HTN-NEWS.COM ...Da Tamil E-Magazine      Contact.....11-11-2007                 Home

 

 

 

 

 

 

 

 

 

 

புத்தாண்டு ராசிபலன் 2008

 

அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3

கருணை நிறைந்த மனதுடன் பிறருக்கு உதவும் கும்பராசி அன்பர்களே!

புத்தாண்டில் பிரதான கிரகங்களான குரு ராசிக்கு பதினொன்றிலும், சனி ஏழு, ராகு பன்னிரெண்டிலும், கேது ஆறு ஆகிய இடங்களில் அமர்ந்துள்ளனர். துவங்கும் முயற்சி அனைத்தும் இனிதான வெற்றி பெறும். சமூக நடப்புக்களை

துல்லியமாக உணர்ந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். பணவரவு அதிகம் பெறுவதற்கான வழி பல வகையிலும் உருவாகும். சமூகத்தில் கூடுதல் அந்தஸ்து பெற இளைய சகோதரர் துணைநின்று செயல்படுவர். வீடு, வாகன வகையில் திட்டமிடாத பணச்செலவு ஏற்படலாம். புத்திரர் நல்லவிதமாக நடந்து பெற்றோருக்கு பெருமை தேடித்தருவர். சிலருக்கு புதிய சொத்துவாங்க மாமன், மைத்துனரால் உதவி உண்டு. எதிரிகள் இடம்மாறிப் போகிற சூழ்நிலை வரும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் புரிதல் திறனுடன் நடந்துகொள்வதால் மகிழ்ச்சி தழைக்கும். தந்தைவழி உறவினர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இனிய சூழ்நிலை உருவாகும். தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சி நிலையை எட்டிப்பிடிக்க தகுந்த பணியை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களுடன் கருத்துவேறுபாடு உருவானாலும்கூட பெரியவர்களின் சமரசத்தால் நன்மை ஏற்படும். மூத்த சகோதரர் தகுந்த ஆலோசனை வழங்கி உங்கள் வாழ்வு வளம்பெற உதவுவர். திருமண முயற்சி செய்பவர்களுக்கு அனுகூல பலன் உண்டு.

தொழிலதிபர்கள்: நட்சத்திர ஓட்டல், ரியல் எஸ்டேட், மின்சார அடுப்பு, வாட்டர் ஹீட்டர், பட்டாசு, பாத்திரங்கள், அரிசி மற்றும் மாவு ஆலை அதிபர்கள், செங்கல் உற்பத்தி, காளான், மண்புழு உரம், பழச்சாறு உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் தொழில் வளர்ச்சியும் அதிக பணவரவும் பெறுவர். சமூக அந்தஸ்து உயரும். பொறுப்புமிக்க பதவி


பெறுவீர்கள். வீடு, வாகன வகையில் திட்டமிட்ட வளர்ச்சியை உருவாக்குவீர்கள். புத்திரர்கள் தங்கள் செயல்திறனை வளர்த்து தொழில்வளர்ச்சிக்கு உதவிகரமாக நடந்துகொள்வர். போட்டி, பொறாமை விலகும். புதிய தொழில் துவங்கும் முயற்சி நிறைவேறும்.

வியாபாரிகள்: ஜவுளி, நகை, எண்ணெய், மளிகை, தானியம், இறைச்சி, மருந்து, மருத்துவ உபகரணங்கள், கட்டுமான பொருட்கள், பாத்திரம், விவசாய இடுபொருள், காய்கறி, பழங்கள், பூ, கரும்பு வியாபாரம் செய்பவர்கள்

கூடுதல் விற்பனையும் அதிக லாப விகிதமும் பெறுவர். மற்றவர்கள் சுமாரான லாபம் பெற்றாலும் பழைய சரக்குகள் தீர்ந்த மகிழ்ச்சியில் இருப்பர். இளைய சகோதரரால் உதவி உண்டு. வாகன பராமரிப்பில் கூடுதல் செலவு ஏற்படலாம். புதிய நிலம், வீடு, வாங்குவதற்கான முயற்சி எளிதாக நிறைவேறும். போட்டி, பொறாமை குறையும். சுக, சவுகரிய வசதியை குறைத்து பணம் சேமிப்பதில் ஆர்வம் கொள்வீர்கள்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் ஒருமுகத்தன்மையுடன் செயல்பட்டு பணி இலக்கை நிறைவேற்றுவர். பணவசதி திருப்திகரமாக இருக்கும். சக பணியாளர்களுடன் பயனற்ற விவாதம் கூடாது. குடும்ப பெண்கள் கணவருடன் கருத்து வேறுபாடு கொள்வர். செலவுக்கு தேவையான பணவசதி திருப்திகரமாகும். தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் புதிய சந்தை வாய்ப்பு பெற்று தொழில் வளர்ச்சியும் கூடுதல் பணவரவும் காண்பர். உப தொழில் தொடங்குவதற்கும் வாய்ப்பு உருவாகி கைகூடும். திருமண முயற்சி நல்லவரனை பெற்றுத்தரும்.

மாணவர்கள்: மருத்துவம், விவசாயம், தொழிற்பயிற்சி, சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், தகவல் தொழில்நுட்பம், சார்ந்த பயிற்சி பெறும் மாணவர்கள் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறுவர். மற்றவர்களின் படிப்பு இவர்களை விட சற்று பின்தங்கும். கடும் உழைப்பு பெருமை தரும். படிப்புக்கான பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். சக மாணவர்களுடன் படிப்பு தவிர பிற விவாதம் கூடாது. பெற்றோரின் எண்ணங்களுக்கேற்ப செயல்படவும். சுற்றுலா பயணங்களில் தகுந்த பாதுகாப்பு அவசியம்.

பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் திறமையுடன் செயல்பட்டு பணி இலக்கை

எளிதாக நிறைவேற்றுவர். நிர்வாகத்திடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சக பணியாளர்களிடம் தேவையற்ற விவாதம் கூடாது. விவசாயம், மருத்துவம், காவல்துறை, வருவாய்துறை, ராணுவம் சார்ந்த பணியாளர்கள் மிகச்சிறப்பாக பணியாற்றி சலுகை, விருது பெறும் வாய்ப்புண்டு. சமூக அந்தஸ்து உயரும். மனைவியின் பெயரில் புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். வெகுநாள் வாங்க நினைத்த முக்கிய பொருள் வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள்: புதிய திட்டங்களை செயல்படுத்தி பதவி, பொறுப்பும், சமூக அந்தஸ்தும் பெறுவீர்கள். இளைய சகோதரர் உறுதுணையாக செயல்புரிவர். வாகன பயணத்தில் மிதவேகம் நல்லது. புத்திரரும் உங்களுடன் இருந்து அரசியல் நுட்பங்களை கூடுதலாக அறிந்துகொள்வர். ஆதரவாளர்கள் உங்களிடம் அபரிமிதமான நம்பிக்கை கொள்வர். குடும்பத்தவரின் பெயரில் புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். எதிரிகளும் உங்களிடம் மறைமுகமாக உதவிபெற விரும்புவர்.விவசாயிகள்: அதிக மகசூல் பெறுவீர்கள். பணவரவில் அபரிமிதமான முன்னேற்றம் உண்டு.

கால்நடைகள் வளர்ப்பிலும், பராமரிப்பிலும் கூடுதல் கவனம் அவசியம். குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சியை நல்ல முறையில் நடத்துவீர்கள்.

பரிகாரம்: ராமபிரானை வழிபடுவதால் துவங்கும் நற்செயல்கள் எளிதாக வெற்றி பெறும்.


 

 
 

                                              [C] Copyright www.Htn-news.com 2004-2007         Contact

::Welcome to Globe7