 |
|
HTN-NEWS.COM ...Da Tamil E-Magazine
Contact.....11-11-2007
Home |
|
|
|

|
புத்தாண்டு ராசிபலன் 2008

மூலம், பூராடம், உத்திராடம் 1
தன்னடக்கத்துடன் செயல்படும் தனுசு ராசிஅன்பர்களே!
புத்தாண்டில் பிரதான கிரகங்களான குரு ராசியிலும், ராசிக்கு ஒன்பதில் சனி,
இரண்டில் ராகு, எட்டில் கேதுவும் அமர்ந்துள்ளனர். மனதில் புது உத்வேகத்துடன்
செயல்படுவீர்கள். நல்லவர்களின் உதவியும், ஆசியும் பலமாக துணைநிற்கும்.
சமயோசிதமாக பேசி சமூகத்தில் நற்பெயர் பெறுவீர்கள். குடும்பத்தில் எவருடனும்
வாக்குவாதம் கூடாது. இளைய சகோதரர்களின் வாழ்க்கை வளம்பெற தனிக்கவனம் செலுத்துவீர்கள்.வீடு,
வாகன வகையில் அபிவிருத்தி, பராமரிப்பு பணச்செலவு மனம் விரும்பிய வகையில்
செய்வீர்கள். புத்திரர்கள் தமது தகுதி, திறமையை வளர்த்து பெற்றோருக்கு
கூடுதல் பெருமை தேடித்தருவர். குலதெய்வ வழிபாட்டினால் நன்மை ஏற்படும்.
எதிரிகளால் இருந்த தொந்தரவு குறையும். கடன் குறைந்து மனநிம்மதி பெறுவீர்கள்.
கணவன் மனைவி ஒற்றுமை பலம் பெறும். நன்னடத்தை உள்ள புதிய நண்பர்கள்
அறிமுகமாகி உறுதுணை புரிவர். வாகன பயணங்களில் மிதவேகம் பின்பற்றுவது
அவசியம். தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பை பயன்படுத்தி
முன்னேற்றம் காண்பீர்கள். ஆதாய பணவரவை பெறுவதில் இருக்கும் தடையை சரிசெய்வீர்கள்.
விலைமதிப்புள்ள பொருளை கவனமுடன் பாதுகாக்கவும்.
தொழிலதிபர்கள்: காகிதம், ரியல் எஸ்டேட், பைனான்ஸ் ஏஜென்சி, பொறியியல் கல்லுõரி,
கம்ப்யூட்டர், மொபைல், விளையாட்டு சாதனங்கள், உடற்பயிற்சி கருவிகள்,
ரெடிமேட் ஆடைகள், எடைபார்க்கும் கருவி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள்
தொழிலில் இருந்த மந்தநிலை விலகக்காண்பர். நம்பிக்கையுடன் செயல்பட்டு தெய்வ
அருளால் தொழில் வளர்ச்சி காண்பர். மற்றவர்களுக்கு பணவரவு தொழில் மற்றும்
வாழ்க்கைத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும். சமூக பொறுப்பை ஏற்பதில்
கவனம் வேண்டும். மனைவியின் யோகபலன் துணைநிற்கும்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, நோட்டு புத்தகம், புத்தகங்கள், படங்கள், மளிகை,
மாவு, பீங்கான் பொருட்கள், சென்ட், காலணி, கம்ப்யூட்டர், சி.டி.பிளேயர்,
உடற்பயிற்சி கருவிகள், கட்டட, கட்டுமான பொருட்கள், ரேடியோ ஆகியவற்றை
வியாபாரம் செய்பவர்கள் நுணுக்கத்துடன் செயல்பட்டு வியாபார வளர்ச்சி காண்பர்.
மற்றவர்கள் இவர்களை விட அதிக லாபம் பெறுவதுடன், புதிய கிளை துவங்கும் முயற்சியும்
நிறைவேறும். போட்டி குறையும். வெளியூர் பயணம் கூடுதலாக ஏற்படும். குடும்ப
உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவர்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் லட்சிய மனதுடன் செயல்பட்டு பணி இலக்கை திறம்பட
நிறைவேற்றுவர். சக பணியாளர்களுடன் நட்புறவு சீராக இருக்கும். பண விவகாரத்தில்
பொறுப்பேற்கக்கூடாது. குடும்பப் பெண்கள்
கணவரின் நல் அன்பை பெற்று இனிய வாழ்வுநலம் பேணுவர். புத்திரர்கள் பெருமை
தேடித்தரும் விதமாக நடந்துகொள்வர். கணவரின் உடல்நலத்தில் தகுந்த கவனமும்,
தெய்வவழிபாடும் அவசியம். உறவினர்களால் உதவி உண்டு. தொழில், வியாபாரம் நடத்தும்
பெண்கள் கணவரின் ஊக்கம், உதவியால் தொழில்வளர்ச்சி காண்பர். சரக்கு பரிவர்த்தனையில்
கூடுதல் பாதுகாப்பு நடைமுறை அவசியம். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
மாணவர்கள்: இதழியல், ஜோதிடம், வேதசாஸ்திர படிப்பு, இசை, நடனம், நாட்டியம்,
ஓவியம், சிற்பக்கலை, கணிதம், வங்கியியல், மருத்துவம், அழகுக்கலை, விவசாயம்,
சட்டம், விளம்பர மாடலிங், இன்ஜினியரிங், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில்
பயிற்சி பெறும் மாணவர்கள் ஒன்றுபட்ட மனதுடன் படித்து நல்ல தரதேர்ச்சி
பெறுவர். மற்றவர்களும் ஓரளவு படிப்பர் என்றாலும், படிப்புக்கான பணத்திற்கு
தட்டுப்பாடு ஏற்டும் என்பதால் கவனம் சிதற வாய்ப்பிருக்கிறது, திட்டமிட்டு
செயல்படவும். நண்பர்கள் படிப்பில் உறுதுணையாக நடந்துகொள்வர். ஆசிரியரிடம்
நற்பெயர்
பெறுவீர்கள். விளையாட்டு பயிற்சியின்போது தகுந்த பாதுகாப்புமுறை பின்பற்ற
வேண்டும்.
பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் உத்வேகத்துடன்
செயல்பட்டு பணி இலக்கை பூர்த்தி செய்வர். சக பணியாளர்களுடன் நல்லன்பு வளரும்.
இனிய வார்த்தை பேசுவதால் கூடுதல் நற்பலன் பெறலாம். வீட்டுக்கு தேவையான
அபிவிருத்தி பணிகளை திறம்பட மேற்கொள்வீர்கள். பெரியவர்களின் ஆலோசனையும்,
உதவியும் உங்கள் வாழ்வு வளம்பெற துணைநிற்கும்.
அரசியல்வாதிகள்: கடந்த காலத்தில் பெற்ற நற்பெயரை பயன்படுத்தி புதிய செயல்திட்டம்
உருவாக்குவீர்கள்.
ஆதரவாளர்கள் உதவிகரமாக செயல்படுவர். புகழ் பெறுவதற்காக அதிக பணச்செலவு
கூடாது. நியாயமான செயல்பாடுகளால் நல்ல பதவி, பொறுப்பு கிடைக்கும். புத்திரர்
தமது தகுதி, திறமையை வளர்த்து உங்களுக்கும் உறுதுணையாக செயல்படுவர். மனைவி
வழி உறவினரால் நன்மை உண்டு. எதிரிகளின் செயல்பாடு இடம்மாறிப்போகும். வாகன
பயணத்தில் மிதவேகம் நல்லது.
விவசாயிகள்: கூடுதல் பணம் தரும் பயிர்களை தேர்வு செய்து விவசாயப்பணிகளை மேற்
கொள்வீர்கள். மகசூல் அதிகரித்து பணவரவு கூடும். கால்நடை வளர்ப்பிலும்,
பராமரிப்பிலும் நிதானம் வேண்டும். நிலம் தொடர்பான பிரச்னையில் சுமூக தீர்வு
பெறுவீர்கள். குடும்பத்தில் சுபமங்கல நிகழ்ச்சி உண்டு.
பரிகாரம்: துர்க்கை அம்மனுக்கு ராகுகால பூஜை செய்வதால் எதிரிகள் விலகுவர்.
|
|
|
|
|
|
|
|
[C] Copyright
www.Htn-news.com
2004-2007
Contact
|