Home

 

                     www.Htn-news.com ........dA Tamil E-Magazine        Contact  08-03-2009    HOME    

  தமிழ் சஞ்சிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
மட்டக்களப்பு ஈழநாதம்
நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்

Your Ad Here

புதுக்குடியிருப்பில் நான்கு முனை நகர்வுகள் முறியடிப்பு: 450 படையினர் பலி! 1272 படையினர் காயம்!

புதுக்குடியிருப்பில் சிறீலங்காப் படையினர் முன்னெடுத்த பாரிய முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 450 படையினர் பலியாகியுள்ளனர். மேலும் 1272 படையினர் காயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

புதுக்குடியிருப்பிலிருந்து முல்லைத்தீவு நோக்கிய பகுதியில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு மருத்துவமனை சுற்றாடல், குழந்தையேசு கோவில், பாண்டியன்வெட்டை பகுதிகளை நோக்கிய சிறீலங்காப் படையினரால் நான்கு முனைகளில் கனரக ஆயுதங்களின் பெரும் சூட்டாதரவுடன் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளே தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.

இந்த முறியடிப்புத் தாக்குதல்களில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 450 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 1272 படையினர் காயமடைந்துள்ளனர். முறியடிப்புத் தாக்குதல்களில் சிறீலங்காப் படையினரது படைக்கல கருவிகளும் உடலங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு சந்தியை சிறீலங்காப் படையினர் ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து இப்பகுதியில் கடந்த சில நாட்களால் இப்பகுதியில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றவந்துள்ளன. எனினும் இந்த மோதல்கள் நேற்றைய தினம் முறியடிக்கப்பட்டுள்ளதாக வன்னிக் களமுனைச் செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.