தேமுதிக
தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி
யில், ஆண் பிள்ளைகளுக்கு கிடைக் கின்ற வாய்ப்புகள்
கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், பெண் பிள்ளைகளுக்கு
கிடைப் பதில்லை. பெண்களை பெருமைப் படுத்திய
வரலாறு தமிழ் சமுதாயத்திற்கு உண்டு.

பல துறைகளிலும் புறக்கணிக்கப் பட்ட பெண்கள் இன்று
ஓரளவிற்கு உள்ளாட்சி மன்றங்களிலும், அரசு மற்றும்
தனியார் துறை அலுவலகங் களிலும் பொறுப்பேற்று
உள்ளது, திருப்தி தரக்கூடிய ஒன்றாகும்.
இருப்பினும், அவர்கள் ஆண்களுக்கு நிகராக பல
துறைகளிலும் முன்னேற பெரும் பாடுபட வேண்டியுள்ளது.
அவர்கள் மீது தனி அக்கறை செலுத்துவது உலக
மகளிர் தினமாக கடைப்பிடிக்கப் படுகிறது. இந்த
நன்நாளில் நமக்கு தாயாக, தாரமாக, அருமை மகளாக
வாழ்க்கை முழுவதும் தங்களை தியாகம் செய்துகொள்ளும்
பெண் சமுதாயம் முன்னேற, அனைவரும் பாடுபடுவோம்
என்று வாழ்த்துக் களைத் தெரிவித்துக்கொள்கிறேன்
என்று கூறியுள்ளார்.
சரத்குமார்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.
சரத்குமார் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,
ஆணுக்கு பெண் இளைத்தவரல்ல என்று நிருபிக்கும்
வகையில் அனைத்து துறையிலும் பெண்கள் ஈடுபட்டு
முன்னேறி வருகின்றனர். ஆயினும் பெண்களுக்கு
இழைக்கப்படும் அநிதிகளும், குற்றங்களும் நீங்கப்பட
வேண்டும்.
நீண்ட நாட்களாக நிறைவேற்றப் படாமல் இருக்கும்
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறவும், அடுத்து
அமைய இருக்கிற நாடாளுமன்றத்தில் அகில இந்திய
சமத்துவ மக்கள் கட்சி உறுதியோடு செயல்படும் என்று
கூறியுள்ளார்.