயே
36 மணி நேரத்தில் முறிந்தது தான் மிகக் குறைந்த
கால திருமண பந்தம். பல்வேறு கணவர்கள் மூலம் இதுவரை
ஏழு குழுந்தைகளைப் பெற்றுள்ளார். குற்றம் செய்து
சிறைக்குச் சென்று திரும்பியவர், இயந்திரம் திருத்துபவர்,
மத போதகர், மதுவிடுதி பணியாளர்கள், பிளம்பர்கள்,
இசைக் கலைஞர்கள் என ஏராளமானோர் லிண்டாவுடன்
திருமணம் செய்து குடும்பம் நடத்திஉள்ளனர்.
இவர்களில் இரு மாஜி கணவர்கள்,
ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறிவிட்டனர்.
இரு மாஜி கணவர்கள் லிண்டாவை
ஏமாற்றுவதற்காகவே திருமணம் செய்து பிரிந்தவர்கள்.