 |
|
HTN-NEWS.COM ...Da Tamil E-Magazine
Contact.....11-11-2007
Home |
|
|
|

|
புத்தாண்டு ராசிபலன் 2008

உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2
அனைவரிடமும் நட்பு பாராட்டும் கன்னிராசி அன்பர்களே!
புத்தாண்டில் பிரதான கிரகங்களான குரு ராசிக்கு நான்கிலும், சனி பன்னிரெண்டிலும்,
ராகு ஐந்திலும், கேது பதினொன்றிலும் அமர்ந்து உள்ளனர். ஏழரைச் சனியின் தாக்கம்
பலமாகவே இருந்தாலும் கேதுவின் அனுகூலப்பார்வை உங்களை நல்வழி நடத்தும்.
இடமும் பயனும் அறிந்து பேசுவதால் நலம் பெறலாம். சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகள்
உங்களை மனமாற்றத்திற்கு உட்படுத்தும். வீட்டிற்கு நல்லவர்களின் வருகையும்
அதனால் மனமகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திரர்களிடம் கோபப்படக்கூடாது.
பூர்வ சொத்து உள்ளவர்கள் பராமரிப்பு பணிக்கு நம்பகமானவர்களை நியமிப்பது நன்மை
தரும். புதிய பணக்கடன் பெறும் சூழ்நிலை உருவாகலாம். உடல் நலம் பாதிக்கப்படலாம்
என்பதால் நல்ல பழக்கவழக்கம் அவசியம். தம்பதியர் ஒற்றுமையில் குளறுபடி ஏற்படும்
என்பதால், ஒருவருக்கொருவர் ஆறுதலாக பேசுவது நல்லது. குறிப்பாக அடுத்தவர்
குடும்ப விவகாரங்களை பேசுவதை தவிர்க்கவும். புதியவர்களை நண்பராக ஏற்றுக்கொள்வதில்
தகுந்த பரிசீலனை அவசியம். புதிய செலவினங்கள் ஒருபுறம் வந்தாலும் மாற்று ஏற்பாடுகளை
திறம்பட உருவாக்குவீர்கள். தொழில் வளர்ச்சி திருப்திகரமாகி கூடுதல் முன்னேற்றம்
தரும். ஆன்மிக நம்பிக்கை உடையவர்கள் உங்களிடம் விரும்பி நட்புறவு பாராட்டுவர்.
தொழிலதிபர்கள்: காகிதம், பர்னிச்சர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள்,
சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி
தயாரிப்பாளர்கள், கல்வி நிறுவனம், நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட், டெக்ஸ்டைல்ஸ்
அதிபர்கள் அதிக லாபம் பெறுவர். மற்ற தொழிலில் உள்ளவர்களும் கூடுதல் உற்பத்தியையும்,
புதிய ஒப்பந்தங்களும் பெற்று வளர்ச்சி காண்பர். சமூகப்பணியில் மிதமான
ஈடுபாடு இருக்கும். புத்திரரை உதவிக்கு வைப்பவர்கள் அவர்களிடம் இதம் பதமாக
நடந்துகொள்ள வேண்டும். போட்டி பெருமளவு குறையும்.
வியாபாரிகள்: மருத்துவ உபகரணங்கள், நகை, ஜவுளி, மளிகை, ஏலக்காய், தானிய
வகைகள், சித்த மருந்துகள், பட்டாசு, தீப்பெட்டி, மின் உபகரணங்கள், எரிவாயு
அடுப்பு, ஜெனரேட்டர், குளிர்சாதனக் கருவிகள், பாத்திர வியாபாரிகள் அளவான
மூலதனத்துடன் கூடுதல் உழைப்பால் வியாபார வளர்ச்சி பெறுவார்கள். மற்றவர்கள்
வாடிக்கையாளர்களிடம் இதம்பதமாக பேசுவதால் மட்டுமே வியாபாரத்தை தக்க வைக்க
முடியும். சரக்கு வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். சரக்கு கொள்முதல்
இடங்களில் எவருக்கும் பணப்பொறுப்பு ஏற்கக்கூடாது.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள், பணி தொடர்புடைய புதிய பயிற்சியை பெறுவர்.
பணி இலக்கை சிறப்பாக நிறைவேற்றி நிர்வாகத்திடம் நற்பெயர் பெறுவர். சக
பணியாளர்களுடன் தேவையற்ற விவாதங்களில் ஈடுபடக்கூடாது. குடும்பபெண்கள் பணச்செலவில்
சிக்கன நடைமுறை பின்பற்ற வேண்டும். உறவினர்களிடம் குடும்பத்தின் பழைய
விவகாரம் பேசக்கூடாது. புத்திரரை நல்வழி நடத்துவதில் கூடுதல் பங்களிப்பு
அவசியம். தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் தகுதி, திறமையால் கூடுதல் சந்தைவாய்ப்பு
பெறுவர். குறைந்த அளவு பணக்கடன் பெறும் நிலை இருக்கும்.
மாணவர்கள்: அக்கவுன்டன்சி, ஆடிட்டிங், கணிதம், ஜோதிடம், வணிகவியல், சட்டம்,
வங்கியியல், வருமானவரி, கம்ப்யூட்டர், சிற்பம், ஓவியம், இதழியல், நடனம்,
இசைத்துறை, சித்த மருத்துவம், விவசாயம், இயந்திர தொழில்நுட்ப பயிற்சி,
ஆசிரியர் பயிற்சி, இன்ஜினியரிங் சார்ந்த துறை மாணவர்கள் படிப்பில் கவனமும்,
ஆசிரியருக்கு உரிய மதிப்பும் தந்து செயல்பட்டால் மட்டுமே நல்ல தரதேர்ச்சி
பெறமுடியும். ஆடம்பர பணச்செலவை கட்டாயம் தவிர்க்கவும். சக மாணவர்களுடன்
படிப்பு சம்பந்தமான உதவி பெறலாம். தந்தையின் வாழ்வியல் சூழ்நிலை அறிந்து
செயல்படுவது நல்லது.
பணியாளர்கள் : அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள், அனுபவசாலியின்
ஆலோசனை, உதவி பெற்று பணி இலக்கை எளிதாக நிறைவேற்றுவர். பணியிட மாற்றம்,
பதவி உயர்வு விரும்பியவாறு பெறலாம். சக பணியாளர்களுடன் பொது விவாதங்களில்
கடுமை காட்டக்கூடாது. வணிகவரி, சுங்கவரி, வருவாய்த்துறை உட்பட இதர பணியாளர்கள்
அரசுக்கு வரவேண்டிய பணவரவை திட்டமுடன் வசூலித்து கூடுதல் நன்மை அடைவர். நிர்வாகத்திடம்
சலுகையும் உதவியும் கிடைக்கும். எதிர்பாராத பணச்செலவு ஏற்படும். ஆன்மிக
வழிபாடு திட்டமிட்ட வகையில் நிறைவேறும்.
அரசியல்வாதிகள்: கடந்த காலங்களில் தேவை இல்லாமல் பெற்ற அவப்பெயரை சரிசெய்ய
கூடுதலாக முயற்சிப்பீர்கள். ஆதரவாளர்களின் ஆலோசனை, கருத்துக்களுக்கு தகுந்த
முக்கியத்துவம் தரவேண்டும். புத்திரரின் பயன்பாட்டை அரசியலில் மிதமான அளவில்
பயன்படுத்துவது நல்லது. எதிரிகள் இடம் மாறிப்போகிற நன்னிலை உண்டு. குடும்ப
உறவினர்கள் ஆதரவாக செயல்படுவர். வாழ்க்கை வசதியை அதிகரிக்க தகுதிக்கு மீறிய
பணச்செலவு கூடாது. வெளியூர் பயணம் ஏற்படும்பொழுது பயன் அறிந்து பயணம் மேற்கொள்வது
நல்லது.
விவசாயிகள்: பயிர் வளர்ப்பிலும், பாதுகாப்பிலும் கூடுதல் கவனம் வேண்டும்.
கால்நடை வளர்ப்பில் முன்னேற்றமும், வருமானமும் கிடைக்கும். நிலம் தொடர்பான
விவகாரங்களில் அனுகூல தீர்வு கிடைக்கும்.
பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் சிரமம் அணுகாத நல்வாழ்வு பெறலாம்.
|
|
|
|
|
|
|
|
[C] Copyright
www.Htn-news.com
2004-2007
Contact
|