 |
|
HTN-NEWS.COM ...Da Tamil E-Magazine
Contact.....11-11-2007
Home |
|
|
|

|
புத்தாண்டு ராசிபலன் 2008

மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3
பெருந்தன்மை குணத்தால் வெற்றிபெறும் மிதுனராசி அன்பர்களே!
புத்தாண்டில் பிரதான கிரகங்களான குரு ராசிக்கு ஏழு, சனி மூன்று, ராகு எட்டு,
கேது இரண்டு ஆகிய இடங்களில்
உள்ளனர். லட்சியங்களை நிறைவேற்ற வேண்டும் என்கிற உத்வேகம் மனதில் அதிகரிக்கும்.
உங்களை நல்வழி நடத்த நல்லவர்கள், அறிஞர்களின் உதவி கிடைக்கும். நியாய தர்மங்களை
பின்பற்றினால் மட்டுமே நன்மை பெற இயலும். சமூகத்தில் நற்பெயரும், தகுந்த
பொறுப்புகளும் பெறுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்க அதிக சந்தர்ப்பங்கள்
துணைநிற்கும். புத்திரர்கள் மனம் மகிழும்படி நடப்பார்கள். சொத்து ஆவணங்களை
கவனமுடன் பாதுகாக்கவும். எதிரிகளின் இடைஞ்சல் மனச் சஞ்சலத்தை ஏற்படுத்தும்.
பொறுமை தேவை. தம்பதியர் ஒற்றுமை சிறந்து குடும்ப வாழ்வை இனிதாக்கும்.
பிறரது வாகனத்தில் பயணிப்பதும் ஆபத்தான இடங்களில் பிரவேசிப்பதும் கூடாது.
தொழில் சார்ந்த வகையில் இருந்த சிரமங்களை சரிசெய்து முன்னேற்றம் பெறுவீர்கள்.
ஆதாய பணவரவிற்கேற்ப முக்கிய செலவுகளும் இருக்கும். புதிய நண்பர்களின்
அறிமுகம் கிடைத்து பல்வேறு உதவியும் அனுபவ பாடமும் பெறுவீர்கள். குடும்பத்தில்
சுபமங்கல நிகழ்ச்சி இனிதாக நிறைவேறும். இஷ்ட, குலதெய்வ அருளை அதிகம் பெற
தகுந்த வழிபாடு நடத்துவீர்கள்.
தொழிலதிபர்கள்: பங்குச்சந்தை, பைனான்ஸ், கல்வி நிறுவனம், தொழிற்பயிற்சி
நிறுவனம், நவீன மருத்துவமனை, வாசனை பொருட்கள் உற்பத்தி, குளிர்பானம், பழச்சாறு
வகைகள், தங்க நகை உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, வாகன கடன் வழங்கும்
நிறுவனம், உணவுப்பண்டங்கள், சாக்லெட், பால் பொருட்கள் தயாரிப்பு சார்ந்த
தொழிலதிபர்கள் கூடுதல் மூலதனம் செய்து தொழில் அபிவிருத்தியும் ஆதாய பணவரவும்
பெறுவர். மற்றவர்களுக்கு வழக்கத்தை விட கூடுதல் லாபம் கிடைக்கும். சக தொழில்
சார்ந்தவர்கள் உங்கள் ஆலோசனையை கேட்டு தக்க கவுரவம் தருவர். வாகன வசதி
அதிகமாகும். போட்டி ஓரளவு குறையும். நிலுவை பணக்கடனை சரிசெய்வீர்கள்.
விசுவாசமிக்க பணியாளர்கள் கூடுதல் உதவி புரிவர்.
வியாபாரிகள்: நகை, பாத்திரம், கம்ப்யூட்டர் சாதனங்கள், மொபைல், ஸ்டேஷனரி,
பர்னிச்சர், வீட்டு அலங்கார பொருட்கள், வாசனை திரவியங்கள், காகிதம், பிளாஸ்டிக்
பொருட்கள், தானியங்கள், உணவு, தேன், இனிப்பு வகை, கம்ப்யூட்டர் சாதனங்கள்
உட்பட பல்வேறு பொருட்கள் வியாபாரத்தில் உள்ளவர்கள் கூடுதல் வாடிக்கையாளர்
கிடைத்து தொழில் வளர்ச்சி காண்பர். மற்றவர்களுக்கும் சேமிக்கும் வகையில்
பணவரவு அதிகமாகும். சரக்கு கொள்முதல் வகையில் பாதுகாப்பு முறையை பின்பற்றவும்.
சரக்கு வாகனங்கள் வாங்குவீர்கள்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் ஆர்வமுடன் செயல்பட்டு பணியின் இலக்கை நிறைவேற்றுவர்.
சக பணியாளர்களுடன் நல்லன்பு வளரும். குடும்ப வளர்ச்சிகடன் பெறலாம். குடும்ப
பெண்கள் கணவரின் மனமறிந்து செயல்பட்டு குடும்ப வளத்தை சீர்செய்வர். வாழ்வுக்கு
தேவையான பணவசதி கிடைக்கும். உறவினர்களிடம் தகுந்த மரியாதை பெறுவீர்கள்.
தொழில், வியாபாரம் நடத்துபவர்கள் கூடுதல் மூலதனத்துடன் வளர்ச்சிப்பணியை மேற்கொள்வர்.
உறவினர், நண்பரின் உதவியால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சி
செய்பவர்களுக்கு தகுந்த வரன் கிடைக்கும்.
மாணவர்கள்: கம்ப்யூட்டர் இயக்குதல், பங்கு சந்தை வர்த்தகம், ஓட்டல் மேனேஜ்மென்ட்,
நிதி மேலாண்மை, ஆசிரியர் பயிற்சி, தகவல் தொழில்நுட்பம், ஓவியம், இசை, நாடகம்,
சினிமா, இலக்கியம், கடல்வளம் சார்ந்த ஆராய்ச்சி, விண்வெளி ஆராய்ச்சி,
மூலிகை மருத்துவம், தோட்டக்கலை, அழகுக்கலைப்பயிற்சி, விவசாயம் உட்பட பல்வேறு
துறை சார்ந்த மாணவர்கள் படிப்பில் உத்வேகத்துடன் செயல்பட்டு தரத் தேர்ச்சி
பெறுவர். முக்கிய செலவை மட்டும் ஏற்கும் மனநிலை இருக்கும். சக மாணவர்கள்
படிப்பில் உறுதுணையாக செயல்படுவர். பெற்றோரின் விருப்பத்தை அதிக சிரத்தையுடன்
நிறைவேற்றுவீர்கள். விளையாட்டு பயிற்சியின்போது தகுந்த பாதுகாப்பு
நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
பணியாளர்கள் : அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தகுதி,
திறமையை சரியாக வெளிப்படுத்துவர். பணி இலக்கு சீராக அமையும். சக பணியாளர்
உதவி மனப்பான்மையுடன் நடந்துகொள்வர். குடும்ப வளர்ச்சிக்கு தேவையான பணியை
பொறுப்புடன் நிறைவேற்றி மனைவி, மக்களின் மகிழ்ச்சியை பெருக்குவார்கள். புத்திரரின்
கவனக்குறைவை சரிசெய்து அவர்களின் தகுதியை உயர்த்தவேண்டும். உடல்நலம் சீராக
தகுந்த ஓய்வுமுறையை பின்பற்றுவீர்கள். பணியிட மாற்றம், பதவி உயர்வு போன்றவை
பெறலாம். அதிக பயன் இல்லாத பொருட்களை நிர்ப்பந்தத்தின் பேரில் வாங்கக்கூடாது.
அரசியல்வாதிகள்: கடந்தகாலத்தில் எண்ணிய செயல்களை திட்டமுடன் நிறைவேற்றலாம்.
ஆதரவாளர்களை தக்கவைக்க விட்டுக் கொடுத்து செயல்படும் தன்மையை அதிகப்படுத்துவீர்கள்.
அதிகாரிகளிடம் நீங்கள் கொடுக்கும் கோரிக்கை பெருமளவு நிறைவேறும். புத்திரரை
அரசியல் பணிக்கு அளவுடன் பயன்படுத்துவது நல்லது. எதிரிகளை சமயோசிதமாக செயல்பட்டு
விலக்குவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைத்து வாழ்வில் வளம்
பெறுவதற்கான நம்பிக்கை ஏற்படும். புதிய வாகனம் வாங்க தகுந்த வாய்ப்பு
உருவாகி கைகூடும். சிலருக்கு பதவி, பொறுப்பு விரும்பிய வகையில் கிடைக்கும்.
விவசாயிகள்: பயிர் வளர்ப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். மகசூல் அதிகரிக்கும்.
கால்நடைகள் அபிவிருத்தியால் பணவரவு கூடும். நிலம் தொடர்பான ஆவணத்தை பிறரிடம்
தரக்கூடாது. மானிய பயிர்க்கடன் பெறுவதில் இருந்த தடையை நிவர்த்திசெய்வீர்கள்.
பரிகாரம்: லட்சுமி தாயாரை வழிபடுவதால் பொருள்வளமும் மனமகிழ்வும் அதிகரிக்கும்.
|
|
|
|
|
|
|
|
[C] Copyright
www.Htn-news.com
2004-2007
Contact
|