Home

 

                     www.Htn-news.com ........dA Tamil E-Magazine        Contact  03-03-2009    HOME    

  தமிழ் சஞ்சிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
மட்டக்களப்பு ஈழநாதம்
நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்

Your Ad Here

சிறைக்கு அஞ்ச மாட்டேன்...விஜய டி.ராஜேந்தர் ஆவேசம்!

'சார்... சும்மா டெஸ்ட் டெலிகாஸ்ட் இது. இதையே இரண்டு மாசத்திலே இருபது லட்சம் பேர் பார்த்திருக்காங்க. எப்படி சினிமாவிலே ஒரு சாதனையை செஞ்சேனோ, இந்த வெப் டிவியிலேயும் என்னோட சாதனை தொடரும்' ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக பேச ஆரம்பித்தார் விஜய.டி.ராஜேந்தர். இவர் புதிதாக துவங்கியிருக்கும் குறள்டிவிஇன்போ.காம் குறித்துதான் இந்த பெருமிதம்.

சினிமா, இலக்கியம், பல்சுவை என்ற பிரிவுகளோடு, ஈழத்தமிழர்களின் இன்னல்களுக்கும் குரல் கொடுக்கிற டி.வியாக இது இருக்கும் என்றவரிடம், புலிகளுக்கு ஆதரவாக பேசிய சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். நீங்களும் ஆதரவாக பேசினால் கைது செய்யப்படுவீர்களே என்றார் ஒரு நிருபர். அவ்வளவுதான்.... சிங்கம் சிலிர்க்க ஆரம்பித்துவிட்டது. 'உங்களுடைய விருப்பம் அதுதான்னா அதுக்காக கவலைப்படுறவன் இந்த விஜய.டிராஜேந்தர் இல்லே. ஈழத்தமிழர்கள் நலனை வலியுறுத்தி எனக்கு வழங்கப்பட்ட சிறுசேமிப்பு துறை தலைவர் பதவியையே தூக்கி எறிஞ்சவன் நான்.

சாதாரண கவுன்சிலர் பதவியை கூட விட்டு தராதவர்கள் மத்தியில் என்னுடைய செயலை யாரும் பாராட்ட வேண்டாம். விமர்சனம் பண்ணாமல் இருந்தாலே போதும். நீங்க சொல்ற போராளிகள் என்பவர்கள் யார்? ஈழத்தமிழர்கள்தானே! இதை சொன்னால் என்னை கைது செய்வேன் என்றால், நான் இப்போதே ரெடி' என்றார் ஆவேசமாக!

'மே 13 ந் தேதி பாராளுமன்ற தேர்தல் வருது. அதிலே ஈழத்தமிழர் நலனுக்கு எதிராக நடந்து கொண்ட காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்வேன். மே 15 ந் தேதியில் இருந்து என்னுடைய 'ஒருதலைக் காதல்' படத்தை ஆரம்பிக்கப் போறேன். குறளரசனை ஹீரோவாக அறிமுகப்படுத்துற இன்னொரு படத்தையும் துவங்கப் போறேன்' என்றார்.