 |
|
HTN-NEWS.COM ...Da Tamil E-Magazine
Contact.....11-11-2007
Home |
|
|
|

|
புத்தாண்டு ராசிபலன் 2008

உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2
தன்னைப்போல பிறரையும் நல்வழி நடத்தும் மகரராசி அன்பர்களே!
புத்தாண்டில் பிரதான கிரகங்களான குரு ராசிக்கு பன்னிரெண்டிலும், சனி எட்டிலும்,
ராகு ராசியிலும், ஏழில் கேதுவும் அமர்ந்துள்ளனர். வாழ்க்கையின் வளர்ச்சிநிலை
பற்றி மனதில் பல்வேறு குழப்பங்கள் வந்து விலகும். எவரிடத்தும் இனிமையாக
பேசுவதால் நலம் பல ஏற்படும். தகுதிக்கு உட்பட்ட வகையில் பணம் கொடுக்கல்,
வாங்கல் விஷயங்களை மேற்கொள்வது நலம். வீடு, வாகன வகையில் மனநிறைவுபெறும்
வகையிலான நற்பலன் உண்டு.
புத்திரர்களின் சேர்க்கை சகவாசங்களை கண்டறிந்து நல்வழிப்படுத்தவும். சொத்து
தொடர்பான ஆவணங்களை பிறர்வசம் தரக்கூடாது. எதிரிகளால் இருந்த தொந்தரவு
பெருமளவு குறையும். கணவன் மனைவி ஒற்றுமை பலம்பெற அனுகூல நிலையும், தெய்வீக
வழிபாட்டு நிகழ்ச்சிகளும் உதவும். தந்தைவழி உறவினர் உதவி மனப்பான்மையுடன்
நடந்துகொள்வர். வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனம் வேண்டும். ஆபத்தான இடங்களில்
பிரவேசிப்பதை தவிர்ப்பது நல்லது.தொழில் சார்ந்த வகையில் நியாய தர்மத்திற்கு
முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவதால் நலம் ஏற்படும். பணவரவு அதிகம் பெற
சிலர் காட்டும் தவறான வழிகளை புறக்கணித்துவிடுவீர்கள். மூத்த சகோதரருக்கு
உரிய மரியாதை தந்து செயல்படுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
தொழிலதிபர்கள்: எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், காலணி, மார்பிள் கற்கள், டைல்ஸ்,
ஓடுகள், டெக்ஸ்டைல்ஸ்,
பால்பொருட்கள், வாசனை திரவியங்கள், ஷாம்பு, உப்பளம், சர்க்கரை, பர்னிச்சர்
உற்பத்தி செய்பவர்கள் அளவான மூலதனத்துடன் நல்லவர்களின் உதவியைப்பெற்று
தொழிலில் வளர்ச்சி காண்பர். மற்றவர்களுக்கு தொழில் சுமார் நிலை தான். சமூக
அந்தஸ்து மிக்க பதவியை ஏற்பதில் கூடுதல் கவனம் வேண்டும். வீடு, வாகன வகையில்
அபிவிருத்தி பலன் உண்டு. புத்திரர்களை, உரிய பயிற்சிக்கு பின் தொழிலில்
உதவிக்கு வைத்துக்கொள்ளலாம்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, பால் பொருட்கள், இசைக்கருவி, சென்ட்,
பினாயில், பிளாஸ்டிக், டிராவல் பேக், காலணி, கலைப்பொருட்கள், தோல், எலக்ட்ரிக்கல்,
எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வியாபாரம் செய்பவர்கள் தொழில் போட்டியை கடுமையாகச்
சந்திப்பர். மற்றவர்களுக்கும் சுமாரான லாபமே கிடைக்கும். கடை நிர்வாகப்
பொறுப்பை நம்பகக் குறைவானவர்களிடம் ஒப்படைக்கக்கூடாது. வெளியூர் பயணம் அடிக்கடி
ஏற்படும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் சுய சிந்தனைகளுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம்
தந்து பணியில் செயல்பட வேண்டும். பணம் கொடுக்கல், வாங்கலில் தகுதி அறிந்து
செயல்படவும். உழைப்புக்கேற்ற ஓய்வு, உடல்நலம் காக்கும். குடும்ப பெண்கள்
கணவரின் பணவரவுக்கேற்ப செலவை ஒழுங்குசெய்வது நல்லது. உறவினர்களுடன் குடும்ப
பழைய விவகாரம் பேசக்கூடாது. புத்திரரின் செயல்கள் பரிமளிக்க கூடுதல் கவனத்துடன்
செயல்பட வேண்டும். தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் அளவான மூலதனத்துடன்
கூடுதல் உழைப்பால் மட்டுமே சீரான பணவரவு பெறமுடியும். சரக்கு பரிவர்த்தனையில்
தகுந்த பாதுகாப்பு நடைமுறை அவசியம்.
மாணவர்கள்: தகவல் தொழில்நுட்ப பயிற்சி, பவுதிகம், ரசாயனம், இன்ஜினியரிங்,
ஏரோநாட்டிக்கல், மருத்துவம், அழகுக்கலை, ஓவியம், நடனம், பிரிண்டிங் டெக்னாலஜி
உட்பட பல்வேறு துறைகளில் பயிற்சிபெறும் மாணவர்கள் படிப்பில் பின்தங்கலாம்.
மற்றவர்கள் நன்றாகப் படிப்பர். சக நண்பர்கள் அன்புடன் செயல்படுவர். ஆபத்தான
விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது. பணச்செலவில் சிக்கனம் வேண்டும்.
பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தகுந்த திட்டமிடுதலுடன்
பணிகளை மேற்கொள்வதால் மட்டுமே சிறப்பு பெறமுடியும். பணம் கொடுக்கல், வாங்கலில்
தகுதிக்கேற்ப செயல்படவும். இயந்திரங்கள், கனரக வாகனம், கூர்மையான கருவிகளை
பயன்படுத்துபவர், அக்னி சார்ந்த துறையில் பணிபுரிபவர்கள், உயரமான கட்டடங்களில்
பணி செய்பவர்கள் தற்காப்பு விதிமுறைகளை கவனமுடன் பின்பற்ற வேண்டும். கண்களுக்கு
தகுந்த ஓய்வும், சிகிச்சையும் தேவைப்படலாம். விலைமதிப்புள்ள பொருட்களை
கவனமுடன் பாதுகாக்கவும். சக பணியாளர்களுடன் ஆன்மிக சுற்றுலா திட்டமிட்ட
வகையில் நிறைவேறும்.
அரசியல்வாதிகள்: மனதில் உருவாகும் குழப்பங்களை சரிசெய்ய நம்பகமான ஆதரவாளரை
உருவாக்கிக் கொள்வது நல்லது. ஆடம்பர பணச்செலவு தவிர்ப்பதால் சிரமம் குறையும்.
இருக்கும் பதவி, பொறுப்பை சரியாக நிர்வகிப்பதே நல்லது. புதுப்பதவிக்கு வாய்ப்பில்லை.
வாகன வகையில் அனுகூல பலன் உண்டு. புத்திரரின் செயல்பாடுகளை அளவுடன் பயன்படுத்திக்
கொள்ளவும். எதிரிகளால் இருந்த தொல்லை பெருமளவு குறையும். பொது விவகாரங்களில்
இதம்பதமாக நடந்துகொள்ளவும். வெளியூர் பயணங்களை முக்கியத்துவம் அறிந்து ஏற்கவும்.
விவசாயிகள்: குறைந்த செலவில் அதிக பலன் தரும் பயிர்வகைகளை விவசாயம் செய்வது
மட்டுமே உரிய பலனைத்தரும். கால்நடைகள் அபிவிருத்தி அடைந்து தேவையான
பணவசதியை உருவாக்கும். நிலம் தொடர்பான பிரச்னை அனுகூல தீர்வு பெற்றுத்தரும்.
சுப செலவுகளை விரும்பி மேற்கொள்வர்.
பரிகாரம்: தன ஆகர்ஷண பைரவரை வழிபடுவதால் குடும்பத்தில் சுபமங்கல நிகழ்வு ஏற்படும்.
|
|
|
|
|
|
|
|
[C] Copyright
www.Htn-news.com
2004-2007
Contact
|