Home

 

                     www.Htn-news.com ........dA Tamil E-Magazine        Contact  05-03-2009    HOME    

  தமிழ் சஞ்சிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
மட்டக்களப்பு ஈழநாதம்
நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்

Your Ad Here

வன்னியில் காயமடையும் மக்களுக்கு சிகிச்சையளிக்க புல்மோட்டையில் கள வைத்தியசாலை அமைத்து கொடுக்க இந்தியா விருப்பம்
 
வடக்கில் இடம்பெற்று வருகின்ற மோதல்களினால் காயமடையும் பொது மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக புல்மோடையில் புதிய நடமாடும் கள வைத்திய சாலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கு இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.
இதற்காக 52 இந்திய இராணுவத்தினருடன் வைத்தியர்கள் மற்றும் தாதியர் உள்ளிட்ட குழுவும் அங்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ நிபுனர்கள் 5 பேரும் இவர்களுடன் அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் அந்த களவைத்திய சாலைக்கான 30 மில்லியன் இந்திய ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து பொருட்களை இந்திய வான் படைக்கு சொந்தமான இரண்டு வானூர்திகளின் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இதேவேளை மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களை, அந்த பிரதேசங்களில் இருந்து வெளியேற்ற, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் ஒன்றுக்கு இணங்குமாறு  இந்தியா, இலங்கை  அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

நீ கள வைத்திய சாலை அமைக்கவும் வேண்டாம் உனது ராணுவத்தை அனுப்பவும் வேண்டாம்.சிங்கள அரசிற்கு ராணுவ உதவிகளை செய்யாமல் இருந்தால் போதுமடா சாமி!!!

தமிழன்