HTN-NEWS.COM ...Da Tamil E-Magazine      Contact.....20-09-2009                Home

 

 

 

 

 

 

 

 

 

வார பலன்


20-09-09 முதல் 27.09.09 வரை


மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

இந்த வாரம் 20ம் தேதி எதிர்பார்த்த இடத்தில் இருந்த பணவரவுகளைப் பெறலாம். உறவினர்கள் சிலர் உங்களுக்காக கணிசமான பணத்தை செலவு செய்யலாம். 21, 22ம் தேதிகளில் ஊக்கம், உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உருப்படியாக சில காரியங்களை முடித்துக் கொள்வீர்கள். விருந்து, விசேஷங்களால் சந்தோஷமான அனுபவங்களைப் பெறலாம்.புத்தி ஸ்தானத்தில் உள்ள சனி பகவான், வரும் 26ம் தேதி சாதகமான இடத்திற்கு சென்று, அதன்பின் உங்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை உருவாக்கப் போகிறார் என்றாலும், அதுவரை தொழில் ரீதியான விஷயங்களிலும், மற்ற விஷயங்களிலும் மந்தம், மறதி, குழப்பம், தடுமாற்றம் போன்ற பிரச்னைகளைச் சந்திக்கலாம். மாமன், மைத்துனர்கள், உறவினர்கள், நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைப்பது தள்ளிப் போகலாம். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து உங்களுக்கு பெருமை சேர்ப்பர். பெரியவர்களாக இருந்தால், அவர்கள் வழியில் வருமானத்தை பெறலாம். பெண்கள், பொழுது போக்கு விஷயங்கள், ஆடம்பர ஈடுபாடுகள் போன்றவற்றால் சந்தோஷம் அடைவீர்கள்.சூரியன் சாதகமான இடத்தில் இருப்பதால், அரசாங்க காரியங்கள், அரசியல்வாதிகள் மூலம் மேற்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்கள் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறலாம். மருத்துவ காரியங்களும் அனுகூலமாகவே அமையும்.வரும் 23ம் தேதி காலை 9.46 முதல் 25ம் தேதி இரவு 7.15 வரை சந்திராஷ்டமம் என்பதால், இந்த கால கட்டங்களில் கவனமாக இருக்க வேண்டும். மறதி, கவனக்குறைவு தண்டச் செலவு போன்ற பிரச்னைகளைச் சந்திக்கலாம். 26ம் தேதி கலகலப்பான அனுபவங்களால் கவலைகளை மறப்பீர்கள்.

----------------------------------------------------------------------------------------------------------
ரிஷபம் (கார்த்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிடம் 2ம் பாதம் முடிய)


இந்த வாரம் 20ம் தேதி பிள்ளைகள் வழியிலும், பெருமைக்காகவும் சில செலவுகளைச் செய்யலாம். திடீர் வெளியூர் பயணம் செல்லலாம். 21, 22ம் தேதிகளில் எதிர்பாராத பணவரவுகளைப் பெறலாம். நீங்கள் தேடிச் சென்று பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வரலாம். உறவுகளால் அனுகூலம் உண்டு.வரும் 26ம் தேதி வரை சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை, ஜீவன ஸ்தானத்திலும் விழுவதால், தொழில் ரீதியான சிரமங்கள் தொடரும். தொழில், விவசாயம், வியாபாரம் போன்றவற்றில் நினைத்தபடி வேலைகளை முடித்துக் கொள்ள முடியாமல் தடுமாற்றங்களுக்கு ஆட்படலாம். எதிர்பார்த்தபடி காரியங்கள் முடியாமல் இழுபறிகளைச் சந்திக்கலாம். அதன்பின் இவற்றில் மாற்றங்களைக் காணலாம்.சுக்கிரன், புதன் சாதகமான நிலையில் இருப்பதால், பெண்கள், சகோதரிகள், பொழுது போக்கு விஷயங்கள் போன்றவற்றால் சந்தோஷம் உண்டு. மாமன் மைத்துனர்கள், நண்பர்கள், உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரலாம். பயணங்களால் திட்டமிட்ட காரியங்கள் முடிவுக்கு வரும். பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும். சூரியன், செவ்வாய் சாதகமற்ற நிலையில், தகப்பனார், சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.வரும் 23, 24, 25ம் தேதிகளில் ஊக்கம், உற்சாகம் குறையாமல் பரபரப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டு. 26ம் தேதி சந்திராஷ்டமம் என்பதால், கவனம் அவசியம்.

-------------------------------------------------------------------------------------------------------------
மிதுனம் (மிருகசீரிடம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் முடிய)

இந்த வாரம் 20ம் தேதி வீட்டில் வசதி வாய்ப்புகளை அதிகரிக்கவும், உறவினர்களுக்காகவும் கணிசமான பணத்தை செலவு செய்யலாம். 21, 22ம் தேதிகளில் தொழில் ரீதியான விஷயம் அல்லது குடும்ப விஷயம் ஒன்றில் முடிவுகள் எடுக்க முடியாமல் குழப்பங்களுக்கு ஆட்படலாம். தேவையற்ற செலவுகளால் மன அமைதி பாதிக்கப்படலாம். சோர்வு, சோம்பல் ஆட்கொள்ளும்.மூன்றாமிடத்தில் இருக்கும் சனியால், வரும் 26ம் தேதி உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். தொழில் துறையில் முன்னேற்றம் காண்பீர்கள். சட்டம், நீதிமன்றம் தொடர்பான விஷயங்கள் சாதகமாகும். குருவும், ராகுவும் பாதகமான நிலையில் இருப்பதால், எந்த விஷயத்திலும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். இல்லையெனில், அவமானம், வீண் இழப்பு போன்ற பிரச்னைகளைச் சந்திக்கலாம்.ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாயால், உங்களின் கோபம், வேகத்தை தூண்டும் காரியங்கள் அவ்வப்போது நடக்கலாம். சிறிய வேலைக்கு கூட பெரிய அளவில் அலட்டிக் கொள்வீர்கள். உடன் பிறப்புக்களுடன் கோபதாபங்கள் ஏற்படலாம். ஆரோக்கிய விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அரசாங்கம், அரசியல்வாதிகள், அதிகாரிகள், தகப்பனார், மருத்துவம் தொடர்பான விஷயங்களும் அனுகூலமாக இல்லை. மாமன், மைத்துனர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஒத்துழைப்பு கிடைப்பது கடினம். பெண்களால், பொழுது போக்கு விஷயங்களால் சந்தோஷம் உண்டு.வரும் 23, 24, 25ம் தேதிகளில் பணவரவுகளைப் பெறலாம். மற்றவர்களால் நீங்கள் அனுகூலம் பெறலாம். உறவினர்கள் சந்திப்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். 26ம் தேதி ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். நல்ல செய்திகளைக் கேட்கலாம்.

-----------------------------------------------------------------------------------------------------------
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

இந்த வாரம் 20ம் தேதி புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சர்ச்சைக்குரிய காரியங்களை கூட சுலபமாக முடிப்பீர்கள். கடன் பாக்கிகள் வசூலாகும். 21, 22ம் தேதிகளில் ஆதாயமில்லாத அலைச்சல்களுக்கு ஆட்படலாம். கடும் வேலை நெருக்கடிகளால் வெறுப்பு, விரக்தி ஆட்கொள்ளும். எதிர்பாராத செலவுகளால் சிரமங்களுக்கு ஆட்படலாம்.வரும் 26ம் தேதியுடன் ஏழரைச் சனிக்காலம் முடிவடைவதால், அதன்பின் பல விஷயங்களில் மாற்றங்களைக் காணலாம். பல நாட்களாக தேங்கிக் கிடந்த பணவரவுகள் வரும் சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் ஏற்பட்ட குதர்க்கங்கள், குறைபாடுகள் நீங்கலாம். தொழில் ரீதியான ஆதாயங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. இப்போது சூரியன் சாதகமான இடத்தில் இருப்பதால், தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கி பாசம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் மேலிடத்தின் ஆதரவைப் பெற்று மகிழ்ச்சி அடைவர். எந்த வேலையையும் உடனுக்குடன் செய்து முடிக்கும் வல்லமை அதிகரிக்கும். பெரிய மனிதர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.விரய ஸ்தானதிபதி புதன் தன, குடும்ப வாக்கு ஸ்தானத்தில் இருப்பதால், மாமன், மைத்துனர்கள், நண்பர்கள், உறவினர்களுக்காக ஒரு சிறிய தொகையை செலவு செய்யலாம். அதேநேரத்தில், அவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. செவ்வாய் 12ல் இருப்பதால், பிள்ளைகள் வழியிலும், தொழில் விஸ்தரிப்பு விஷயங்கள், தொழில்ரீதியான வெளியூர், வெளிநாட்டு பயணங்களுக்காகவும் கணிசமான தொகையை செலவு செய்யலாம். வரும் 23, 24, 25ம் தேதிகளில் எதிர்பாராத செலவுகள் நேரும். 26ம் தேதி பணவரவுகளைப் பெறலாம்.

-------------------------------------------------------------------------------------------------------------
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)

இந்த வாரம் 20ம் தேதி குடும்பத்திற்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொடுக்க கணிசமான தொகையை செலவு செய்வீர்கள். திட்டமிட்ட சில வேலைகளை நாளை செய்யலாம் என, ஒத்திவைக்கலாம். 21, 22ம் தேதிகளில் பொருட்கள் சேரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். சந்தோஷமான அனுபவங்களால் சங்கடங்களை மறப்பீர்கள். ரும் 26ம் வரை சனி பகவானின் சஞ்சாரம் ஜென்ம ராசியில் இருப்பதால், அதுவரை தொழில் துறை, விவசாயம், வியாபாரம், உத்தியோகம் போன்றவற்றில் கடினப் பிரயாசைகள் தொடரும். துவங்கிய வேலைகளை உடனுக்குடன் முடிக்க முடியாமல் தடை, தாமதங்களைச் சந்திக்கலாம். மேலும், புதனும் சாதகமற்ற நிலையில் இருப்பதால், மாமன், மைத்துனர்கள், உறவினர்கள், நண்பர்கள் வழியில் ஆதாயத்தை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் வழியில் அன்புத் தொல்லைகளைச் சந்திக்கலாம்.லாபஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால், சுய தொழில் புரிவோர் கூடுதல் ஆர்டர்கள் பெற்று ஆதாயம் அடைவர். பணிபுரிவோர் நிர்வாகத்தினரிடம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். விவசாயம், நிலம், பூமி தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக அமையும். உடன் பிறப்புக்கள் உதவிகரமாக இருப்பர். பொறியியல் பணியாளர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.சூரியன் இரண்டாம் இடத்தில் இருப்பதால், கொடுக்கல் வாங்கல்களில் எச்சரிக்கை அவசியம். தந்தையுடன் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். பெண்கள், சகோதரிகள், தாயார் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.வரும் 23, 24, 25ம் தேதிகளில் ஆதாயமில்லாத அலைச்சல்கள், தேவையற்ற செலவுகளுக்கு ஆட்படலாம். 26ம் தேதி திடீர் பயணம் செல்லலாம். கேளிக்கை, கொண்டாட்டம் உண்டு.

-------------------------------------------------------------------------------------------------------------

கன்னி (உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 3ம் பாதம் முடிய)

இந்த வாரம் 20ம் தேதி ஊக்கம், உற்சாகமாக செயல்படுவீர்கள். திட்டமிட்ட காரியங்களை சரியான நேரத்திற்கு முடித்துக் கொள்வீர்கள். சில பிரச்னைகளில் கோபம், எரிச்சல் அடையலாம். 21, 22ம் தேதிகளில் விருப்பம் இல்லாமல், சில செலவுகளைச் செய்யலாம். விருந்தினர்கள் வருகையால் வீட்டில், கலகலப்பு, சந்தோஷம் குடிகொள்ளும். வாயைக் கொடுத்து வம்பில் மாட்டலாம்.செவ்வாய் சாதகமாக இருப்பதால், பணிபுரிவோர் பரபரப்பாக செயல்பட நேரிடலாம். மனக் குழப்பங்கள் நீங்கி எதிலும் தைரியமான முடிவு எடுப்பீர்கள். போலீஸ் தொடர்பான விஷயங்களில் அனுகூலம் உண்டு. சகோதரர்கள் நலனுக்காக சில காரியங்களைச் செய்யும் சூழ்நிலை உருவாகலாம். புதன் 12ம் இடத்தில் இருப்பதால், மாமன், மைத்துனர்கள், நண்பர்கள், உறவினர்கள் வழியில் கணிசமான செலவுகளைச் சந்திக்கலாம். அவர்கள் தொடர்பான காரியங்களுக்காக நீங்கள் அலைய நேரிடலாம். வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவது, கடன் தவணைகளை செலுத்துவது போன்ற வழிகளில் சிரமங்களைச் சந்திக்கலாம்.அரசியல், அரசாங்கம், மருத்துவம், அதிகாரிகள், தகப்பனார் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இல்லை. உறவுப் பெண்கள், சகோதரிகள், தாயார் வழியிலும் கணிசமான செலவுகளைச் சந்திக்கலாம். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் நாட்டம் செல்லும். ஐந்தாம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால், பிள்ளைகள் தொடர்பான விஷயங்களில் பட்டும் படாமல் நடந்து கொள்வது நன்மை தரும்.வரும் 23, 24, 25ம் தேதிகளில் முயற்சிகளில் முத்தான வெற்றி கிட்டும். நண்பர்களால் ஆதாயம் பெறலாம். 26ம் தேதி அலைச்சல், திரிச்சல் உண்டு.

-------------------------------------------------------------------------------------------------------------

துலாம் (சித்திரை 4ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் முடிய)

 

இந்த வாரம் 20ம் தேதி சில வேலைகளுக்காக ஒன்றுக்காக பல முறை அலைய நேரிடலாம். விருப்பம் இல்லாமல் சில செலவுகளைச் செய்யலாம். 21, 22ம் தேதிகளில் மனதிற்கு இனிய சம்பவங்கள் நடக்கலாம். எதிர்பார்த்த பணவரவுகளைப் பெறலாம். நீண்ட நாட்களாக தள்ளி வைத்துக் கொண்டே வந்த வேலை ஒன்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.தற்போது லாப ஸ்தானத்தில் உங்களுக்கு வாரி வழங்கிக் கொண்டிருந்த சனி பகவான் வரும் 26ம் தேதி முதல் விரய ஸ்தானத்தில் செல்வதால், அதன்பின் பல வழிகளிலும் செலவுகள், சிரமங்களைச் சந்திக்கலாம். இருப்பினும், வரும் சனிக்கிழமை வரை உழைப்பை உருப்படியாக பயன்படுத்தி, காரியம் சாதிக்க மேற்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சட்டம், நீதிமன்றம் தொடர்பான விஷயங்களும் சாதகமாக அமையும்.விரய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால், தந்தை வழியில் மருத்துவச் செலவுகளைச் சந்திக்கலாம். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்ல வேண்டும். அரசியல்வாதிகள் சர்ச்சைக்குரிய பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டும். செவ்வாய் ஒன்பதாம் இடத்தில் இருப்பதால், சொத்து வாங்கல் கொடுக்கல் விவகாரங்களில் முன்னேற்றம் உண்டு. உடன் பிறப்புக்களும் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பர். மாமன், மைத்துனர்கள், நண்பர்கள், உறவினர்கள் வழியில் ஆதாயம், அனுகூலம் பெறலாம். பெண்களாலும் சந்தோஷமான அனுபவங்களைப் பெறலாம்.வரும் 23, 24, 25ம் தேதிகளில் மனைவி, குழந்தைகள் கேட்ட பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். 26ம் தேதி பணவரவுகளைப் பெறலாம்.

-------------------------------------------------------------------------------------------------------------

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

 

இந்த வாரம் 20ம் தேதி சந்திரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், ஆதாயகரமான பணவரவுகளைப் பெறலாம். உறவினர்கள், பால்ய நண்பர்கள் சந்திப்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். பொழுதுபோக்கு, கேளிக்கை, கொண்டாட்ட விஷயங்களில் நாட்டம் செல்லும். 21, 22ம் தேதிகளில் செலவுகள், அலைச்சல்கள் உண்டு. எதிர்பாராத திடீர் சந்திப்புகள் நிகழும். பக்தி நாட்டம் அதிகரிக்கும்.வரும் 26ம் தேதி வரை காரிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், அதன்பின் பல வகையிலும் உங்களுக்கு நன்மைகளை வாரி வழங்கப் போகிறார். இதுவரை தடைபட்டு பல காரியங்களும் அனுகூலமாக முடியும். இருப்பினும், இப்போது சில பிரச்னைகளையும், சிரமங்களையும், கடும் வேலைப்பளுவையும் எதிர்கொள்ளலாம். புதன் சாதகமான இடத்தில் இருப்பதால், மாமன், மைத்துனர்கள் வழியில் எதிர்பார்த்த பணஉதவிகள் கிடைக்கலாம். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரலாம்.சுக்கிரன் சாதகமற்ற நிலையில் இருப்பதால், பணிபுரியும் இடத்தில் பெண்கள் தொடர்பான விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டும். சபலங்களை தவிர்க்க வேண்டும். பணிபுரியும் பெண்கள் கடும் வேலை நெருக்கடிகளுக்கு ஆட்படலாம். வாகனங்கள் பராமரிப்புக்காக கணிசமான தொகையை செலவு செய்யலாம். செவ்வாயும் அஷ்டமத்தில் இருப்பதால், குடும்ப உறுப்பினர்களிடம் கடும் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். வாகனங்களை கையாளும் போது கவனம் அவசியம். சகோதர வழி உறவுகளால் தொல்லைகளுக்கு ஆட்படலாம்.வரும் 23, 24, 25ம் தேதிகளில் ஊக்கம், உற்சாகமாக செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் உதவிகள் கிட்டும். 26ம் தேதி மறதியால் அவதிகளுக்கு ஆட்படலாம். செலவு உண்டு.

-------------------------------------------------------------------------------------------------------------

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

 

இந்த வாரம் 20ம் தேதி எண்ணிய காரியங்கள் எண்ணம் போல நடக்கும். பல நாட்களாக செல்ல நினைத்த ஒரு இடத்திற்கு செல்லலாம். 21, 22ம் தேதிகளில் பணவரவுகளைப் பெறலாம். கடன் பாக்கிகள் வசூலாகும். உறவினர்களுக்காக சில காரியங்களைச் செய்வீர்கள். விருந்து, விசேஷங்களால் சந்தோஷம் அடைவீர்கள்.இதுவரை ஒன்பதாமிடத்தில் இருந்து கொண்டு கடன் பிரச்னைகளையும், அதனால் சஞ்சலங்களையும், நோய் நொடிச் செலவுகளையும் கொடுத்துக் கொண்டிருந்த சனி பகவான், வரும் 26ம் தேதி பத்தாம் இடத்திற்கு மாறுகிறார். அப்போது தொழில் ரீதியான விஷயங்களில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டியது அவசியம். இடமாற்றங்களைச் சந்திக்கவும் வாய்ப்பு உண்டு. தற்போது புதன் ஒன்பதாமிடத்தில் இருப்பதால், மாமன், மைத்துனர்கள், நண்பர்கள், உறவினர்கள் வழியில் பெரிய அளவில் ஆதாயத்தை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதும் கடினம்.சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பெண்கள், பயணங்கள், பொழுது போக்கு விஷயங்கள் போன்றவற்றால் சந்தோஷம் அடைவீர்கள். சகோதரிகள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். சூரியன் பத்தாம் இடத்தில் இருப்பதால், அரசு தொடர்பான காரியங்கள் அனுகூலமாக முடியும். பல நாட்களாக நிறுத்தி வைத்திருந்த வேலைகளை விறு விறுப்பாக செய்யும் சூழ்நிலை உருவாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும். வக்கிரம் பெற்ற நிலையில் குரு இருப்பதால், தேக ஆரோக்கிய விஷயங்களில் அக்கறை அவசியம்.வரும் 23, 24,25ம் தேதிகளில் செலவுகள், அலைச்சல் உண்டு. 26ம் தேதி ஊக்கம், உற்சாகம் கூடும்.

-------------------------------------------------------------------------------------------------------------

மகரம் (உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் முடிய)

இந்த வாரம் 20ம் தேதி சுபச் செலவுகள் அதிகரிக்கும். தொழில் ரீதியான பயணங்கள் செல்லலாம். உறவினர் ஒருவருக்காக நீங்கள் மற்றொருவரிடம் உதவி கேட்கலாம். 21, 22ம் தேதிகளில் காரிய வெற்றி உண்டு. சந்தோஷம் தரும் செய்திகளைக் கேட்கலாம். தொழில் ரீதியான பணவரவுகளைப் பெறலாம். அவசரமாக முடிக்க வேண்டிய வேலை ஒன்றால் அவதிகளுக்கு ஆட்படலாம்.வரும் 26ம் தேதி வரை அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் சனியால், சிறு, சிறு பிரச்னைகள் தொடரும். எந்த விஷயத்திலும் சரியான முடிவுகள் எடுக்க முடியாமல், குழப்பங்களுக்கு ஆட்படலாம். தொழில் ரீதியாக விமர்சனங்கள் தொடரும். ராகு, கேது, குரு ஆகிய கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதாலும், அலைக்கழிப்புகளைச் சந்திக்கலாம். உங்களிடம் உதவி பெற்றவர்களே உங்களை உதாசீனம் செய்யலாம்.புதன், சுக்கிரன் சாதகமாக இருப்பதால், வாகன பயணங்கள், பொழுது போக்குகள், வெளிவட்டார தொடர்புகள் போன்றவற்றில் அனுகூலம் காணப்படும். மாமன், மைத்துனர்கள், நண்பர்கள், உறவினர்கள், சகோதரிகள், உறவுப் பெண்கள் வழியில் பெருமைப்படும் வகையிலான உதவிகள் கிடைக்கலாம். சூரியனும், சாதகமற்ற நிலையில் இருப்பதால், தந்தை தொடர்பான விஷயங்களில் பட்டும் படாமல் நடந்து கொள்ள வேண்டும். அரசு தொடர்பான காரியங்கள் இழுபறிக்குப் பின்னர் முடியலாம். செவ்வாய் சாதகமாக இருப்பதால், நிலம், பூமி தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும்.வரும் 23, 24, 25ம் தேதிகளில் லாபகரமான பணவரவுகளைப் பெறலாம். உறவினர்களை நம்பி ஒப்படைத்த காரியங்கள் நல்ல விதமாக முடிவுக்கு வரலாம். 26ம் தேதிகளில் செலவுகளில் சிக்கனம் அவசியம்.

------------------------------------------------------------------------------------------------------------

கும்பம் (அவிட்டம் 3ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3ம் பாதம் முடிய)

இந்த வாரம் 20ம் தேதி சந்திராஷ்டமம் என்பதால், மறதி, கவனக்குறைவு, தண்டச் செலவு போன்றவற்றை எதிர்கொள்ளலாம். 21, 22ம் தேதிகளில் பொழுது போக்கு உல்லாச விஷயங்களில் நாட்டம் செல்லும். ஆலய வழிபாடுகள் மூலம் அமைதி பெறுவீர்கள். நாளைய சில காரியங்களுக்காக இன்றே முன்னேற்பாடுகளைச் செய்வீர்கள்.ஏழாமிடத்தில் இருந்து கொண்டு இதுவரை அசதி, சலிப்பு, வெறுப்பு, விரக்தி, கடின உழைப்பு, கணவன் மனைவி இடையே பிரச்னை போன்ற பிரச்னைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்த சனி பகவான், வரும் 26ம் தேதி முதல் எட்டாம் இடத்திற்கு செல்கிறார். அதுவும் பாதகமான இடம் என்பதால், தொடர்ந்து சனி வழிபாட்டை மேற்கொண்டு அவரின் அருளை பெற வேண்டியது அவசியம். பண முதலீடுகள் தொடர்பான விஷயங்களிலும் எச்சரிக்கை அவசியம். அதிக அளவில் கடன் வாங்கி சில காரியங்களைச் செய்வதை தவிர்க்க வேண்டும்.சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் போன்ற கிரகங்களும் சாதகமற்ற நிலையில் இருப்பதால், தந்தை, உறவுப் பெண்கள், சகோதரிகள், மாமன், மைத்துனர்கள், நண்பர்கள், உறவினர்கள், சகோதரர்கள், பங்காளிகள் தொடர்பான விஷயங்களில் பட்டும் படாமல் நடந்து கொள்வது நன்மை தரும். அவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். குழப்பங்களாலும் அடிக்கடி மன அமைதி பாதிக்கப்படலாம்.வரும் 23, 24, 25ம் தேதிகளில் காரிய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிப்பதால், திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். 26ம் தேதி ஆதாயகரமான பணவரவுகளைப் பெறலாம்.

-------------------------------------------------------------------------------------------------------------

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

இந்த வாரம் 20ம் தேதி ஊக்கம், உற்சாகமாக செயல்படுவீர்கள். நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைக்கலாம். ஆடை, அலங்காரப் பொருட்கள் வாங்கலாம். 21, 22 மற்றும் 23ம் தேதி காலை 9.49 வரை சந்திராஷ்டமம் என்பதால், எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பயணங்களில் தடை, தாமதங்களைச் சந்திக்கலாம். மறதி, கவனக்குறைவால் அவதிப்படலாம்.இதுவரை ஆறாம் இடத்தில் சஞ்சரித்து நற்பலன்களை வழங்கிய சனி பகவான் வரும் 26ம் தேதி முதல் ஏழாம் இடத்திற்கு செல்வதால், எந்த விஷயத்திலும் அகலக்கால் வைக்காமல், இப்போதே எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. கூட்டுத் தொழில் விவகாரங்களிலும் கவனம் அவசியம். இந்த வாரத்தில் சூழ்நிலைகளை சாதகமாக பயன்படுத்தி, சில காரியங்களைச் சாதிக்க வாய்ப்பு உண்டு. சூரியன் ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பதால், அரசியல், மருத்துவம், அரசாங்கம், அதிகாரிகள் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக இருக்காது.மாமன், மைத்துனர்கள், உறவினர்கள், நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். அவர்கள் வழியில் ஆதாயகரமான பணவரவுகளையோ அல்லது உதவிகளையோ பெறலாம். உறவுப் பெண்கள், சகோதரிகள் வழியில் அன்புத் தொல்லைகளைச் சந்திக்கலாம். கணவன் மனைவியர் விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை தரும். செவ்வாய் நான்காம் இடத்தில் இருப்பதால், தொழில் ரீதியான அலைக்கழிப்புகள் அதிகரிக்கும். ஓய்வாக இருக்க முடியாத அளவுக்கு ஏதாவது வேலை நெருக்கடிகள் தொடரும்.வரும் 24, 25ம் தேதிகளில் கலகலப்பான அனுபவங்களை எதிர்கொள்ளலாம். நண்பர்களுடன் சந்தோஷமாக பொழுது போக்குவதில் நாட்டம் செல்லும். 26ம் தேதி காரிய வெற்றியுண்டு. கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள்.

                                              [C] Copyright www.Htn-news.com 2004-2009       Contact

::Welcome to Globe7