| வன்னி
மக்களைக் காப்பாற்ற எங்களால் எதுவுமே செய்யமுடியாது
- நெதர்லாந்து |
| |
| நெதர்லாந்தில்
வெளிநாட்டமைச்சின் உறுப்பினரும் ஆளும் கூட்டணி
அரசின் கிறீஸ்தவ ஜனநாயக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய
திரு. மார்த்தன் காபர் காம்ப் அவர்களுடன் நெதர்லாந்துப்
பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் சிலர் திடீர் சந்திப்பு
ஒன்றை 04.03.2009 புதனன்று, மதியம் 2 மணியிலிருந்து
3 மணிவரை நாடாளுமன்ற வளாகத்தில் மேற்கொண்டிருந்தனர். |
இச்சந்திப்பின்போது
இம்மாணவர்களால் வன்னி மக்களின் இன்றைய அவலநிலைபற்றி
கூறப்பட்ட விடயங்கள் பலவற்றையும் அவதானமாக கேட்டறிந்துகொண்ட
திரு. மார்த்தன் காபர் காம்ப் அவர்கள், நெதர்லாந்து
அரசானது ஐரோப்பிய ஒன்றித்தினூடாக உடனடிப் போர்
நிறுத்தத்தை மகிந்த அரசிடம் சிலநாட்களின் முன்பு
வலியுறுத்தியதாகவும் ஆனால் அதை மகிந்த அரசு
நிராகரித்துவிட்டதாகவும் இதனால், நெதர்லாந்து
அரசானது எதுவுமே செய்யமுடியாத நிலையில் இருப்பதாக
தமிழ் மாணவர்களிடம் தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.
மேலும், மகிந்த அரசானது உணவையும் மருந்தையும் வன்னி
மக்களிற்கு செல்லவிடாமல் தடுத்துள்ளதையும் இதனால்,
வன்னியிலுள்ள மக்கள் பலர் பட்டினியால் இறந்துள்ளதாகவும்
பலர் பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ளதால், அவசர
மனிதாபிமான உதவிகளான உணவு, மருந்துகளை இம்மக்களிற்கு
உடன் அனுப்புவதற்கு உதவிபுரியுமாறும் இம்மாணவர்களால்
கேட்கப்பட்டபொழுது,
மகிந்த அரசு ஒத்துழைக்க மறுப்பதாகவும் உணவுகளைக்
கொண்டுசெல்லும் தங்கள் உறுப்பினர்களின் உயிருக்குப்
பாதுகாப்பில்லை என்பதால் தங்களால் தற்போதைய
நிலையில் எதுவும் செய்யமுடியாதெனவும் திரு.காபர்
காம்ப் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையை 138 வருடங்களாக ஆட்சிபுரிந்த
நெதர்லாந்து அரசிற்கு (டச்சுக்காரர்) தற்போதைய
போரை நிறுத்தி தமிழின அழிப்பை நிறுத்தும் தார்மீகப்பொறுப்பு
உண்டெனவும் இச்சந்திப்பில் இம்மாணவர்களால்
வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால். மகிந்த அரசை பணியவைக்க முடியாத நிலையில்
நெதர்லாந்து அரசு உள்ளதால், தாயகத்திலுள்ள மக்களுடன்
புலம்பெயர்வாழ் தமிழ்மக்களும் இணைந்து தமது சொந்தக்காலில்
இப்போரை வென்றெடுத்து தமிழர்களிற்காக
தனியரசைநிறுவினால் மட்டுமே தமிழ்மக்கள் பாதுகாப்பாகவாழலாம்
எனவும் இதுதவிர வேறுவழியெதுவும் தங்களிக்குத்
தெரியவில்லயென இச்சந்திப்பை மேற்கொண்ட பல்கலைக்கழக
தமிழ் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். |
|