HTN-NEWS.COM ...Da Tamil E-Magazine      Contact.....11-11-2007                 Home

 

 

 

 

 

 

 

 

 

 

புத்தாண்டு ராசிபலன் 2008

 

சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3

உலக நடப்புகளை அறிவதில் ஆர்வமுள்ள துலாம் ராசி அன்பர்களே!

புத்தாண்டில் பிரதான கிரகங்களான குரு, ராசிக்கு மூன்றிலும், சனி பதினொன்றிலும், ராகு நான்கு, கேது பத்து ஆகிய இடங்களிலும் அமர்ந்துள்ளனர். நியாய தர்மத்தைப் பின்பற்றி நடக்க ஆர்வம் வளரும். எதிலும் சூழ்நிலையை உணர்ந்து நடந்து கொள்வதால் பல நலமும் பெறுவீர்கள். பணவரவை பெறுவதற்கு கூடுதல் உழைப்பு அவசியம்.

சமூகத்தில் அந்தஸ்து பெறுவதற்கு உரிய சந்தர்ப்பம் பலவகையிலும் அமையும். இளைய சகோதரர் சொல்லும் வார்த்தைகூட உங்களின் வாழ்வை வளப்படுத்த உதவும். வீடு, மனை, வாகன வகையில், தற்போது இருக்கும் நிலையை தற்காத்துக் கொள்வது சிறப்பைத்தரும். புத்திரரின் நற்செயல்களை ஊக்கப்படுத்துவதால் அவர்களின் திறமை வெளி உலகுக்கு தெரியவரும். பூர்வ சொத்தில் வருமானம் பெறுபவர்களுக்கு வளர்ச்சிநிலை அதிகரிக்கும். எதிரிகளிடம் சமயோசிதமாக செயல்பட்டு சிரமம் தவிர்ப்பீர்கள். நிலுவை பணக்கடன் சரிசெய்ய உரிய சந்தர்ப்பம் உருவாகி உதவும்.

தம்பதியர் ஒற்றுமை சிறந்து குடும்ப வளர்ச்சிக்கு துணைநிற்கும். தந்தைவழி உறவினர்கள் நல் ஆலோசனை வழங்கி குடும்பம் நன்னிலை பெறபாடுபடுவர். வீட்டு சாதனப் பொருட்கள் எதிர்பார்த்த வகையில் வாங்கலாம். தொழில் சார்ந்த வகையில் உழைப்பின் தன்மையும், தெய்வ அருளும் சேர்ந்து வளர்ச்சியைத்தரும். அறிமுகமான பெண்களிடம் அனுகூல உதவி கிடைக்கும்.


தொழிலதிபர்கள்: ஏர்கூலர், வாட்டர் ஹீட்டர், குளிர்சாதனப் பெட்டிகள், பம்ப்செட் மோட்டார், மினரல் வாட்டர், குளிர்பான வகைகள், ஓட்டல், லாட்ஜ், அரிசி ஆலை, வாசனை திரவியங்கள், தைலவகை, குடிநீர் குழாய், கண்

கண்ணாடிகள், படகுகள், வலைகள் உற்பத்தி செய்பவர்கள் தமது நிர்வாகத் திறமையாலும் தெய்வ அருளாலும் புதிய ஒப்பந்தம் கிடைக்கப்பெறுவர். மற்றவர்ளுக்கு சுமாரான முன்னேற்றமே என்றாலும், பணவரவு சீராக இருக்கும். சமூக பொறுப்பு ஏற்பதில் கவனம் வேண்டும். வாகன பயணத்தில் மிதவேகம் நல்லது. புத்திரரை நிர்வாகத்திற்கு கொண்டுவர விரும்புபவர்கள் உரிய பயிற்சி அளிக்கலாம்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, பைப், தண்ணீர் தொட்டிகள், ரெயின்கோட், குடை, வாஷிங் மெஷின், சோப்பு, பவுடர், சமையல் எண்ணெய், பால் பொருட்கள், பழச்சாறு, ஜாம் வியாபாரம் செய்பவர்கள் அளவான மூலதனம் இடுவதே பாதுகாப்பாக இருக்கும். மேலும் கூடுதலாக உழைத்தால் தான் வியாபாரத்தை நல்ல நிலையில் வைத்திருக்க

முடியும். மற்றவர்கள் ஓரளவு லாபம் காண்பர். சக தொழில் சார்ந்த எவருக்கும் சரக்கு கொள்முதல் இடங்களில் எவ்வித பொறுப்பும் ஏற்கக்கூடாது. சரக்கு வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனம் அவசியம். குடும்ப உறுப்பினர்கள் உதவிகரமாக நடந்துகொள்வர்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் ஒருமுகத்தன்மையுடன் செயல்படுவதால் பணி இலக்கை பெருமளவு எட்டமுடியும். சக பணியாளர்கள் உதவியாக செயல்படுவர். செலவில் சிக்கன நடைமுறை நல்லது. குடும்ப பெண்கள் கணவரின் நல்அன்பை பெற்று சிறந்த வாழ்வுநலம் பேணுவர். புத்திரரின் செயலை ஊக்கப்படுத்தி வளர்ச்சிக்கு தகுந்த உதவி செய்வீர்கள். உறவினர் இல்ல மங்கல நிகழ்ச்சிகளில் ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் கணவரின் உதவி, ஆலோசனையால் புதிய ஆர்டர் பெறுவர். பணவரவு சீராக இருக்கும்.

மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், எலக்ட்ரானிக்ஸ், ஏரோநாட்டிக்கல், பிரிண்டிங் டெக்னாலஜி, கேட்டரிங், அழகுக்கலை, டெக்ஸ்டைல் டெக்னாலஜி ஆகிய துறையில் பயிற்சி பெறும் மாணவர்கள் கூடுதல்

கவனத்துடன் படிப்பதால் மட்டுமே நல்ல தரதேர்ச்சி பெறமுடியும். மற்றவர்கள் ஓரளவு நன்றாகப் படிப்பர். சக மாணவர்கள் உறுதுணையாக நடந்துகொள்வர். படிப்புக்கான பணச்செலவில் சிக்கனம் நல்லது. தாய் கண்டிப்புடனும், தந்தை அனுசரணையுடனும் செயல்படுவர். ஆசிரியர் உங்கள் நலனில் அக்கறையுடன் நடந்துகொள்வர்.

பணியாளர்கள்: அரசு மற்றம் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தனக்கு வழங்கப்பட்ட இலக்கை நிறைவேற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சக பணியாளர்கள் நல் அன்பு பாராட்டுவர். விசைத்தறி, சாயப்பட்டறை, பிரிண்டிங் டெக்னாலஜி, பொது சுகாதாரம், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட துறைகளில் உள்ளவர்கள் சோதனைகளைச் சந்திக்கலாம். பணவரவுக்கேற்ப செலவை ஒழுங்கு செய்வது நலம். சொத்து ஆவணம் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் அவசியம். தகுதிக்கேற்ப பணக்கடன் பெறும் நிலை உண்டு.

அரசியல்வாதிகள்: கடந்த காலத்தில் பெற்ற நற்பெயரை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும். சமூகப்பணியில் நபர்களின் தராதரம் அறிந்து செயல்படுவதால் மட்டுமே நன்மை பெறலாம். வாகன பயணத்தில் மிதவேகம் அவசியம். புத்திரரின் செயல்திறனை ஊக்கப்படுத்துவீர்கள். எதிரிகளால் ஏற்படும் தொந்தரவை முன்யோசனையுடன் சரிசெய்வீர்கள். மனைவி வழி உறவினரால் நன்மை உண்டு. ஆதரவாளர் எண்ணத்தை அறிந்து இயன்ற வகையில் நிறைவேற்றுவதால் நன்மை கூடும். வெளியூர் பயணத்தில் ஆன்மிக வழிபாடும் நல்லவர்களின் அறிமுகமும் கிடைக்கும்.

விவசாயிகள்: சுறுசுறுப்பாக செயல்படுவதால் மட்டுமே விவசாயப்பணிகள் நேர்த்தியாகும். கால்நடைகள் பராமரிப்பில்

கூடுதல் கவனம் வேண்டும். கூடுதலாக கால்நடைகளை வாங்க விரும்புபவர்கள் சிறிது காலம் தள்ளிப்போடுவது நல்லது. நிலத்தின் பெயரால் எவ்வித கடனும் பெறக்கூடாது.

பரிகாரம்: நாகராஜா கோயிலில் வழிபாடு செய்வதால் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.




 

 
 

                                              [C] Copyright www.Htn-news.com 2004-2007         Contact

::Welcome to Globe7