Home

 

                     www.Htn-news.com ........dA Tamil E-Magazine        Contact  03-03-2009    HOME    

  தமிழ் சஞ்சிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
மட்டக்களப்பு ஈழநாதம்
நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்

Your Ad Here

முழு பெண்ணாக மாறிய அரவாணி

சென்னை: அரசு பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து, பெண்ணாக மாறிய அரவாணியை சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். நீலகிரி மாவட்டம், ஊட்டியைச் சேர்ந்தவர் சுவாதி (22). அரவாணியான இவர் பெண்ணின் முகபாவத்தை கொண்டிருந்ததோடு, பெண் இயல்பு கொண்டவராக இருந்தார். இவர் பெண்ணாக மாறுவதற்கு ஆசைப்பட்டு, அரசு பொது மருத்துவமனையில் டாக்டர்களை கலந்தாலோசித்தார். டாக்டர்கள் சுவாதியை பரிசோதித்து, இரு தினங்களுக்கு முன், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.

தற்போது சுவாதி நல்ல உடல்நலத்துடன் உள்ளார். இவருக்கு பெண்ணுறுப்பு பொருத்தப்பட்டாலும், கருத்தரிக்க முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். நேற்று அரசு பொது மருத்துவமனைக்கு வந்த சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம், அறுவை சிகிச்சை செய்துகொண்ட அரவாணியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இந்தியாவிலேயே முதல்முறையாக அரவாணிக்கு பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ""இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்தால் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகும். ஆனால், அரசு பொது மருத்துவமனையில் சேர்த்ததால், இந்த அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டுள்ளது,'' என்று சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் கூறினார்.