 |
|
HTN-NEWS.COM ...Da Tamil E-Magazine
Contact.....11-11-2007
Home |
|
|
|

|
புத்தாண்டு ராசிபலன் 2008

புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்
பொது விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டும் கடகராசி வாசகர்களே!
விவேகம் நிறைந்த செயல்களால் புகழ்பெறும் கடகராசி அன்பர்களே!
புத்தாண்டில் பிரதான கிரகங்களான குரு ராசிக்கு ஆறு, சனி இரண்டு, ராகு ஏழு,
ராசியில் கேது என்ற வகையில் அமர்ந்துள்ளனர். ஏழரைச்சனியும், ஆறாம் இட
குருவும் பலவித சோதனையை உருவாக்கி வாழ்வில் உங்களை தெளிவுபெறச் செய்வர். ஆன்மிக
செயல்களில் நாட்டம் வளரும். கூடுதல் உழைப்பால் சீரான பணவரவு கிடைக்கும்.
பேசும் வார்த்தையில் நிதானம் அவசியம். சமூகத்தில் நற்பெயர் பெற நல்ல சூழ்நிலை
பலவிதத்திலும் உருவாகும். வாகன பயணங்களில் மிதவேகம் நல்லது. நம்பகத்தன்மை
இல்லாத எவரையும் வீட்டில் தங்க அனுமதிக்கக்கூடாது.
புத்திரர்களின் சேர்க்கை சகவாசம் கண்டறிந்து நல்வழியில் நடத்துவதால் நலம்
பல ஏற்படும். உடல்நலம் பாதிக்கலாம் என்பதால் உடலுக்கு ஒவ்வாத எதையும் சாப்பிடக்கூடாது.
தம்பதியர் குடும்ப நலன்கருதி விட்டுக்கொடுக்கும் தன்மையுடன் செயல்படுவர்.
தகுதிக்கு மீறிய பணக்கடன் எதுவும் பெறக்கூடாது. தொழில் சார்ந்த வகையில்
கூடுதல் வளர்ச்சிபெற அதிக சந்தர்ப்பம் உருவாகி உதவும். பணி உயர்வு, பதவி
உயர்வு, விரும்பிய இடமாற்றம் போன்ற நற்பலன் நடக்கும். நண்பர்களிடம் பணம்
கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். மூத்த
சகோதரர் உங்களின் ஒவ்வொரு செயலையும் கண்டறிந்து நல்வழி நடத்த துணை செய்வர்.
சுபநிகழ்ச்சிகளை நடத்த தேவையான உதவி தகுந்த சமயத்தில் கிடைக்கும்.
தொழிலதிபர்கள்: மின்சார உபகரணங்கள், தீப்பெட்டி, பட்டாசு, மெழுகுவர்த்தி,
அலங்கார விளக்குகள், சூரிய அடுப்பு, வாட்டர் ஹீட்டர், கேமரா, எக்ஸ்ரே பிலிம்
வகை, வீடியோ சாதனங்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்து, ஆஸ்பத்திரி சார்ந்த
தொழிலதிபர்கள் மிகப்பெரிய லாபத்தை எதிர்பார்க்க முடியாது. மற்றவர்களும் தங்கள்
தொழில் வளர்ச்சிபெற கூடுதல் கண்காணிப்புடன் செயல்படுவது அவசியம். தேவைக்கேற்ப
கூடுதல் மூலதனம் செய்துகொள்வீர்கள். சமூகத்தில் அந்தஸ்துள்ள பதவிபெற நல்ல
சூழ்நிலை உருவாகும். வாகன பயணத்தில் மிதவேகம் கடைபிடிக்கவும். புத்திரரை
தொழில் பொறுப்புக்கு அமர்த்த விரும்புபவர்கள் தகுந்த பயிற்சிக்கு பின் செயல்படுத்தவும்.
வியாபாரிகள்: மினரல் வாட்டர், பால், தானியங்கள், உணவுப் பண்டங்கள், பம்ப்செட்,
பிளாஸ்டிக், மருந்து, மருத்துவ உபகரணங்கள், இறைச்சி, மீன் வகை, பஞ்சு, பருத்தி
ஆடை, கட்டுமான பொருட்கள், உழவு கருவிகள், விவசாய இடுபொருள், நகை, ரப்பர்,
சணல், காகிதம் வியாபாரம் செய்பவர்கள் தொழில்வளர்ச்சி காண்பர். ஆனால், இதற்காக
கடும் பிரயத்தனம் செய்ய வேண்டி வரும். சரக்கு கொள்முதல் செய்ய தகுதிக்கேற்ப
பணக்கடன் பெறுவது நல்லது. மற்றவர்களுக்கு சரக்கு வாகன பராமரிப்பு செலவு
அதிகரிக்கும். ஆதாய பணவரவு பெற இதம்பதமாக செயல்படுவீர்கள். வியாபாரத்தில்
இருந்த போட்டி சிறிது குறையும்.
பெண்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் திறமையுடன்
செயல்பட்டு பணி இலக்கை நிறைவேற்றுவர். சக பணியாளர்களிடம் பணம் கொடுக்கல்
வாங்கலில் நிதானம் அவசியம். விரும்பிய பணியிட மாற்றம் பெறலாம். குடும்ப பெண்கள்
கணவரின் பணவரவுக்கேற்ப குடும்ப செலவை சிக்கனப்படுத்துவர். ஆன்மிக வழிபாடு
விரும்பிய வகையில் நிறைவேறும். புத்திரரை நல்வழியில் நடைபோட வைக்க தேவையான
பணியை மேற்கொள்வீர்கள். தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் சிறந்த சேவையால்
புதிய சந்தைவாய்ப்பு பெறுவர். பணவரவு சீராக இருக்கும். தகுதிக் கேற்ப தொழில்வளர்ச்சி
பணக்கடன் பெறலாம்.
மாணவர்கள்: விவசாயம், மருத்துவம், தொழில்நுட்ப கல்வி, கடல்சார் ஆராய்ச்சி,
கனிமவளம், பவுதிகம், ரசாயனம், பிரிண்டிங் டெக்னாலஜி, கேட்டரிங், ஓவியப்
பயிற்சி மாணவர்கள் படிப்பில் பின் தங்குவர். மற்றவர்கள் ஓரளவு
நன்றாகப் படிப்பர். படிப்புக்கான பணச்செலவில் சிக்கனம் அவசியம். சக மாணவர்களுடன்
படிப்பு தவிர மற்ற விவாதம் பேசக்கூடாது. பெற்றோரிடம் பாசம் அதிகரிக்கும்.
மூத்த சகோதரர் தேவையான உதவி புரிவார். சுற்றுலா பயண வாய்ப்பு விரும்பியவாறு
நிறைவேறும்.
பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தங்கள் செயல்திறனை
அதிகரித்துக் கொள்வர். இலக்குகள் எளிதாக நிறைவேறும். மருத்துவம், காவல்,
ராணுவம், விவசாயம் சார்ந்த பணியில் உள்ளவர்கள் தகுதிக்கேற்ப சாதனை நிகழ்த்துவர்.
நிர்வாகத்திடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சக பணியாளர்களுடன் இதம்
பதமாக நடந்துகொள்ளவும். உடல்நலம் சீராக இருக்கும். பிறருக்காக எவ்வித பொறுப்பும்
ஏற்கக்கூடாது. தந்தைவழி உறவினர் உதவிகரமாக செயல்படுவர். குடும்ப வளர்ச்சி
கடன் பெற விரும்புபவருக்கு அனுகூலத்தன்மை ஏற்படும்.
அரசியல்வாதிகள்: மக்கள் பணியில் ஈடுபட புதிய வாய்ப்புகள் பல வகையிலும்
உருவாகும். தெய்வ நம்பிக்கையுடன் செயல்படுத்தி உரிய வெற்றி பெறுவீர்கள்.
ஆதரவாளர்களை திருப்திப்படுத்த கூடுதல் பணச்செலவு ஏற்படலாம். புத்திரர்
குறைந்த அளவில் உதவி புரிவர். எதிரிகள் தமது சொந்த பணியில் கவனம் செலுத்தும்
நிலை உள்ளது. புதியவர்களை நண்பராக ஏற்பதில் தகுந்த பரிசீலனை வேண்டும். தந்தைவழி
உறவினரின் எதிர்பார்ப்புகளை இயன்ற அளவு பூர்த்தி செய்வீர்கள். ஆதாய பணவரவு
மொத்தமாக பெற அனுகூலம் ஏற்படும். நீண்டதுõர வாகன பயணங்களில் மிதவேகம் பின்பற்றவும்.
விவசாயிகள்: பயிர் வளர்ப்பிலும் பாதுகாப்பிலும் கூடுதல் கவனம் வேண்டும்.
கால்நடை வளர்ப்பில் அதிக பணச்செலவு ஏற்படலாம். நிலம் தொடர்பான வழக்கு,
விவகாரத்தில் சுமுக தீர்வு ஏற்படும். தகுதிக்கு மீறிய பணக்கடன் பெறக்கூடாது.
பரிகாரம்: முருகப்பெருமானை வழிபடுவதால் துன்பம் விலகி நல்வாழ்வு ஏற்படும்.
|
|
|
|
|
|
|
|
[C] Copyright
www.Htn-news.com
2004-2007
Contact
|