HTN-NEWS.COM ...Da Tamil E-Magazine      Contact.....11-11-2007                 Home

 

 

 

 

 

 

 

 

 

 

புத்தாண்டு ராசிபலன் 2008

 

மகம், பூரம், உத்திரம் 1

மனதில் சரியென பட்டதை துணிவுடன் செயல்படுத்தும் சிம்மராசி அன்பர்களே!

புத்தாண்டில் பிரதான கிரகங்களான குரு ராசிக்கு ஐந்து, ராகு ஆறு, கேது பன்னிரெண்டு ஆகிய இடங்களில் உள்ளனர். சனி ராசியில் அமர்ந்து ஜென்மச்சனி என்ற நிலை பெறுகிறார். இருந்தாலும், மனதில் நல்ல பல திட்டங்கள் உருவாகும். ஆனால், அவற்றை செயல்படுத்துவதில் சிரமம் உருவாகி விலகும். நியாய தர்மத்தை பின்பற்றி நடந்தால் தான் பிரச்னைகள் குறையும். சமூகப்பணியில் மிதமான ஈடுபாடு கொள்வீர்கள். வீடு, வாகன வகையில் மனமகிழ்ச்சி தரும் நற்பலன் உண்டு. புத்திரர்கள் நற்குண, நற்செய்கையால் தமது திறமையை வளர்த்துக்கொள்வர். புதிய சொத்து வாங்க நன்னிலை உண்டு. இஷ்ட குல தெய்வ அருள் பரிபூரணமாக துணை நின்று உதவும். எதிரிகளை சமயோசிதமாக முறியடித்து வெற்றி பெறுவீர்கள். நிலுவை பணக்கடன் சரிசெய்வீர்கள். தம்பதியர் ஒற்றுமை சீராகும். மனைவியின் உடல் நலம்பெற தகுந்த சிகிச்சை உதவும். நண்பர்களுடன் தேவையற்ற விவாதங்களில் ஈடுபடக்கூடாது. உங்கள் குடும்ப நலன் விரும்பும் முக்கிய உறவினரால் உதவி கிடைக்கப்பெறுவீர்கள்.தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சிபெற உருவாகும் சந்தர்ப்பங்களை தவறாமல் பயன்படுத்த வேண்டும். இதனால் முன்னேற்றம் உண்டு. மூத்த சகோதரர் அனுகூலமாக செயல்படுவர். ஆன்மிக சுற்றுலா பயணம் திட்டமிட்ட வகையில் இனிதாக நிறைவேறும். திருமண முயற்சி செய்பவர்களுக்கு அனுகூல பலன் உண்டு.

தொழிலதிபர்கள்: டெக்ஸ்டைல்ஸ், காகிதம், ரப்பர், நவீன வசதி நிறைந்த ஆஸ்பத்திரி, ஓட்டல், லாட்ஜ், டிராவல்ஸ், பால்பண்ணை, பருத்தி ஆலை, குளிர்சாதன பொருட்கள், கேமரா, வாஷிங்மெஷின், இசைக்கருவிகள் உற்பத்தி செய்யும்

தொழிலதிபர்கள் மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். மற்றவர்கள் ஓரளவு தொழில்வளர்ச்சி காண்பர். பணவரவு சீராக இருக்கும். சமூக பதவி, பொறுப்பு ஏற்பதில் பரிசீலனை அவசியம். புதிய வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறும். புத்திரர்கள் தொழில் வளர உறுதுணையாக செயல்படுவர். போட்டியாளர் எண்ணிக்கை குறையும்.

வியாபாரிகள்: பால்பொருட்கள், அழகு சாதனம், பேக்கரி, ஐஸ்கிரீம், கம்ப்யூட்டர் சாதனங்கள், ரெடிமேட் ஆடை, ஜவுளி, எலக்ட்ரிக்கல் சாதனங்கள், சூட்கேஸ், பெயின்ட், வாசனைத் தைலம், கவரிங் நகை, நவீன பர்னிச்சர், பூஜை பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், பட்டாசு, தண்ணீர் சார்ந்த பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் வியாபார வாய்ப்பு அதிகம் பெறுவர். மற்றவர்களில் சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும். சரக்கு வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். இளம் வியாபாரிகளுக்கு திருமண முயற்சி நற்பலனைத்தரும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் கூடுதல் தகுதி, திறமையை வளர்த்து பணி இலக்கை நிறைவேற்றுவர். சக பணியாளர்கள் உறுதுணையாக செயல்படுவர். பணச்செலவில் சிக்கனம் நல்லது. குடும்ப பெண்கள் கணவரின் செயல்கள் சிறப்புபெற தகுந்த ஆலோசனை வழங்குவர். குடும்பத்தில் மகிழ்ச்சி தழைக்கும். புத்திர வகையில் அனுகூல பலன் உண்டு. தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் கணவரின் உதவியால் தொழில் வளர்ச்சியில் புதிய இலக்கை அடைவர். தகுதிக்கேற்ப பணக்கடன் பெறும் நிலை இருக்கும். இளம்பெண்களுக்கு திருமண முயற்சி நிறைவேறும்.

மாணவர்கள்: எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், ஓட்டல் மேனேஜ்மென்ட், இசை, ஓவியம், சினிமாத்துறை, மருத்துவம், இன்ஜினியரிங், விவசாயம், போட்டோ, வீடியோ, ஆட்டோமொபைல்ஸ் சார்ந்த பயிற்சி பெறும் மாணவர்கள் ஆர்வத்துடன் செயல்பட்டு நல்ல தரதேர்ச்சி பெறுவர். மற்றவர்கள் ஓரளவு படித்து தேர்ச்சி பெறுவர். படிப்புக்கான பணச்செலவுக்கு தட்டுப்பாடு ஏற்படும். ஆன்மிக விஷயங்களில் ஆர்வம் வளரும். சக மாணவர்கள் படிப்பில் உதவியாக நடந்துகொள்வர். பெற்றோரிடம் பாசம் அதிகரிக்கும்.

பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பல குறுக்கீடுகளைச் சந்திப்பர். இருப்பினும் கடும் முயற்சியால் சரிசெய்து பணி இலக்கை நிறைவேற்றவர். சக பணியாளர்களுடன் சுமுக நட்புறவு இருக்கும். தோல் பொருட்கள், தொழில்நுட்ப சாதனங்கள், வாசனை திரவியம், ரெடிமேட் ஆடை வடிவமைப்பு, கலை, அழகுப் பொருட்கள் மற்றும் நுண்ணிய வேலைப்பாடுடைய பொருட்களை உருவாக்குபவர்கள் ஒருமுகத்தன்மையுடன் செயல்பட்டு, பொருளின் தரம் குறையாமல் பார்த்துக் கொள்வர். நண்பர்களிடம் பண பிரச்னையில் அதிருப்தி வராத வகையில் செயல்படவும். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் வளரும். உடல் நலம்பெற நற்பழக்கங்களை பின்பற்றுவீர்கள்.

அரசியல்வாதிகள்: கடந்தகாலங்களில் பெற்ற நற்பெயரை துணையாக வைத்து செயல்பட வேண்டும். உங்கள் சமூக அந்தஸ்தை உயர்த்த ஆதரவாளர்களில் சிலர் முன்முயற்சி செய்வர். நற்பணிகளில் வரும் குறுக்கீடுகளை சமயோசிதமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். புத்திரரும் தகுதி, திறமையை வளர்த்து உங்களுக்கும் உதவியாக இருப்பர். எதிரிகள் இடம் மாறிப்போகிற நன்னிலை உண்டு. குடும்ப வளர்ச்சிப்பணி எளிதாக நிறைவேறும். வெளியூர் பயணத்தில் ஆன்மிக அருளாளரின் நட்பு கிடைக்கும்.

விவசாயிகள்: பயிர் வளர்ப்பிற்கு தேவையான அனைத்து வசதியும் கிடைக்கும். மகசூல் அதிகரிப்பால் கூடுதல் பணவரவு ஏற்படும். புதிய சொத்து வாங்குவதற்கான எண்ணம் கைகூடும். குடும்பத்தில் சுபமங்கல நிகழ்வு உண்டு.

பரிகாரம்: தெட்சிணாமூர்த்தி சன்னதியில் உரிய வழிபாடு நடத்துவதால் அதிக நன்மை பெறுவீர்கள்.




 

 
 

                                              [C] Copyright www.Htn-news.com 2004-2007         Contact

::Welcome to Globe7