HTN-NEWS.COM ...Da Tamil E-Magazine      Contact.....11-11-2007                 Home

 

 

 

 

 

 

 

 

 

 

புத்தாண்டு ராசிபலன் 2008

 

பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி

துணிச்சலும், நம்பிக்கையும் நிறைந்த மீனராசி அன்பர்களே!

புத்தாண்டில் பிரதான கிரகங்களான குரு ராசிக்கு பத்திலும், சனி ஆறு, ராகு பதினொன்று, கேது ஐந்து ஆகிய இடங்களில் உள்ளனர். வாழ்வில் பெற்ற வசதியை தக்க வைத்துக்கொள்வதில் அக்கறை காட்டுவீர்கள். உங்கள் பேச்சுக்கு உரிய மரியாதை கிடைக்கும். இருப்பினும் தேவையான இடங்களில் மட்டுமே பேச வேண்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சமூகப்பணியில் ஆர்வமும், அதனால் உரிய கவுரவமும் பெறுவீர்கள். வீடு, வாகன வகையில் மகிழ்ச்சி தரும் வகையிலான நற்பலன் நடக்கும். புத்திரர் ஞானம் தொடர்புடைய விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வர். அவர்களுக்கு உதவுவீர்கள். குலதெய்வ அருள் பூரணமாக துணைநின்று உதவும். எதிரிகள் விலகிப்போவர். கடன் சரிசெய்வீர்கள். தம்பதியர் ஒற்றுமையாக செயல்பட்டு குடும்பத்தை மேன்மை பெறச் செய்வர். தந்தைவழி உறவினர் நல்மனதுடன் அணுகி உறவுமுறையை பலப்படுத்துவர். தொழில் சார்ந்த வகையில் முன்னேற்றம் பெற கூடுதல் சந்தர்ப்பம் உருவாகும். பயன்படுத்தி வளம் பெறுவீர்கள். ஆதாய பணவரவு தகுந்த சேமிப்பாக மாற்றம் பெறும். தவிர்க்க முடியாத முக்கிய பணச்செலவும் ஏற்படலாம்.

தொழிலதிபர்கள்: பைனான்ஸ் நிறுவனம், பங்குச்சந்தை வர்த்தகம், கல்வி நிறுவனம், மருத்துவமனை நடத்துபவர்கள், ரியல் எஸ்டேட், ஓட்டல், லாட்ஜ், டிராவல்ஸ், பர்னிச்சர், காகிதம், டெக்ஸ்டைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் துறையில் உள்ள

தொழிலதிபர்கள், உத்வேக செயல்பாடுகளால் அதிக உற்பத்தியும், தொழில் வளர்ச்சியும் பெறுவர். மற்றவர்களும் கடும் உழைப்பின் பேரில் பணவரவு அதிகமாகப் பெறுவர். உங்கள் ஆலோசனையை பலரும் பெற விரும்புவர். சமூக விவகாரங்களில் சற்று விலகி இருப்பது நல்லது. புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள். போட்டி குறையும்.


வியாபாரிகள்: நவரத்தின கற்கள், நகை, ஜவுளி, வீட்டு உபயோகப்பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், உடற்பயிற்சி கருவிகள், குளிர்பானங்கள், மளிகை, பூ, காய்கறி, மீன் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் மூலதனம் இடுவர். வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும். மற்ற வியாபாரிகள் இவர்களை விட அதிக லாபமடைய வாய்ப்புண்டு. வீடு, வாகன வகையில் திட்டமிட்ட பணி நிறைவேறும். போட்டி குறையும். உடல்நலம் பலம் பெறும். மனைவிவழி உறவினர் ஆதரவாக செயல்படுவர்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் முன்யோசனையுடன் செயல்பட்டு பணியில் நன்னிலை பெறுவர். பணவரவு சீராக இருக்கும். பொது விவகாரங்களில் கருத்து பரிமாற்றம் வேண்டாம். வீடு, வாகனக்கடன் எதிர்பார்த்த வகையில் பெறலாம். குடும்ப பெண்கள் கணவரின் நல் அன்பும், தகுந்த பணவசதியும் பெற்று இனிய வாழ்வு நடத்துவர். புத்திரர்களுக்கு ஆன்மிக கருத்துக்களை விருப்பத்துடன் சொல்லி நல்வழியில் நடைபோட வைப்பீர்கள். குலதெய்வ அருள், குடும்ப வளர்ச்சிக்கு துணைநிற்கும். தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் தொழிலில் அக்கறையுடன் ஈடுபட்டு, வளர்ச்சி காண்பர்.

மாணவர்கள்: மருத்துவம், இன்ஜினியரிங், ஆசிரியர் பயிற்சி, வங்கியியல், வணிகவியல், கம்ப்யூட்டர், தணிக்கையியல், தகவல் தொழில்நுட்பம், வேத சாஸ்திரம், ஏரோநாட்டிக்கல், சட்டம், ஆட்சிப்பணி நிர்வாகம், விவசாயம் ஆகிய

துறைகளில் பயிற்சிபெறும் மாணவர்கள் அதிக ஈடுபாட்டுடன் படித்து சிறந்த தரதேர்ச்சி பெறுவர். மற்றவர்கள் இவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பர். படிப்புக்கான பணவசதி திருப்திகரமாகும். சக மாணவர்கள் உறுதுணையாக நடந்துகொள்வர். பெற்றோரிடம் பந்தபாசம் அதிகரிக்கும். சுற்றுலா பயணத்தில் கவனச்செயல் வேண்டும்.

பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் திறமையான செயல்பாடுகளால் நிர்வாகத்திடம் நற்பெயர் பெறுவர். சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படலாம். சக பணியாளர்களுடன் நட்புறவு வளரும். பள்ளி, கல்லுõரி, நிதி நிறுவனம், பங்குச்சந்தை, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பணிபுரிபவர்கள், குறைபாடு வராத அளவிற்கு முன்யோசனையுடன் செயல்பட வேண்டும். பணவரவு திருப்திகரமாகும். சமூக அந்தஸ்தை இருக்கும் நிலையில் தக்கவைப்பீர்கள். கடன், பிணி தொந்தரவு குறையும். ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள். பெண், பெண்தெய்வ அருளால் நன்மை ஏற்படும்.

அரசியல்வாதிகள்: கடந்த காலத்தில் பெற்ற நற்புகழை பாதுகாப்பதில் ஆர்வம் கொள்வீர்கள். புதிய செயல்திட்டம் நிறைவேற்ற பணவசதி திருப்தி கரமாக இருக்கும். புதிய வீடு, வாகன வசதி பெறுவீர்கள். புத்திரரின் யோக பலனால்

சிலருக்கு புதிய பதவி, பொறுப்பு கிடைக்கும். எதிரிகள் இடம் மாறிப்போகிற நன்னிலை உண்டு. தம்பதியர் ஒற்றுமை சிறந்து தெய்வ வழிபாடுகளை நிறைவேற்றுவீர்கள். தந்தைவழி உறவினர் அனுகூல உதவிபுரிவர். ஆதரவாளர் உங்களிடம் கூடுதல் நம்பிக்கை கொள்வர்.

விவசாயிகள்: பயிர் வளர்ப்பிற்கு தேவையான பணவசதி நிறைவாக கிடைக்கும். மகசூல் அதிகரிக்கும். கால்நடை அபிவிருத்தியும், அதனால் கூடுதல் பணவரவும் இருக்கும்.

பரிகாரம்: சாஸ்தாவை வழிபடுவதால் வாழ்க்கையில் வசதி அதிகரிக்கும்.
 

 
 

                                              [C] Copyright www.Htn-news.com 2004-2007         Contact

::Welcome to Globe7