 |
|
HTN-NEWS.COM ...Da Tamil E-Magazine
Contact.....11-11-2007
Home |
|
|
|

|
புத்தாண்டு ராசிபலன் 2008

கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2.
வசீகர பார்வையும், இனிய பேச்சும் கொண்ட ரிஷபராசி அன்பர்களே!
புத்தாண்டில் பிரதான கிரகங்களான குரு ராசிக்கு எட்டிலும், சனி நான்கிலும்,
ராகு ஒன்பது, கேது மூன்று ஆகிய இடங்களிலும் உள்ளனர். கண்டச்சனி, அஷ்டமகுரு
என்ற வகையில் கிரகநிலை உள்ளது. இதில் கேது மட்டுமே
கூடுதல் நற்பலனை வழங்க உள்ளார். நியாயமான வழியில் நடப்பதால் மட்டுமே சிரமம்
அணுகாத நல்வாழ்வு பெறுவீர்கள். இயற்கையாகவே உங்களிடம் இனிமையாக பேசும்
திறமை உண்டு. அதை இவ்வாண்டு மிகக்கடுமையாக பின்பற்றுங்கள். ஏனெனில் பேச்சே
உங்கள் எதிரியாகப் போகிறது. இளைய சகோதரர்கள் ஆன்மிக வழிபாட்டு தலங்களுக்கு
அழைத்துச் செல்லும் நல்வாய்ப்பு ஏற்படும். வீடு, வாகன பராமரிப்புசெலவு செய்வதில்
தகுந்த திட்டமிடல் அவசியம். வாகன பயணத்தில் மிதவேகத்தை கண்டிப்பாக பின்பற்றவும்.
புத்திரர்கள் நல்லவிதமாக நடந்து பெற்றோருக்கு பெருமை சேர்ப்பர். புண்ணிய
பலன்கள் துணைநின்று உதவும். கடன், பிணி தொந்தரவு படிப்படியாக குறையும்.
எதிரிகள் உங்கள் பார்வையை விட்டு விலகிச்செல்லும் இனிய சூழ்நிலை உண்டு.
தம்பதியர் குடும்ப வளர்ச்சியை கவனத்தில் கொண்டு ஒற்றுமையாக செயல்பட தகுந்த
சூழ்நிலை நிறைந்திருக்கும். நண்பர்களுடன் புதிய செயல்திட்டங்களை உருவாக்கி
நிறைவேற்றுவீர்கள். தந்தைவழி சொத்து விவகாரங்களில் அனுகூல நன்மை பெற முயற்சி
எடுப்பீர்கள். தொழில் சார்ந்த வகையில் எதிர்வரும் குறுக்கீடுகளை சமயோசிதமாக
அணுகுவதால் மட்டுமே சரிசெய்யலாம். ஆதாய பணவரவு எதிர்பாராத வகையில் வந்து
சேரும்.
தொழிலதிபர்கள்: தொழிற்பயிற்சி நிறுவனம், நட்சத்திர ஓட்டல், லாட்ஜ், டிராவல்
ஏஜென்சி நடத்துபவர், ரியல் எஸ்டேட், மருந்து, மருத்துவ உபகரணம், அழகு சாதனப்
பொருட்கள், ரெடிமேட் ஆடைகள், சார்ந்த தொழிலதிபர்கள் அளவான மூலதனமிட்டால் நல்லது.
மற்றவர்கள் கூடுதல் உழைப்பைக் கொட்டினால் தான் தொழில் வளர்ச்சியை எதிர்பார்க்க
முடியும். நிதான குணத்துடன் செயல்படும் நபர்களை வாகனத்திற்கு டிரைவராக
பணியமர்த்த வேண்டும். தொழிலில் போட்டி, பொறாமை பெருமளவு குறையும். குடும்ப
உறுப்பினர்கள் ஆதரவுடன் நடந்துகொள்வர்.
வியாபாரிகள்: மின்சார உபகரணங்கள், மின்சாதனப் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள்,
பிஸ்கட், சாக்லேட்,
ஐஸ்கிரீம், பால் பொருட்கள், குளிர்பான வகைகள், உணவு தானியங்கள், மலர் வகைகள்,
நறுமண பொருட்கள், காலணி, பர்னிச்சர், கம்பளி, தோல் ஆடை, விவசாய கருவிகள்,
உரங்கள், விதைகள் உட்பட பல்வேறு பொருட்களை வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களிடம்
இதம்பதமாக பேசி வியாபாரத்தை தக்கவைக்கவும். தொழிலில் அளவான மூலதனம் போதும்.
வாகன பராமரிப்பில் அதிக கவனம் வேண்டும். புத்திரர் உதவிகரமாக நடந்துகொள்வர்.
வெளியூர் வியாபாரத் தொடர்பு சிறந்து மனமகிழ்வு பெறுவீர்கள்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணி இலக்கை நிறைவேற்ற தகுந்த திட்டமிடுதலுடன்
செயல்பட வேண்டும். பிறருக்காக எவ்வித பொறுப்பும் ஏற்கக்கூடாது. பணியிட மாற்றம்
பெற்றவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு நிர்வாகத்திடம் நற்பெயர் பெற
முயற்சிக்கவும். குடும்ப பெண்கள் கணவரின் பணவரவுக்கேற்ப குடும்ப செலவுகளை
ஒழுங்குபடுத்த வேண்டும். உறவினர்களுடன் இருக்கும் நல்லுறவை நயமுடன் பாதுகாக்கவும்.
தொழில், வியாபாரம் நடத்துபவர்கள் கூடுதல் உழைப்பால் புதிய சந்தைவாய்ப்பு
பெறுவர். பணம், சரக்கு பரிவர்த்தனையில் உரிய பாதுகாப்பு நடைமுறை அவசியம்.
விலைமதிப்புள்ள பொருள் இரவல் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது.
மாணவர்கள்: தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், ஓவியம், மாடலிங், சினிமா
தொழில்நுட்பம், வாகனம் சார்ந்த படிப்பு, சிவில் இன்ஜினியரிங், விவசாயம்,
மார்க்கெட்டிங், ஓட்டல் மேனேஜ்மென்ட் சார்ந்த துறைகளில் பயிற்சி பெறும்
மாணவர்களின் படிப்பு பின் தங்கும். மற்ற மாணவர்கள் இவர்களை விட இன்னும்
கூடுதல் அக்கறை செலுத்த வேண்டி வரும். அதே நேரம் அனுகூலமான ஆசிரியர், பயிற்சியாளர்
கிடைப்பதால், சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தினாலே போதுமானது. படிப்புக்கான
பணவசதி சீராக கிடைக்கும். சக மாணவர் உதவிகரமாக நடந்துகொள்வர். பெற்றோருடன்
கருத்து வேறுபாடு ஏற்படும். பொறுமை தேவை.
பணியாளர்கள் : அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் எதிர்வரும்
குறுக்கீடுகளை நிதானமுடன் அணுகி சரிசெய்வர். கூடுதல் உழைப்பால் பணி இலக்கு
நிறைவேறும். சக பணியாளர்களுடன் நட்புறவு வளரும். நவீன தொழில்நுட்பம், நிதி
நிறுவனம், மார்க்கெட்டிங், கல்வி நிறுவனம், விளம்பர நிறுவன பணியாளர்கள் நிர்வாகத்தின்
அதிருப்திக்கு உட்படாத வகையில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். கடினப்பணியில்
ஈடுபடுபவர்கள் பாதுகாப்பு விதிமுறையை கவனத்துடன் பின்பற்ற வேண்டும். தகுதிக்
கேற்ப பணி கிடைக்க தாமதமானால் கிடைக்கும் வாய்ப்புக்களை ஏற்றுப் பணி செய்வதால்
வாழ்வில் வளம் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள்: கடந்த காலத்தில் பெற்ற நற்பெயரை பாதுகாக்கும் வகையில்
கூடுதலாக சமூகப்பணி புரிய வேண்டும். பேச்சு அவசியம் என்றாலும் உருவாகும்
சூழ்நிலைகளின் தாக்கம் அறிந்து பேசுவது நலம். ஆன்மிக வழிபாடுகளில் நம்பிக்கை
வளரும். புத்திரர் உதவியாக செயல்படுவர். எதிரிகளின் தொல்லை பெருமளவு
குறையும். வெளியூர் பயணத்தில் இனிய அனுபவம் பெறுவீர்கள்.
விவசாயிகள்: விவசாயம் செழித்து அதிக மகசூல் கிடைக்கும். கால்நடைகள் தொல்லை
தரும். நிலம் தொடர்பான பிரச்னையில் அனுகூலத்தன்மை ஏற்படும். விவசாயக்கடன்களை
அதிகபட்சமாக அடைத்துவிடுவீர்கள். பணவசதி
திருப்திகரமாகும்.
பரிகாரம்: பெருமாளை வழிபடுவதால் துன்பம் விலகி சந்தோஷ வாழ்வு உருவாகும்..
|
|
|
|
|
|
|
|
[C] Copyright
www.Htn-news.com
2004-2007
Contact
|