HTN-NEWS.COM ...Da Tamil E-Magazine      Contact.....11-11-2007                 Home

 

 

 

 

 

 

 

 

 

 

புத்தாண்டு ராசிபலன் 2008

 

விசாகம் 4, அனுஷம், கேட்டை

உயர்வான எண்ணங்களைக் கொண்ட விருச்சிகராசி அன்பர்களே!

புத்தாண்டில் பிரதான கிரகங்களான குரு ராசிக்கு இரண்டிலும், சனி பத்து, ராகு மூன்று, கேது ஒன்பது ஆகிய இடங்களிலும் அமர்ந்துள்ளனர். மனதில் உருவாக்கிய திட்டங்களை தகுந்த முன்னேற்பாட்டுடன் செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். உங்கள் பேச்சுக்கு கூடுதல் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாகும். சமூகத்தில் அந்தஸ்துள்ள உயரிய பதவி, பொறுப்பு பெறுவீர்கள். வீடு, வாகன வகையில் இருக்கும் வசதிகளை உள்ள நிலையிலேயே பயன்படுத்திக் கொள்வதால் மிகுந்த சிறப்பு உண்டு. புத்திரர்களின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புத்திரரால் குடும்பத்திற்கு பெருமை சேரும். கடந்த காலங்களில் எதிரித் தனமாக நடந்தவர்கள் கூட நட்புறவு

பாராட்டுவர். அவர்களது குடும்ப நிகழ்ச்சிகளில் உங்களுக்கு உரிய கவுரவம் தருவர். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஒருவருக்கொருவர் கருத்து பரிமாற்றம் செய்துகொள்வது நல்லது. நண்பர்களிடம் பணம் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் தகுதிக்கு மீறிய பொறுப்பேற்க கூடாது. தந்தைவழி உறவினர்கள் குலதெய்வ வழிபாடுகளை நடத்த விரும்பி அழைத்துச்செல்வர்.தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு அவசியம். ஆதாய பணவரவு திருப்திகரமாக கிடைக்கும். அதற்கேற்ப சுபநிகழ்ச்சிகளை குடும்பத்தில் திட்டமிட்ட வகையில் நடத்துவீர்கள். திருமண முயற்சி செய்பவர்களுக்கு சுபமங்கல நிகழ்வு ஏற்படும்.


தொழிலதிபர்கள்: கண் ஆஸ்பத்திரி, மர அறுவை மில், தீப்பெட்டி, பட்டாசு, வாகன உற்பத்தி, டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு, டெக்ஸ்டைல்ஸ், லாட்ஜ், மின்சார உபகரணங்கள், சூரிய அடுப்பு, காகிதம் சார்ந்த வகையிலுள்ள தொழிலதிபர்கள் தொழிலில் வளர்ச்சி பெறுவர். மற்றவர்களுக்கும் பணவரவு அபரிமிதமாக இருக்கும். சமூக அந்தஸ்து உள்ள பதவி, பொறுப்பு பெறலாம். சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வாகனத்தை மாற்றும் எண்ணம் இருந்தால், ஆண்டின் மத்தி வரை பொறுத்துக் கொள்ளவும். மனைவியின் பெயரில் சொத்து வாங்கும் யோகம் உண்டு.

வியாபாரிகள்: மின்சாதனங்கள், ஜவுளி, பர்னிச்சர், தோல், பாத்திரங்கள், அழகு சாதனப் பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள், காப்பி, தேயிலை, மிளகு, ஏலக்காய், காய்கறி, பூ, காகிதம், கடிகாரம், மொபைல் வியாபாரம் செய்பவர்கள் அனுசரணை மிகுந்த வாடிக்கையாளர் பெற்று வளர்ச்சி காண்பர். மற்றவர்களுக்கும் பணவரவு அதிகரிக்கும். சமூக அந்தஸ்து உயரும். வாகன பராமரிப்பு செலவு கூடுதலாகும். உடல்நல ஆரோக்கியம் பலம்பெறும். வியாபார போட்டி பெருமளவு குறையும். இளம் வியாபாரிகளுக்கு திருமணம் கைகூடும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் உற்சாகத்துடன் செயல்புரிந்து பணி இலக்கை எளிதாக நிறைவேற்றுவர். குடும்ப வளர்ச்சி கடன் விரும்பியவாறு கிடைக்கும். சக பணியாளர்களுடன் சுமுக நட்புறவு பேணுவது நல்லது. குடும்ப பெண்கள், கணவரின் எண்ணத்திற் கேற்ப நடப்பதால் குடும்ப நலம் சிறக்கும். வாழ்க்கைக்கு போதுமான பணவசதி உண்டு. புத்திரரின் திறமையை கண்டறிந்து ஊக்கப்படுத்தி நன்னிலை பெற வைப்பீர்கள். தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணி மேற்கொள்வர். தொழில்வளம் சிறந்து பணவரவு அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். திருமண முயற்சி கைகூடும்.

மாணவர்கள்: தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், கல்வியியல், கேட்டரிங், கம்ப்யூட்டர், ஆடை வடிவமைப்பு, விவசாயம், மார்க்கெட்டிங், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட துறையில் பயிற்சி பெறும் மாணவர்கள் திறமையுடன் படித்து படிப்பில் நன்னிலை பெறுவர். படிப்புக்கான பணவசதி திருப்திகரமாக கிடைக்கும். சக மாணவர்களைப் பற்றி குறைத்துப் பேசுவதை தவிர்க்க வேண்டும். வாகன பயணத்தில் மிதவேகம் நல்லது.

பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தகுதி, திறமையை சரியாக பயன்படுத்தி பணியில் திருப்திகரமான நிலையை பெறுவர். சக பணியாளர்களிடம் பொது விவாதம் கூடாது. கனரக வாகனம், தொழிற்சாலைகள், மின்துறை, வனத்துறை, சினிமா, உணவுப்பொருள் உற்பத்தி ஆகிய துறைகளில் பணி செய்பவர்கள் சிறப்பாக செயல்பட்டு சலுகையும் பாராட்டும் பெறுவர். பணவரவு திருப்திகரமாகும். சமூக அந்தஸ்து உயரும். குடும்ப உறுப்பினர்களிடம் இதம்பதமாக நடந்துகொள்ளவும்.

அரசியல்வாதிகள்: சிறந்த புகழ்பெறும் நோக்கத்தில் புதிய செயல்திட்டம் உருவாக்குவீர்கள். நிறைவான பணவசதி இருக்கும். ஆதரவாளர் உங்கள் மீது கூடுதல் நம்பிக்கை கொள்வர். புத்திரர்கள் உறுதுணையாக செயல்படுவர்.

புதிய பதவிப் பொறுப்பை பெறுவீர்கள். குடும்ப பெரியவர்களின் கருத்துக்களை முக்கிய சமயங்களில் கேட்பது நல்லது.

எதிரிகளின் கெடுசெயல் முடங்கிப்போகும். ஆன்மிக வழிபாட்டை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் பயணத்தின்போது பொருள் பாதுகாப்பில் தகுந்த கவனம் அவசியம்.

விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான அனைத்து வசதியும் கிடைக்கப் பெறுவார்கள். கூடுதல் மகசூல் கிடைத்து பணவரவு அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பில் அபிவிருத்தி ஏற்படும். நிலம் தொடர்பான வழக்கு விவகாரங்களில் அனுகூல தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் சுபமங்கல நிகழ்ச்சி இனிதாக நிறைவேறும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் சகல வளமும் பெறலாம்.


 

 
 

                                              [C] Copyright www.Htn-news.com 2004-2007         Contact

::Welcome to Globe7